கடந்த சிலவாரங்களுக்கு முன்பு மாருதி தனது செலிரியோவின் புதிய ரகமான கார்களைசந்தையில் அறிமுகப்படுத்தியது. 6 விதமான கலர்களில் 7 வித்தியாசங்களில் இது சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.2014ல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட செலிரியோ 2017 மீண்டும் மேம்படுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது மீண்டும் மேம்படுத்தப்பட்டுள்ளது. பெரிய பம்பர்கள், பளிச் ஹெட்லைட்கள் மற்றும் அதனை இணைக்கும் க்ரில் டிசைன், முன்பக்கம் இருக்கும் ஏர்டேம், அகலமான பாடிலைன் ஆகியவை அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் திருப்திபடுத்தும் வகையிலான டிசைனாக அமைந்திருக்கிறது.பின்புறம் இன்னும் வசீகரமானது. லைட் இருப்பதே தெரியாதவகையில் பாடிலைனுடன் ஒட்டியபடி பேக்லைட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்தக் காரின் இண்டீரியர் இரண்டு வண்ணங்களால் ஆனது. கேபின் அகலாமனதாக இருப்பதால் ப்ரீமியம் ரக மாடல்களின் உணர்வைக் கொடுக்கிறது.
பி.எஸ்6 எஞ்சின்தான் தற்போதைய ட்ரெண்டிங் என்றாலும் இந்த மாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதற்கு இணையானதாக உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 90என் எம் திறனும் 68 பிஎச்பி பவரையும் கொண்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆகிய
வகைகளில் இந்த வாகனம் கிடைக்கிறது. இது அல்லாமல் சிஎன்ஜி டிசைனிலும் இந்த கார் கிடைக்கிறது.
சிஎன்ஜி டிசைனில் உள்ள எஞ்சின் 78 என்.எம். ஆற்றலையும் 58 பிஎச்பி திறனையும் அடக்கியது. இதுதவிர இந்த காரின் எஞ்சின் மிக சீரான ஆற்றலை கொடுக்கிறது. இதன் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் காரின் எடையை அனாயசமாகச் சமாளிக்கிறது. கூடுதலாக மிதமான வேகத்திலேயே அதிக ஆற்றலையும் உணர முடிகிறது. கிளட்ச் இலகுவாக உள்ளது. கியர்ஷிப்ட் அதிர்வுகளும் இதனால் குறைவாக உள்ளது.இந்தக் காரின் பலமாக இதனைக் கூறலாம். இந்திய சாலைகளில் ஓட்டுவதற்கு ஏதுவாக இதன் க்ளட்ச் மற்றும் எஞ்சின் உள்ளது.
மேலும், புதிய மாருதி செலிரியோ கார் லிட்டருக்கு 23.10 கிமீ மைலேஜ் தருகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தக் காரில் 35 லிட்டர் அளவு பெட்ரோல் பிடிக்கும் திறன் உள்ளது. சி.என்.ஜி. டிசைன் ரகங்களின்படி, இது கிலோவுக்கு 31.79 கிமீ வரை மைலேஜ் தருகிறது.மற்றபடி பெட்ரோல் டேங்க் மற்றும் கேஸ் டேங் ஆகியவற்றைச் சேர்த்து 60 லிட்டர் வரை ஃபியூல் இன்புட் இந்த கார் ரகங்கள் பெற்றிருக்கின்றன.
Car loan Information:
Calculate Car Loan EMI