Kia EV2 Smallest Electric Car: கியா நிறுவனத்தின் மிகச் சிறிய மின்சார கார் மாடலான EV2, அதிகபட்சமாக 448 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

கியாவின் மிகச்சிறிய மின்சார கார்:

கியா நிறுவனம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும், குறுகிய காலத்திலேயே வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பயனர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நோக்கில், மின்சார கார் போர்ட்ஃபோலியோவிலும் தீவிரம்காட்டி வருகிறது. அந்த வரிசையில் பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் மோட்டர் ஷோவில், தனது முற்றிலும் புதிய க்ராஸ் ஓவர் மின்சார காரான EV2 மாடலை கியா அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிறுவனத்தின் ஆறாவது மற்றும் மிகச்சிறிய போர்ன் மின்சார கார் மாடலாகும். வழக்கமான E-GMP ப்ளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இந்த கார் மாடலானது ரெனால்ட் 4 மற்றும் விரைவில் அறிமுகமாக உள்ள ஃபோக்ஸ்வாகன் ID க்ராஸ் மாடல்களுடன் போட்டியிட உள்ளது.

Continues below advertisement

கியா EV2 - வெளிப்புற டிசைன்..

காரின் வெளிப்புற டிசைனானது ப்ராண்டின் பெரிய மின்சார கார்களின் தாக்கத்தை கொண்டுள்ளது. உட்புற இடவசதியை அதிகப்படுத்திக்கொள்ள நிறுவனத்தின் புலி பாணியிலான முன்புறம் மற்றும் பாக்ஸி மாதிரியான டிசைனை ரிவைஸ்ட் வெர்ஷனில் நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. வெர்டிகலி ஸ்டேக்ட் ஸ்ப்லிட் முகப்பு விளக்கானது தனித்துவமானதாக காட்சியளிக்கிறது. வாகனத்தைச் சுற்றிலும் பாடி கிளாடிங்கின் தாராளமான பயன்பாடு மற்றும் பின்புற சக்கர வளைவுகள் மீது பாடி கிளாடிங்கின் நீட்டிப்புகள் போல தோற்றமளிக்கும் டெயில்-லேம்ப்கள் இந்தியாவில் விற்பனையில் உள்ள சைரோஸ் மாடலை பிரதிபலிக்கின்றன. ஒட்டுமொத்தமாக கூர்மையான எட்ஜிசர்ஃபேஸ் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. ஜிடி லைன் ட்ரிம்மானது ஸ்போர்ட்டியர் லுக் கொண்ட முன்பகுதி மற்றும் ரியர் பம்பர்களை கொண்டுள்ளது. வழக்கமான வேரியண்ட்களுக்கு 16 முதல் 18 இன்ச் வீல்களும், ஜிடி லைன் ட்ரிம்மிற்கு 19 இன்ச் ரிம்களும் வழங்கப்படுகின்றனர். அளவீடுகள் அடிப்படையில் EV2 கார் மாடலானது 4,060 மில்லி மீட்டர் நீளம், 1,800 மில்லி மீட்டர் அகலம் மற்றும் 2,565 மில்லி மீட்டர் வீல்பேஸை கொண்டுள்ளது.

கியா EV2 - உட்புற அம்சங்கள்

புதிய EV2 மாடலின் உட்புறமும் சைரோஸின் தாக்கத்தை கொண்டுள்ளது. 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், 5.3 இன்ச் க்ளைமேட் கண்ட்ரோல் டிஸ்பிளே மற்றும் 12.3 இன்ச் செண்ட்ரல் டச்ஸ்க்ரீன் செட்-அப் மூலம் டிஜிட்டல் டேஷ்போர்டை கொண்டுள்ளது. கியாவின் லைட் வெர்ர்ஷன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இந்த மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது விலையை குறைக்க உதவினாலும், ஓவர் தி ஏர் அப்டேட்ஸ் வசதியையும் கொண்டுள்ளது.

எளிமையாக கையாள்வதற்காக ஸ்டியரிங் வீல் மற்றும் சென்ட்ரல் கன்சோலில் ஏராளமான பிசிகல் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரானது வழக்கமான 5 சீட்ட்ர் கான்ஃபிகரேஷனுடன் 4 சீட்டர் லேஅவுட்டையும் பெறுகிறது. இது இரண்டு தனித்தனி ரிக்ளைனிங் இருக்கைகளை கொண்டு, அவற்றை முன்புறம் சாய்ப்பதன் மூலம் 403 லிட்டர் வரை பூட் ஸ்பேஸ் வசதியை அதிகரிக்க உதவுகிறது. அதேநேரம் 5 சீட்டரானது 362 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டுள்ளது. இரண்டுமே 15 லிட்டருக்கான ட்ரன்கை பெறுகின்றன.

EV2 மாடலில் வழங்கப்படும் சில அம்சங்களில் சாவி இல்லாத நுழைவு, ஹர்மன் கார்டோன் சவுண்ட் சிஸ்டம், வெஹைகிள் டூ லோட் மற்றும் வெஹைகிள் டூ க்ரிட் சார்ஜிங் திறன் மற்றும் லெவல் 2 ADAS ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்காக அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஹைவே ட்ரைவிங் அசிஸ்ட் 2, 360 டிகிரி கேமரா, ப்ளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர் போன்ற அம்சங்களும் அடங்கும்.

கியா EV2 - பேட்டரி, ரேஞ்ச்

கியா ப்ராண்டின் புதிய குட்டி மின்சார காரான EV2 மாடல், 42.2kWh மற்றும் 61.0kWh பேட்டரி பேக் மூலம் முறையே 317 மற்றும் 448 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜுன் மாதத்தில் இந்த காரின் உற்பத்தி தொடங்க உள்ளதாம். ஸ்டேண்டர்ட் ரேஞ்ச் எடிஷனானது 147hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய ஃப்ரண்ட் மவுண்டட் மோட்டாரையும், லாங்க் ரேஞ்ச் மோட்டார்கள் சற்றே சிறிய 136hp மோட்டாரையும் கொண்டுள்ளது. இரண்டு பேட்டரி எடிஷன்களுமே டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம், 10 முதல் 80 சதவிகிதம் என்ற நிலையை, 30 நிமிடங்களில் எட்டிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. EV2 வீடு அல்லது பொது பயன்பாட்டிற்கு 11 kW மற்றும் 22 kW AC சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.

இந்தியாவிற்கு எப்போது வரும்?

கியா நிறுவனத்தின் சிறிய எஸ்யுவி ஆன EV2 காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாவிட்டாலும், நடப்பாண்டு இறுதி அல்லது 2027ம் ஆண்டு தொடக்கத்தில் உள்நாட்டில் சந்தைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இந்த காரின் விலை, ப்ராண்டின் மலிவு விலை மின்சார காராக ரூ.9 லட்சத்தில் தொடங்கி ரூ.15 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்படலாம். 


Car loan Information:

Calculate Car Loan EMI