Maruti Swift 2024: விரைவில் அறிமுகமாக இருக்கும், மாருதி ஸ்விஃப்ட் காரில் உள்ள புதிய அம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய மாருதி ஸ்விஃப்ட் 2024:


 மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஸ்விஃப்ட் மிக விரைவில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமாக உள்ளது. இந்த சூழலில் ஜப்பானில் வெளியாகியுள்ள ஸ்விஃப்ட் மாடலில் ஒரு லேசான ஹைப்ரிட்ட் தொழில்நுட்பம் உள்ளது. இது அதிக செயல்திறனைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் புதிய ஸ்விஃப்ட் வசதி மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அதிக அம்சங்களைப் பெறுகிறது.

 

ஸ்விஃப்ட் 2024 வடிவமைப்பு:


 வடிவமைப்பை பொறுத்தவரையில் புதிய ஸ்விஃப்ட் 3860 மில்லி மீட்டர் நீளத்தில் வருகிறது.  இதனால் முந்தைய மாடலை காட்டிலும் இது சற்று நீளமாக இருப்பதோடு, 1695 மில்லி மீட்டர் அகலமாகவும் உள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 120 மிமீ மற்றும் வீல்பேஸ் 2450 மிமீ ஆக உள்ளது. வாகனத்தின் டர்னிங் ரேடியஸ் 4.8 மீ ஆக உள்ளது.  இவை உலகளாவிய கார் மாதிரியின் விவரக்குறிப்புகள் என்பதை நினைவில் கொள்க. காரணம், இந்திய சந்தையில் காரின் வடிவமைப்பு விவரங்கள் வேறுபடலாம்.  குறிப்பாக கிரவுண்ட் கிளியரன்ஸ் மாறுபட அதிக வாய்ப்புள்ளது. 

இன்ஜின் விவரங்கள்:



மைல்ட் ஹைப்ரிட் பதிப்பு லிட்டருக்கு 28.9 கிலோ மீட்டர் என்ற மைலேஜை வழங்குகிறது. அங்கு இது புதிய Z12E டைப் 3 சிலிண்டர் யூனிட்டை பயன்படுத்தி 82PS மற்றும் 108Nm ஆற்றலை வெளிப்படுத்துகிறது.  அதே நேரத்தில் DC மோட்டார் மற்றும் லித்தியம் அயன் பேட்டரியை பயன்படுத்தும் எடிஷனானது 3bhp மற்றும் 60Nm ஆற்றலை உருவாக்குகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட Z12E வகை 1.2L 3-சிலிண்டர் இன்ஜின் வேகமான கம்பஸ்டன் மற்றும் ஹையர் கம்ப்ரெஷன் விகிதங்களைக் கொண்டுள்ளது. இது குறைந்த வேகத்தில் அதிக டார்க்கை கொண்டுவருகிறது. 5-வேக கையேடு மேம்படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் கியர் செயல்திறனுக்காக டியூன் செய்யப்பட்டுள்ளது. ஸ்டேண்டர்ட்  பெட்ரோல் எடிஷனானது லிட்டருக்கு 24 கிமீ மைலேஜை வழங்கும். லக்கேஜ் இடம் 265l ஆக உள்ளது.


வாகனத்தில் உள்ள இதர அம்சங்கள்:


புதிய ஸ்விஃப்ட் டில்ட் ஸ்டீயரிங், டெலஸ்கோபிக் ஸ்டீயரிங், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, 9 இன்ச் திரை, பவர் கண்ணாடிகள், இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் போன்ற பல அம்சங்களை பெறுகிறது. ஜப்பான் ஸ்பெக் மாடலில் ADAS மற்றும் எலக்ட்ரானிக் ஹேண்ட்பிரேக் அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. சிக்னேச்சர் நிறங்களான ஃபிரான்டியர் ப்ளூ பெர்ல் மெட்டாலிக் மற்றும் பர்னிங் ரெட் பெர்ல் மெட்டாலிக் ஆகியவற்றில் புதிய ஸ்விஃப்ட் கிடைக்கும் என கூறப்படுகிறது.


மீண்டும் குறிப்பிடுகிறோம் இவை ஜப்பான் ஸ்பெக் மாடலிலின் அடிப்படையில் கூறப்படுபவையே. இந்தியாவிற்கு வரும்போது,  பாரம்பரிய ஸ்விஃப்ட் ஷேட்களுடன் ஸ்டிரைக்கிங் ப்ளூ ஷேடிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்டியர் ஆக இருந்தாலும் அதிக ஆக்ரோஷமாகத் தெரிகிறது.  அதன் முக்கிய அம்சங்களை பராமரிக்கும் அதே வேளையில் புதியதாக அதிக தொழில்நுட்பங்களை கொண்டு வருகிறது. புதிய ஸ்விஃப்ட்டின் விற்பனை மாருதி சுசுகி அரீனா அவுட்லெட்டுகள் வழியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




Car loan Information:

Calculate Car Loan EMI