OG Sierra vs New Sierra: டாட நிறுவனத்தின் புதிய சியாரா காரின் இன்ஜின் ஆனது, ஒரிஜினல் சியாராவிலிருந்து எப்படி வேறுபடுகிறது? என்ற ஒப்பீட்டை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

ஒஜி சியாரா Vs புதிய சியாரா:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 1990-களிலேயே மிகவும் பிரபலமான எஸ்யுவி ஆக டாடாவின் சியாரா திகழ்ந்தது. இந்த ஒரிஜினல் அல்லது ஒஜி சியாராவானது, கட்டுமஸ்தான கட்டமைப்பு மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த டீசல் இன்ஜினுக்காக வாடிக்கையாளர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, டாடா நிறுவனத்தின் புதிய சியாரா கம்பேக்கிற்கு தயாராகி உள்ளது. இதில் டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள், நவீன தொழில்நுட்பம், மேம்பட்ட பயண அனுபவத்திற்கான வசதிகள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒரிஜினல் சியாராவின் இன்ஜினிலிருந்து புதிய சியாராவின் இன்ஜின் எவ்வளவு மேம்பட்டுள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

ஒஜி சியாரா - எளிய டீசல் இன்ஜின்

ஒரிஜினல் சியாரா 1991ம் ஆண்டு சந்தைப்படுத்தப்பட்டதும், அதன் வலுவான மற்றும் பயன்பாட்டு வடிவமைப்பிற்காக மிகவும் பிரபலமடைந்தது. டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்பட்டன. முதல் எடிஷனில் 63hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 2.0 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 91hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷனுடனும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இரண்டிலும் 4 சிலிண்டர் லே-அவுட் பயன்படுத்தப்பட்டு 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டது. இன்றைய நிலைக்கு ஒப்பிட்டால், மேற்குறிப்பிடப்பட்ட இன்ஜின்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை அல்ல. ஆனால், மிகவும் நம்பகத்தன்மை கொண்டிருந்தன. நல்ல இழுவை திறனை கொண்டு, அந்த கால கட்டத்தில் ஓட்டுவதற்கும் ஏற்றதாக இருந்தது.

கூடுதல் விவரங்களுக்கு: TATA Sierra: தட்டி தூக்கப்போகும் டாடா சியாரா! க்ரெட்டா, செல்டோஸ்க்கு சவால்.. என்னென்ன அம்சங்கள் ?

புதிய டாடா சியாரா - பெட்ரோல், டீசல்

புதிய சியாராவானது நவம்பர் 25ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது ப்ராண்டின் எஸ்யுவி லைன் - அப்பில் மாற்றத்தை குறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரிஜினல் சியாராவை போன்று இல்லாமல், புதிய எடிஷனானது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் வேரியண்ட்கள் வழங்கப்பட உள்ளன. இது இன்ஜின் அடிப்படையிலான சியாரா காரை தேர்வு செய்ய விரும்புவோர், கூடுதல் ஆப்ஷன்களை பெறுவதற்கு ஏற்ற மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. 

பெட்ரோல் இன்ஜின் என்பது இந்த காருக்கு முற்றிலும் புதிது. அதிலும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக வலுவான செயல்திறனை எதிர்பார்ப்பவர்களுக்காக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இயந்திர வசதியும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் டீசல் ஆப்ஷனை மட்டுமே கொண்டிருந்த ஒரிஜினல் சியாராவை காட்டிலும், புதிய பெட்ரோல் வெர்ஷன் சிறந்த செயல்திறனை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

புதிய டாடா சியாரா - புதிய டீசல் இன்ஜின் எப்படி?

தனது பாரம்பரியமிக்க அடையாளமாக டீசல் இன்ஜின் ஆப்ஷனையும் சியாராவில் டாடா தொடர்கிறது. அதேநேரம், பழைய வெர்ஷனில் இருந்ததை காட்டிலும் மிகவும் மேம்பட்டதாக, 118 hp மற்றும் 260 Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய  1.5 லிட்டர் ஆப்ஷனையும், வலுவான செயல்திறனை எதிர்பார்ப்பவர்களுக்காக 170 hp மற்றும் 350 Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 2.0 லிட்டர் க்ரையோடெக் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டிலுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒஜி சியாரா Vs புதிய சியாரா - இன்ஜின் வித்தியாசம் என்ன?

இன்ஜினில் கிடைக்கும் கூடுதல் ஆப்ஷன்கள் என்பது இரண்டு சியாராக்களிலும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் ஆகும். பழைய சியாராவில் அதிகபட்சமாக 91hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய ஒரே ஒரு டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே இருந்தது. ஆனால் புதிய வெர்ஷனில் 170hp வரை இந்த திறன் நீள்கிறது. இதன் மூலம் புதிய சியாராவானது அதிக சக்தி வாய்ந்ததாகவும், செயல்திறன் கொண்டதாகவும்,  நவீன நெடுஞ்சாலை மற்றும் நகர ஓட்டுதலுக்கு ஏற்றதாகவும் ஆக்குகிறது. பழைய இன்ஜின் தொழில்நுட்பம் எளிமையானது மற்றும் இயந்திரத்தனமானது, அதே நேரத்தில் புதிய இன்ஜின்கள் மேம்பட்ட டர்போசார்ஜிங், சிறந்த உமிழ்வு கட்டுப்பாடு மற்றும் மென்மையான கியர்பாக்ஸைப் பயன்படுத்துகின்றன.

புதிய சியாரா - விலை, வெளியீடு

புதிய சியாராவின் விலை வரம்பானது ரூ.15 லட்சத்தில் தொடங்கி ரூ.22 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த எஸ்யூவியை வலுவான போட்டியாளர்களிடையே நிலைநிறுத்துகிறது. உள்நாட்டு சந்தையில் இந்த காரானது ஹூண்டாய் க்ரரேட்டா, கியா செல்டோஸ், மாருதி க்ராண்ட் விட்டாரா, எம்ஜி ஹெக்டர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 உடன் போட்டியிட உள்ளது. அதன் நவீன வடிவமைப்பு மற்றும் பல இன்ஜின் ஆப்ஷன்களுடன், 2025 சியரா மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் தனித்து நிற்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI