Mahindra Bolero Neo Facelift: மஹிந்த்ரா நிறுவனத்தின் பொலேரோ மற்றும் பொலேரோ நியோ கார்களின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன்களின் விலை ரூ.80 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

மஹிந்த்ராவின் பொலேரோ & பொலேரோ நியோ:

மஹிந்த்ரா நிறுவனம் தனது பொலேரோ கார் மாடல்களை மேம்படுத்தி சந்தைப்படுத்தியுள்ளது. நிறுவனம் சார்பில் நீண்ட காலமாக விற்பனையில் உள்ள எஸ்யுவி மாடல்களுக்கு, டிசைன் மற்றும் உபகரணங்கள் அடிப்படையில் தேவையான மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ.7.99 லட்சம் தொடங்கி ரூ.9.99 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் லேசான தோற்ற மேம்பாடுகள் , அப்டேட் செய்யப்பட்ட கேபின் மற்றும் சில புதிய அம்சங்கள் ஆகியவை பொலேரோ மற்றும் பொலேரோ நியோ ஆகிய இரண்டு கார்களிலும் வழங்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

மஹிந்த்ரா பொலேரோ: புதிய அப்டேட்கள்

கூர்மையான ஸ்லாட்கள் மற்றும் மறுவடிமைப்பு செய்யப்பட்ட பம்பரை கொண்ட, புதியதாக வடிவமைக்கப்பட்ட க்ரில் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட வேரியண்ட்களில் ஃபாக் லேம்ப்கள் வழங்க்கப்பட்டுள்ளன. டாப் - எண்ட் வேரியண்டான B8 ட்ரிம்மானது டைமண்ட் கட் அலாய் வீல்களை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக இதன் நிலையை மேம்படுத்தும் விதமாக, புதிய ஸ்டெல்த் ப்ளாக் பெயிண்ட் அம்சத்தையும் வழங்கியுள்ளது. டேஷ்போர்டடில் மல்டி மீடியா ஃபங்ஷன்களுடன் கூடிய 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட் இடம்பெற்றுள்ளது. டாப் வேரியண்ட்களில் ஸ்டியரிங் மவுண்டட் கண்ட்ரோல்களை கொண்டுள்ளன.

மஹிந்த்ரா பொலேரோ: ரைட்ஃப்லோ டெக்

RideFlo தொழில்நுட்பத்தைச் சேர்ப்பது, கரடுமுரடான சாலைகளில் கூட மென்மையான மற்றும் மிகவும் அமைதியான பயணத்தை பெறுவது உறுதியளிக்கிறது. USB Type-C போர்ட்கள், கதவு பேனல்களில் மேம்படுத்தப்பட்ட பாட்டில் ஹோல்டர்கள் மற்றும் லெதரெட் இருக்கைகளைப் பெற்ற டாப் B8 வேரியண்டுடன் கூடிய புதிய அப்ஹோல்ஸ்டரி ஆகியவை மற்ற அப்டேட்களாகும்.

மஹிந்த்ரா பொலேரோ: இன்ஜின் விவரங்கள்

பொலேரோ சீரிஸில் இன்ஜின் அடிப்படையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, மஹிந்திராவின் பழக்கமான 1.5 லிட்டர் mHawk75 3 சிலிண்டர் டீசல் இன்ஜின் தொடர்கிறது. இது 75 hp மற்றும் 210 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 16 கிலோ மீட்டர் ரேஞ்சை அளிக்கும் என கூறப்படுகிறது.

மஹிந்த்ரா பொலேரோ: விலை விவரங்கள்

பொலேரோ வேரியண்ட் பழைய எடிஷன் விலை புதிய எடிஷன் விலை  வித்தியாசம்
B4 ரூ.8.79 லட்சம் ரூ.7.99 லட்சம் ரூ.80,000
B6 ரூ.8.95 லட்சம் ரூ.8.69 லட்சம் ரூ.26,000
B6 (O) ரூ.9.78 லட்சம் ரூ.9.09 லட்சம் ரூ.69,000
B8 - ரூ.9.69 லட்சம் -

மஹிந்த்ரா பொலேரோ நியோ

இதனிடையே, பொலேரோ நியோ மாடலானது ஹாரிசாண்டல் அக்செண்ட்களுடன் கூடிய ஸ்லீக்கர் முன்புற க்ரில்லை பெற்றுள்ளது. 16 இன்ச் டார்க் மெடாலில் அலாய் வீல்களை கொண்டுள்ள இந்த எடிஷனின் விலை, ரூ.8.49 லட்சத்தில் தொடங்கி ரூ9.99 லட்சம் வரை நீள்கிறது. புதியதாக ஜீன்ஸ் ப்ளூ ம்ற்றும் கான்க்ரீட் க்ரே ஆகிய வண்ண விருப்பங்கள் டூயல் டோன் ஃபினிஷிங்கில் கிடைக்கின்றன.

உட்புறத்தில் இந்த SUV புதிய லூனார் கிரே மற்றும் மோச்சா பிரவுன் கேபின் தீம்கள், பின்புற கேமராவுடன் கூடிய 22.8 செ.மீ டச்ஸ்க்ரீன் சிஸ்டம் மற்றும் மல்டி-டெரெய்ன் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட RideFlo Tech ஆகியவற்றைப் பெறுகிறது. இன்ஜின் அடிப்படையில் எந்த மாற்றமும் இன்றி நியோ எடிஷனில் 1.5 லிட்டர் mHawk100 3 சிலிண்டர் எனும் அதிக சக்தி வாய்ந்த டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இது 98.56 hp மற்றும் 260 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் பொருத்தப்பட்டுள்ளது.

மஹிந்த்ரா பொலேரோ நியோ - விலை விவரங்கள்

பொலேரோ நியோ வேரியண்ட் பழைய எடிஷன் விலை புதிய எடிஷன் விலை  வித்தியாசம்
N4 ரூ.8.92 லட்சம் ரூ.8.49 லட்சம் ரூ.43,000
N8 ரூ.9.54 லட்சம் ரூ.9.29 லட்சம் ரூ.25,000
N10 (10) ரூ.10.29 லட்சம் ரூ.9.79 லட்சம் ரூ.50,000
N11 - ரூ.9.99 லட்சம் -

Car loan Information:

Calculate Car Loan EMI