New Kia Carnival vs Toyota Vellfire vs Hycross: புதிய கியா கார்னிவல், டொயோட்டா வெல்ஃபைர் மற்றும் ஹைகிராஸ் ஆகிய, மல்டி பேசஞ்சர் வாகனங்களின் ஒப்பீட்டு விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


கியா கார்னிவல் Vs டொயோட்டா வெல்ஃபையர் Vs ஹைகிராஸ்:


இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், புதிய கார்னிவெல் மல்டி பேசஞ்சர் காரை கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் எம்பிவி செக்மெண்டில் ஹைகிராஸ் மற்றும் வெல்ஃபையர் மாடல்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த 3 கார்களை ஒப்பிடுவது என்பதே நியாயமாக இருக்காது. காரணம் வெல்ஃபையர் காரின் விலை ரூ.1 கோடிக்கும் அதிகம் ஆகும். இருப்பினும், புதிய கியா கார்னிவல், டொயோட்டா வெல்ஃபையர் மற்றும் ஹைகிராஸ் ஆகிய எம்பிவிக்கள் சந்தையில் எவ்வாறு போட்டியிடுகின்றன என்பதை இங்கே அறியலாம்.


எந்த கார் பெரியது?


கார்னிவல் 5155 மிமீ நீளம் மற்றும் 3090 மிமீ வீல்பேஸ் கொண்டது. ஒப்பிடுகையில், இன்னோவா ஹைக்ராஸ் 4755 மிமீ நீளம் மற்றும் 2850 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது. அதேநேரம், வெல்ஃபையர் 4995 மிமீ நீளம் மற்றும் 3000 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது. அதாவது ஒட்டுமொத்த நீளத்தின் அடிப்படையில் கார்னிவல் பெரியதாக உள்ளது. 


எந்த கார் சக்தி வாய்ந்தது?


கார்னிவல் 192bhp உடன் 2.2l டீசல் இன்ஜினை கொண்டுள்ளது. Hycross ஆனது 2.0l பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் காம்பினேஷனை கொண்டுள்ளது, இது 183bhp ஆற்றலை உருவாக்குகிறது, அதே நேரத்தில் Vellfire ஒரு ஹைப்ரிட் பவர்டிரெய்னை கொண்டுள்ளது. ஆனால் இது 193bhp ஆற்றலை உருச்வாக்கும் 2.5l ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் அதிக சக்தி வாய்ந்ததாக உள்ளது. கார்னிவலின் அதிகாரப்பூர்வ மைலேஜ் புள்ளிவிவரங்கள் வெளிவரவில்லை, ஆனால் ஹைக்ராஸ் ஹைப்ரிட் 23.24 கிமீ மைலேஜ் கொடுக்கிறது. அதே சமயம் வெல்ஃபயர் 19.28 கிமீ லிட்டருக்கும் கொடுக்கிறது.


அதிக அம்சங்களை கொண்ட கார் எது?


கார்னிவல் பல்வேறு இருக்கை ஆப்ஷன்களுடன் வருகிறது. அதே நேரத்தில் இரண்டாவது வரிசை இருக்கைகள் லெக் சப்போர்ட்டுடன் ரிலாக்சேஷன் அம்சத்துடன் இயக்கப்படுகின்றன. மற்ற இடங்களில், கார்னிவல் ஒரு டச் பவர் ஸ்லைடிங் கதவுகள், OTA புதுப்பிப்புகளுடன் 12.3-இன்ச் திரை, கனெக்டட் கார் தொழில்நுட்பம், டூயல் சன்ரூஃப், ADAS உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.


வெல்ஃபையர் தனித்தனி கேப்டன் இருக்கைகளுடன் ஒட்டோமான் செயல்பாடு, ஹீட் மற்றும் காற்றோட்டம், உள்ளிழுக்கும் டேபிள்கள், சன்ஷேட்ஸ், ADAS மற்றும் பல பின் இருக்கை செயல்பாடுகளுக்கான தனி கண்ட்ரோல் பேனல் ஆகியவற்றுடன் வருகிறது. முன்பக்கத்தில் புதிய 14 இன்ச் தொடுதிரை மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகளும் உள்ளன.


ஹைக்ராஸ், வெல்ஃபையர் அல்லது கார்னிவல் போன்ற பல அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், ஓட்டோமான் செயல்பாடு, பவர்ட் லெக்ரெஸ்ட், பனோரமிக் சன்ரூஃப், முன்பக்கத்தில் காற்றோட்டமான இருக்கைகள், 10 இன்ச் தொடுதிரை போன்ற அம்சங்களை பெறுகிறது.


விலை விவரங்கள்


ஒப்பிடப்படும் 3 கார்களில், ஹைக்ராஸ் மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது. அதன் விலை ரூ.19.7 லட்சம் முதல் ரூ 30 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.1.2 கோடி மதிப்பில் வெல்ஃபையர் மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது. கார்னிவல் விலை ரூ 63.9 லட்சம் ஆகும். ஹைக்ராஸை பணத்திற்கான அதிக மதிப்பு என்று கூறலாம், ஆனால் கார்னிவல் மற்றும் வெல்ஃபையர் ஆகியவை பின் இருக்கை ஆடம்பரங்களைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் கார்னிவல் வெல்ஃபயரை விட மிகவும் மலிவானது. வெல்ஃபயர் ஒரு ப்ளஷர் கேபினைக் கொண்டு உயர்ந்து இருப்பதோடு,  ஒரு கோடி ரூபாய் விலையில் சொகுசு செடான் அல்லது எஸ்யூவிக்கு சரியான மாற்றாக விரும்புபவர்களுக்கானதாக உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI