New MG Windsor EV: எம்ஜி விண்ட்சரின் புதிய எடிஷனில் என்ன மாதிரியான அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
புதிய எம்ஜி விண்ட்சர் EV - கூடுதல் ரேஞ்ச்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் விற்பனையாகும் மின்சார கார்களின் பட்டியலில், எம்ஜி நிறுவனத்தின் விண்ட்சர் கார் மாடல் முதன்மையானதாக உள்ளது. இந்நிலையில் அதனை ஊக்குவிக்கும் விதமாக விண்ட்சரின் ஃபேஸ்லிஃப் எடிஷனை அடுத்தாண்டு களமிறக்க எம்ஜி நிறுவனம் தயாராகி வருகிறது. இதில் தீவிரமான காஸ்மெடிக் அப்டேட்களுடன் கூடுதல் அம்சங்கள் மற்றும் பெரிய 61KWh பேட்டரி பேக் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரி திறன் மற்றும் ரேஞ்ச் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லாவிட்டாலும், தற்போதைய எடிஷனை காட்டிலும் புதிய எடிஷன் அதிக ரேஞ்ச் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்ஜி விண்ட்சர் EV - பேட்டரி விவரங்கள்
தற்போது விற்பனையில் உள்ள விண்ட்சரில் 38KWh மற்றும் 52.9KWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. அவை முறையே 332 கிலோ மீட்டர் மற்றும் 449 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கப்படுகிறது. இரண்டிலுமே முன்புறத்தில் கட்டமைக்கப்பட்ட மின்சார மோட்டார்கள் இடம்பெற்றுள்ளன. புதியதாக வரும் விண்ட்சரும் இதே ஒற்றை மின் - மோட்டார் செட்டப்பை அப்படியே தக்கவைத்துக்கொள்ளும் என கூறப்படுகிறது.
எம்ஜி விண்ட்சர் EV - விலை விவரங்கள்
எதிர்பார்க்கப்படும் பெரிய பேட்டரி பேக் மற்றும் கணிசமான டிசைன் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, 2027 எம்ஜி விண்ட்சர் EV காரின் விலையில் உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள எடிஷனானது ஆறு வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றின் விலை ரூ. 14.85 லட்சம் முதல் ரூ. 19.15 லட்சம் வரை உள்ளது. என்ட்ரி லெவல் எக்ஸைட் வேரியண்ட்டின் விலை ரூ. 14.85 லட்சம் ஆகும்.மிட்-லெவல் எக்ஸ்க்ளூசிவ் மற்றும் எசென்ஸ் வேரியண்ட்டுகளின் விலை முறையே ரூ. 16.15 லட்சம் மற்றும் ரூ. 17.15 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வின்ட்சர் EV இன்டல்ஜ் வேரியண்ட் ரூ. 17.89 லட்சத்திற்கு வழங்கப்படுகிறது. டாப் வேரியண்ட்களான எக்ஸ்க்ளூசிவ் ப்ரோ மற்றும் எசென்ஸ் ப்ரோ வேரியண்ட்டுகளின் விலை முறையே ரூ. 18.05 லட்சம் மற்றும் ரூ. 19.15 லட்சம் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்களை கவரும் விண்ட்சர்
எம்ஜி விண்ட்சர் ஈவி, அதன் விசாலமான கேபின், பின் இருக்கை சௌகரியம், சிறப்பம்சங்கள் நிறைந்த உட்புறம், நடைமுறைக்கு ஏற்ற மின்சார பயண வரம்பு மற்றும் மலிவு விலை போன்ற காரணங்களுக்காக வாடிக்கையாளர்களால் வெகுவாக கவரப்படுகிறது. இதனால் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மின்சார வாகனங்களில் (EVs) ஒன்றாகவும் உள்ளது. ஆரம்பத்தில், இந்த 38kWh பேட்டரி பேக்குடன் வழங்கப்பட்டது, இது வழக்கமான நகர்ப்புற பயணங்களுக்கு ஏற்றதாக இருந்தது. பின்னர், நீண்ட தூரம் பயணிக்க விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், கார் தயாரிப்பு நிறுவனம் 52.9kWh பேட்டரி பேக் கொண்ட வின்ட்சர் ஈவி ப்ரோ என்ற பெரிய மாடலை அறிமுகப்படுத்தியது.
புதிய எம்ஜி விண்ட்சர் உள்ளூரில் டாடா நெக்ஸான், மஹிந்த்ரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, கியா சைரோஸ் மற்றும் வரவிருக்கும் வின்ஃபாஸ்ட் விஎஃப்5 ஆகிய மின்சார கார்களுடன் போட்டியிடுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI