New Honda Amaze: எதிர்பார்ப்புகளை தூக்கிபிடித்து வெளியானது புதிய ஹோண்டா அமேஸ், விலை கம்மி, மைலேஜ் இவ்வளவா?
New Honda Amaze Launched: ஹோண்டா நிறுவனம் புதிய தலைமுறை அமேஸ் காம்பாக்ட் செடானை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

New Honda Amaze Launched: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹோண்டாவின், புதிய தலைமுறை அமேஸ் காம்பாக்ட் செடானின் விலை ரூ.7.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹோண்ட அமேஸ் 2025 அறிமுகம்:
ஹோண்டா நிறுவனம் புதிய தலைமுறை அமேஸ் காம்பாக்ட் செடானை இந்தியாவில் ரூ.7.99 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. தானியங்கி CVT அமேஸ் எடிஷனின் விலை ரூ.9.19 லட்சத்தில் தொடங்குகிறது. அதே சமயம் டாப்-எண்ட் ஆட்டோமேடிக் அமேஸ் எடிஷனின் விலை ரூ.10.89 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சலுகையில் மொத்தம் ஆறு வண்ணங்கள் மற்றும் மூன்று எடிஷன்கள் உள்ளன.
Just In




ஹோண்டா அமேஸ் இன்ஜின் விவரங்கள்
புதிய தலைமுறை அமேஸ் சிட்டி பிளாட்ஃபார்ம் அடிப்படையிலானது, அதே நேரத்தில் ஸ்டைலிங் எலிவேட் மற்றும் சிட்டியிலிருந்தும் உத்வேகம் பெற்றுள்ளது. 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தை கொண்டுள்ள புதிய அமேஸ், 90 bhp மற்றும் 110 Nm டார்க் கொண்ட 1.2l பெட்ரோல் இன்ஜினை கொண்டு இயங்குகிறது. புதிய அமேஸின் ஆட்டோமேடிக் எடிஷன் லிட்டருக்கு 19.46 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்டாண்டர்ட் அமேஸ் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் வருகிறது. விருப்பத்தேர்வில் இது பேடல் ஷிஃப்டர்களுடன் கூடிய CVT ஆட்டோமேட்டிக்கைப் பெறுகிறது.
ஹோண்டா அமேஸ் வடிவமைப்பு விவரங்கள்:
புதிய அமேஸ் இப்போது ஒரு வித்தியாசமான தோற்றத்தைப் பெறுகிறது. முன்புறம் கிரில்லின் அடிப்படையில் எலிவேட்டால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பல வழிகளில் பின்புற ஸ்டைலிங் சிட்டி மாடலிலிருந்து கவரப்பட்டுள்ளது.
உட்புறத்தில், புதிய அமேஸ் எலிவேட் மற்றும் சிட்டி கார் மாடல்களின் கலவையுடன் சுத்தமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அதே க்ளைமேட் கண்ட்ரோல் பேனலுடன் தொடுதிரை தொடர்கிறது. பேட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் பயனாளர்கள் நன்கு தெரிந்ததே. அமேஸில் ஸ்டீயரிங் வித்தியாசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோண்டா அமேஸ் தொழில்நுட்ப அம்சங்கள்:
அம்சங்களைப் பொறுத்தவரை, புதிய அமேஸில் எல்இடி விளக்குகள், ADAS அம்சங்கள், காலநிலை கட்டுப்பாடு, பின்புற இருக்கை ஆர்ம்ரெஸ்ட், பின்புற கேமரா, 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், லேன் வாட்ச் கேமரா, கனெக்டட் கார் தொழில்நுட்பம், பின்புற வென்ட்கள், 6 ஏர்பேக்குகள் போன்றவற்றைப் பெறுகிறது. இருப்பினும், இது 360 டிகிரி கேமரா மற்றும் சன்ரூஃப் போன்ற அம்சங்களை கொண்டிருக்கவில்லை. ஆனால் நாங்கள் முன்பு பிரத்தியேகமாக அறிவித்தபடி, ADAS தொழில்நுட்பத்தை பெறும் முதல் சிறிய செடான் அமேஸ் கார் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. அமேஸ் 416 லிட்டர் பூட் திறன் கொண்டுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய அமேஸ் ஆனது, தொடர்ந்து மாருதி சுசூகி டிசையர், டாடா டிகோர் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் போன்ற கார் மாடலுக்கு போட்டியாக இருக்கும்.