Toyota Camry Specifications: புதிய ஒன்பதாம் தலைமுறை கேம்ரி செடான் மாடல், பெட்ரோல்-ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


டொயோட்டா கேம்ரி கார் மாடல் (Camry):


டொயோட்டா நிறுவனம் தனது புதிய ஒன்பதாம் தலைமுறை கேம்ரி செடானின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இரண்டிலும் வடிவமைப்பில் மாற்றங்களை கண்டிருப்பதோடு, பயனாளர்களை கவரும் விதமாக பல்வேறு புதிய அம்சங்களையும் பெற்றுள்ளது. அதோடு இந்த காரானது பெட்ரோல்-ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இது முந்தைய ஜென் கேம்ரியின் அதே TNGA-K பிளாட்ஃபார்மில் தான் உருவாகிறது.


Camry வடிவமைப்பு:


ஸ்டைலிங்கைப் பொறுத்தவரை, புதிய கேம்ரி டொயோட்டாவின் சிக்னேச்சர் அம்சமான "ஹாமர்ஹெட்" முன்பக்க வடிவமைப்பை,  மெல்லிய பகல்நேர விளக்குகளுடன் பெற்றுள்ளது.  புதிய கேம்ரியின் உட்புறம் இரண்டு டிஜிட்டல் திரைகளுடன்,  முற்றிலும் புதிய டேஷ்போர்ரை பெற்று ஒரு பெரிய மறுசீரமைப்பை கொண்டுள்ளது. முக்கிய கருவிகள் 7-இன்ச் ஸ்கிரீன் வழியாக செயல்படுத்தப்பட, இன்ஃபோடெயின்மென்ட் பணிகள் 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.  அதே சமயம் குறைந்தபட்ச வேரியண்ட்களுக்கு 8-இன்ச் ஸ்க்ரீன் மட்டுமே கிடைக்கிறது. உயர்தர வேர்யண்ட்களில் JBL சவுண்ட் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, டிஜிட்டல் கீ மற்றும் சில தொழில்நுட்பம் தொடர்பான அம்சங்களும் வழங்கப்படுகிறது.


பவர்டிரெய்ன் ஆப்ஷன்:


புதிய ஒன்பதாவது-ஜென் கேம்ரி மாடலானது V6 இன்ஜின் பயன்பாட்டில் இருந்து வெளியேறி, ஒரே ஒரு பெட்ரோல்-ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷனை மட்டும் பெறுகிறது. அதில் 2.5-லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின் ஆனது,  இரண்டு மின்சார மோட்டார்களுடன் இணைந்து 225hp ஆற்றலை வெளியிடுகிறது. கேம்ரி ஹைப்ரிட் AWD ஆனது பின்புற ஆக்ஸிலிற்கு கூடுதல் மோட்டாரைப் பெறுகிறது.  இதன் மூலம் ஆற்றல் வெளியீடானது 232hp எட்டும். ஏற்கனவே பல டொயோட்டா மாடல்களில் இருப்பதை போலவே , eCVT கியர்பாக்ஸ் கேம்ரியின் ஹைப்ரிட் பவர்டிரெயின் அம்சத்திலும் இடம்பெற்றுள்ளது. பயனாளர்களுக்கு கூடுதல் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் இருக்காது என்றாலும், வெவ்வேறு சஸ்பென்ஷன் அமைப்புகள் வழங்கப்படுகின்றன.


பாதுகாப்பு அம்சங்கள்:


பல்வேறு ஏர்பேக்குகளை பெறுவது அடிப்படை பாதுகாப்பு தரநிலையாக கேம்ரி காரில் கையாளப்படுகிறது. பாதுகாப்பு குறியீடானது 3 ஆக இருக்கும் சூழலில், பாதசாரிகளைக் கண்டறிந்து மோதல் தவிர்ப்பது, முழு-வேக டைனமிக் ரேடார் க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்டீயரிங் அசிஸ்ட்,  டிரேசிங் அசிஸ்ட், ரோடு சைன் அசிஸ்ட் மற்றும் ஆட்டோமேடிக் ஹைபீம்கள் என பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.


இந்தியாவில் வெளியீட்டு விவரம்:


இந்தியாவில் தற்போது விற்பனையாகி வரும் 8வது தலைமுறை கேம்ரி மாடல் சமீபத்தில் தான் ஒரு பெரிய அப்டேட்டை பெற்றது. தொடர்ந்து நல்ல எண்ணிக்கையில் விற்பனையையும் பதிவு செய்து வருகிறது. இதன் காரணமாக புதிய 9வது தலைமுற கேம்ரி மாடல் உடனடியாக இந்தியாவில் விற்பனைக்கு வராது எனவும், அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தான் சர்வதேச சந்தையிலேயே அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விலை குறைந்தபட்சம் 42 லட்சம் ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்படலாம்.


Car loan Information:

Calculate Car Loan EMI