இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் மின்சார வாகனங்களை தயாரித்து வருகிறது. ஓலா, ஏதர் போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக Oben நிறுவனமும் திகழ்கிறது:

Continues below advertisement

Oben Rorr:

Oben நிறுவனம் தற்போது Oben Rorr என்ற மின்சார பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. மிகவும் வசீகரமான தோற்றத்தில் ஸ்டைலான ஸ்போர்ட்ஸ் தோற்றத்தில் இந்த பைக் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 24 ஆயிரத்து 999 ஆகும். முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் 99 ஆயிரத்து 999க்கு விற்கப்படுகிறது.

180 கிலோமீட்டர் மைலேஜ்:

இந்த பைக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது. இந்த பைக்கில் அதிகபட்சமாக 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இந்த பைக்கை 5 மணி நேரத்தில் சார்ஜ் செய்யலாம். 780 மி.மீட்டர் இருக்கை உயரம் கொண்டது. 

Continues below advertisement

யுஎஸ்பி சார்ஜிங் வசதி கொண்டது. இந்த பைக் 140 கிலோ எடை கொண்டது. இந்த பைக் கருஞ்சிவப்பு, கருஞ்சாம்பல், கருஞ்சிவப்பு, கருநீலம் ஆகிய நிறத்தில் கொண்டது. 9 கிலோவாட்  ஆற்றல் கொண்டது. 3 நொடிகளில் 40 கிலோமீட்டர் வரை வேகத்தில் செல்லலாம். ஆட்டோமெட்டிக் பைக் ஆகும்.

பேட்டரி ஆற்றல்:

இதில் 3.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி நிரந்தரமாக பொருத்தப்பட்டது. ஃபாஸ்ட் சாரஜிங் வசதி உள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் வசதியும் உள்ளது. சிபிஎஸ் வசதி கொண்டது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

சிறப்புகள்:

ட்யூப்லஸ் டயர் உள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கம் உள்ளது. மோனோஷாக் 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் சஸ்பென்சன் பின்பக்கம் உள்ளது. 3 வருட வாரண்டி அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாரண்டி 3 வருடம் அளிக்கப்பட்டுள்ளது.

ப்ளூடூத் வசதி கொண்டது. ஜிபிஎஸ் வசதி இதில் உள்ளது. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் வசதி உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி இதில் உள்ளது. கால்/எஸ்எம்எஸ் அலார்ட் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி இதில் உள்ளது. பேட்டரி வசதி, லைவ் சார்ஜிங் வசதி இதில் உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் வசதி உள்ளது.

April Car Sales: மீண்டும் திரும்பிய ஆல்டோ மவுசு.. எகிறிய மாருதி சுஸுகி விற்பனை! ஏப்ரல் மாதத்தில் மட்டும் இத்தனை லட்சமா?


Car loan Information:

Calculate Car Loan EMI