மினி நிறுவனத்தின் கூப்பர் மாடல் கார்களில் விரைவில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏற்கனவே விற்பனையில் உள்ள இரண்டு மாடல்களை தான், மின்சார வாகனமாக மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


மினி கூப்பர்:


பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு சொந்தமான, இங்கிலாந்தை சேர்ந்த சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மினி இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கணிசமான பங்களிப்பை கொண்டுள்ளது. நேர்த்தியான மற்றும் காண்போரை கவரும் விதமான இந்த நிறுவனத்தின், கூப்பர் உள்ளிட்ட கார் மாடல்களின் வடிவமைப்பு உலகம் மிகவும் பிரசித்தி பெற்றது.


இந்தியாவிலும் கூட இந்த மினி நிறுவனம் 3 கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. அதில், 2 ஹேட்ச்-பேக் மாடல்கள் மற்றும் ஒரு எஸ்யுவி மாடலை சேர்ந்ததாகும். கூப்பர் SE 2024 எனும் மேலும் ஒரு கார் மாடலையும் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சூழலில் தான், மினி நிறுவனம் காலத்திற்கேற்ப தன்னை மேம்படுத்திக் கொண்டு புதிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மின்சார கார்:


இதுதொடர்பான தகவலின்படி, மினி நிறுவனம் தனது கார்களை எலெக்ட்ரிக் திறன் கொண்டதாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மினி நிறுவனத்தின் 3 கதவுகள் கொண்ட மினி கூப்பர் காரின் அடுத்த தலைமுறை மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார் முழுமையான மின்சார கார் வடிவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


3 கதவுகளுடன் மின்சார கார்:


ஆரம்ப கட்ட தகவல்களின்படி,  நிறுவனத்தின் கண்ட்ரிமேன் மற்றும் ஏஸ்மேன் மாடல்களை தான்.  மின்சார கார்களாக அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். இது இரண்டு ஆற்றல் வெர்ஷன்களில் விற்பனை செய்யப்படும். இதில் சிங்கிள் ஆக்சில் மவுண்டட் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படும் எனவும், அது அதிகபட்சமாக 181 குதிரைகளின் சக்தியை வெளிப்படும் என்றும் கூறப்படுகிறது. 40.72 KWh திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்பட உள்ளதாகவும், இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மினி SE மாடல்


மினி நிறுவனம் முதன் முதலில் அறிமுகம் செய்த மினி SE மாடல் சந்தையில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த கார் கடந்த ஆண்டில் மட்டும் உலகளவில் 43 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகின. மினி கூப்பர் E எலெக்ட்ரிக் காரில் 40.7 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. மினி கூப்பர் SE மாடலில் 54.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 300 முதல் 400 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும். மினி கூப்பர் எலெக்ட்ரிக் கார் மினி ஸ்பேஸ் கான்செப்டில் உருவாக்கப்படுகிறது. மினி கண்ட்ரிமேன் மாடல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் லெய்சிக் பிஎம்டபிள்யூ குழும ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. 2024 ஆண்டு ஏஸ்மேன் மாடலின் உற்பத்தி துவங்கும் என்று கூறப்படுகிறது. 


Car loan Information:

Calculate Car Loan EMI