உலகின் மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனம் பென்ஸ். இவர்களின் கார்களுக்கு என்று உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. உலகம் முழுவதும் மின்சார கார்களுக்கான வரவேற்பு பெருமளவில் இருந்து வருகிறது.
அறிமுகமாகியது Mercedes GLA:
இந்த சூழலில், பென்ஸ் நிறுவனமும் மின்சார கார்கள் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த சூழலில், பென்ஸ் நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கார் New Mercedes GLA. இந்த கார் 96 கிலோமீட்டர் வேகத்தை 5.3 நொடிகளில் எட்டும் ஆற்றல் கொண்டது.
657 கி.மீட்டர் மைலேஜ்:
349 எச்பி குதிரை ஆற்றல் கொண்ட இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 657 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் ஆற்றல் கொண்டது. அதாவது, சென்னையில் இருந்து திருநெல்வேலி வரை செல்லலாம். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கார் உலகளவில் அடுத்தாண்டு இரண்டாம் பாதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரில் எல்இடி முகப்பு விளக்குகள், புதிய வடிவமைப்பில் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் பம்பர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஏஎம்ஜி லைன், ஏஎம்ஜி லைன் ப்ளஸ், நைட் பேக்கேஜ் மற்றும் நைட் எடிஷன் வேரியண்ட் உள்ளது. புதிய வடிவத்திலான அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
சிறப்புகள்:
10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 14 இன்ச் மத்திய பகுதி தொடுதிரை உள்ளது. பயணிகளுக்கு 14 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. பனோரமிக் மேற்கூரை பொருத்தப்பட்டுள்ளது.
பர்மெஸ்டர் 3டி சர்ரவுண்ட் சிஸ்டம் வசதி உள்ளது. 64 வண்ண ஆம்பியன் வண்ணங்கள் உள்ளது. வயர்லஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் வசதி உள்ளது. வென்டிலெட்டட் இருக்கைகள் உள்ளது. GLA 250+ வேரியண்டில் 268 எச்பி குதிரைத் திறன் கொண்டது. GLA 350 4 மேடிக் 349 எச்பி குதிரை ஆற்றல் கொண்டது.
வசதிகள்:
இந்த காரில் 85 கிலோவாட் பேட்டரி வேரியண்ட் பொருத்தப்பட்டுள்ளது. 800 வோல்ட் எலக்ட்ரிக்கல் ஆர்கிடெக்சர் வசதி உள்ளது. டிசி சார்ஜிங் 320 கிலோவாட் வரை சார்ஜ் செய்யும் ஆற்றல் கொண்டது. இந்த மின்சார மாடல் மட்டுமின்றி 1.5 லிட்டர் டர்போசார்ஜ்ட் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் கார் ஒன்றும் தயாரிப்பில் உள்ளது.
பல்வேறு வசதிகள் கொண்ட இந்த கார் அறிமுகமானால் மின்சார கார் சந்தையில் பென்ஸ் கார் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI