வடக்கு தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று 7-ஆம் தேதி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் 8-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 9-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச மழை பதிவு:
இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பணப்பாக்கம் (இராணிப்பேட்டை மாவட்டம்), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்), ஆற்காடு (இராணிப்பேட்டை மாவட்டம்) தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து வேப்பூர் (கடலூர் மாவட்டம்), காட்டுமயிலூர் (கடலூர் மாவட்டம்), கலவாய் பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை மாவட்டம்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்), பொன்னை அணை (வேலூர் மாவட்டம்) தலா 7 செண்டி மீட்டரும், ராணிப்பேட்டை (இராணிப்பேட்டை மாவட்டம்), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை மாவட்டம்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்), வாலாஜா (இராணிப்பேட்டை மாவட்டம்), காட்பாடி (வேலூர் மாவட்டம்), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி மாவட்டம்) தலா 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மேலும் பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்), கரியகோவில் அணை (சேலம் மாவட்டம்), டிஎஸ்எல் ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்), அம்மூர் (வாலாஜா ரயில்வே (இராணிப்பேட்டை மாவட்டம்), குடியாத்தம் (வேலூர் மாவட்டம்), ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்) தலா 5, பாலாறு அணைக்கட்டு (இராணிப்பேட்டை மாவட்டம்), புடலூர் (தஞ்சாவூர் மாவட்டம்), பாஸ்ல் மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்), வேலூர் (வேலூர் மாவட்டம்), திருத்தணி பிடோ (திருவள்ளூர் மாவட்டம்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர் மாவட்டம்), திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி மாவட்டம்), ), வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்), டிஎஸ்எல் கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்), ஹரூர் (தருமபுரி மாவட்டம்), பண்ருட்டி (கடலூர் மாவட்டம்), டிஎஸ்எல் தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூடத்துடன் காணப்பட்டது. கடந்த வாரம் ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் சற்று உயர்ந்துள்ளது.
08.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
09.05.2023 முதல் 10.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.