நிசான் டாட்சன் பிராண்ட் கார் இனி இந்தியாவில் கிடைக்காது. அதன் தயாரிப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏற்கெனவே அக்காரை வைத்துள்ளோர் வசதிக்காக உதிரிப் பாகங்களும், சர்வீஸும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


டாட்சன் கார் நிறுவனம் டாடா நானோ போலவே கார் வாடிக்கையாளர்களின் மனங்களை வெல்லத் தவறிவிட்டது. டாடா நானோவின் தோல்விக்கு அதன் மார்க்கெட்டிங் உத்தி தான் முதல் காரணமாகக் கூறப்பட்டது. அது போலவே, இந்தியாவில் நிசானின் டாட்சன் தோல்விக்கும் அதே மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டஜி தோல்வியே காரணமாகக் கூறப்படுகிறது.


இந்தியாவில் நிசானின் டாட்சன் பிராண்டானது நடுத்தர வர்க்கத்தினரை குறிவைத்து அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது மாருதி ஆல்டோவுக்கு இணையான ஒரு சந்தைக் கனவுடன் களமிறக்கப்பட்டது. ஆனால், லோ காஸ்ட் மோட்டாரிங் என்ற ஒற்றைப் புள்ளியில் மட்டுமே டாட்சன் நின்று கொண்டிருந்ததால் தான் இந்தத் தோல்வி நிகழ்ந்துள்ளது என ஆட்டோமொபைல் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். 


தி டேட்சன் கோவின் தோல்வி காஸ்ட் கட்டிங், அதன் நிமித்தமாக நடந்த சிறப்பம்சங்களின் சமரசம். மாருதி நிறுவனம் நடுத்தர வர்க்கத்தினருக்கான பட்ஜெட் காரில் ஃபீச்சர்ஸில் சமரசம் செய்யவில்லை. ஆனால் டாட்சன் சிறிய ரக காரில் சரியான உட்கட்டமைப்பு இல்லை. அதன் ஃபீச்சர்கள் சரியாக இல்லை. அதன் குறைவான தரமே அதற்கு தோல்வியைத் தந்தது. ரெனால்ட் க்விட்டுடன் ஒப்பிடுகையில் டாட்சன் கோ பிளஸ், ரெடிகோ என எல்லாமே தோல்வியடைந்தன. ரெடிகோவின் தோல்விக்கும் மோசமான ஃபீச்சர்ஸ் தான் காரணம்.  அது மட்டுமல்லாது டாட்சஸனின் க்ராஷ் டெஸ்ட் எல்லாமே தோல்வி தான். இதுவும் அதன் தயாரிப்புகளை மாருதியுடன் போட்டி கொள்ளவிடவில்லை. அதனால் டாட்சன் பிராண்ட் இனி தயாரிக்கப்படாது என்ற அறிவிப்பை ரெனால்ட் வெளியிட்டுள்ளது. ஆனால் டாட்சன் கார் வைத்திருப்போருக்கான சர்வீஸ் வழங்கப்படும். அதன் உதிரி பாகங்களுக்கு பற்றாக்குறை இருக்காது.


தற்போது வெளியாகியுள்ள மேக்னைட் பிராண்டின் வெற்றி அதன் ப்ரீமியம் தன்மைதான். அதுதான் டாட்சனில் இல்லை என்றும் சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.


Car loan Information:

Calculate Car Loan EMI