அன்பார்ந்த ABP Nadu வாசகர்களே!


என்ன செய்தார் 'ஜென்ம குரு'  என்று பலரும் கேட்டிருக்கலாம். ஜென்மத்திலே அதாவது ராசியிலேயே குரு பகவான் வரும்போது பல சிக்கல்களையும், சில பெரிய மாற்றங்களையும் உங்களுக்கு கொண்டு வந்திருப்பார்.   அறிவுப்பூர்வமான ஆற்றலுடன்  நல்ல சிந்தனை பலமிக்க உங்களுக்கு எதிர்காலம் எப்படி இருக்கும்?


கடந்த ஆண்டு என்ன நடந்தது? பெரியதாக ஏற்றத்தாழ்வு இல்லாமல்,  சீரான பாதையில் சிலர் சென்றிருக்கலாம்.  இன்னும் சிலர் அழுத்தமான மனநிலையை சந்தித்திருக்கலாம். வாழ்க்கைத் துணையோடு சற்று சிக்கல்களை சந்தித்து பின் சுமூகமாகவும் மாறி இருக்கலாம். ஓடிக்கொண்டே இருக்கும் தெளிந்த நீரோடை போன்றவர் நீங்கள் குரு ரிஷபத்தில் இருந்து 2025இல் மிதுனத்திற்கு மாறுகிறார்.


மிதுனம் உங்களுக்கு பிடித்தமான வீடு ரிஷபத்திற்கு ஐந்தாம் அதிபதியும், இரண்டாம் அதிபதியுமான புதன் வீடு. புத்திசாலியான நீங்கள் அதிபுத்திசாலியாக மாறுவீர்.  கடந்த காலங்களில் கற்றுக் கொண்ட பாடங்களை வைத்து புதிய பாதையை அமைக்க போகிறீர்கள்.  வாருங்கள் சுருக்கமாக இந்த 2025 எப்படி இருக்கிறது? என்பதை பார்க்கலாம்.


குரு பெயர்ச்சி 2025:


குரு பெயர்ச்சி பொறுத்தவரை பிப்ரவரி  7ஆம் தேதி வரை குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து பின்னோக்கி 12ஆம் வீட்டை பார்த்தபடி செல்கிறார். எதிரிகள் உங்களை மறைந்திருந்து தான் பார்க்க முடியும். கிட்டத்தட்ட ஜனவரியில் இந்த பதிவை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், உங்களுக்கு தற்போது அது போன்ற காரியங்கள் தான் நடந்து கொண்டிருக்கும் 12 ஆம் வீட்டில் குரு இருப்பது பண விரயத்தையும்,  மனசு அலைச்சலையும், மற்றவர்களின் பேச்சுக்கு ஆளாவதையும் காட்டுகிறது.  சிலர் பயணங்களில் மகிழ்ச்சி அடையலாம். சிலர் புதிய முயற்சிக்காக காத்திருக்கலாம். ஆனால் இப்படியான சூழ்நிலை தான் பிப்ரவரி ஏழு வரை செல்லும். வாருங்கள்  பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.


ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு மாறும் குரு பகவான் :


குரு பெயர்ச்சியின் முழு அம்சத்தையும் வேறு பதிவில் முழுதாக பார்ப்போம். ஆனால், சுருக்கமாக குரு ஒரு சில வீடுகளில் பெயர்ச்சியாகும் போது அந்த ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய யோகத்தை கொடுப்பார்.  அப்படி ஒரு பெயர்ச்சி தான் உங்களுக்கு இந்த வருடம் நடக்கவிருக்கிறது. இரண்டாம் இடத்தில் குரு பகவான் வந்த உடனேயே  முதலில் அவர் உங்களுக்கு செய்யப்போவது நிலம், வீடு இடம் தொடர்பான காரியங்களில் வெற்றியை கொடுப்பது.


வீடு, மனை, வாகன யோகம்:


நான்காம் வீட்டிற்கு பதினொன்றாம் வீட்டில் குரு பகவான் வரும் பொழுது, நீங்கள் இருக்கின்ற இடம் அல்லது நிலம்  அல்லது காலி மனை அல்லது வீடு  போன்ற இருப்பிடம் தொடர்பான எந்த காரியங்களில் உங்களுக்கு லாபத்தை தான் கொண்டு வரப் போகிறார்.  நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் என்று முயற்சிக்கும் அவர்களுக்கு இது ஒரு ஏற்ற காலகட்டம். குறிப்பாக, அடுத்து வரக்கூடிய வருடத்தில் ஒரு பிளாட்டாவது  நீங்கள் வாங்குவீர்கள். 


மனதிற்கு பிடித்தமான வாகனம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கூட இது ஒரு சூப்பரான காலகட்டம் தான்.   இந்த குரு பெயர்ச்சி பொருத்தவரை குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கான காலகட்டம்.   மற்ற கிரகங்களும் உங்களுக்கு ஒரு அளவுக்கு சாதகமான சூழ்நிலையில் தான் இருக்கிறது  குறிப்பாக  செவ்வாய்  ரிஷபத்திற்கு மூன்றாம் வீட்டில்    நீச்சம் அடைந்தாலும்  வருடத்தின் பிற்பாடு  நான்காம் இடத்தில்  கேதுடன் சேர்ந்து  விபரீத ராஜயோகத்தை கொண்டு வருவார்.   12ஆம் அதிபதி கேதுடன் சேரும்போது  கையில் பணம் சேரும்  வங்கியில் சேமிப்பு உயரும்  பெரிய பெரிய மனிதர்களின் தொடர்பு   கிட்டும்.  



 சித்தர்களின் ஆசிர்வாதம் உண்டு.   குருமார்களின் அன்பும் ஆதரவும் உண்டு.   இப்படி  குரு பெயர்ச்சி மட்டுமல்லாமல் மற்ற சில கிரக பயிற்சிகளும் உங்களுக்கு ஏதுவாக தான் இருக்கிறது.   இரண்டாம் இடத்தில் இருக்கும் குரு  உங்களின் எட்டாம் இடத்தை   பார்வையிடுகிறார்.  அப்படி என்றால்  மற்றவர்களின் பணம் தானே எட்டாம் இடம்.  நீங்கள் ஒரு வியாபாரியாகவோ, தொழிலதிபராகவோ இருந்தால் அடுத்தவர்கள் சம்பாதிப்பதை நீங்கள் சுலபமாக பெற்றுக் கொள்ளலாம்.


வாடிக்கையாளர்கள் உங்கள் கடைகளுக்கு அதிகப்படியாக வந்து சேருவார்கள்.  மற்ற ரகசிய காரியங்களும் கூட உங்களுக்கு சாதகமாக அமையும். உடல் ரீதியான மகிழ்ச்சியும் கிடைக்கும். எட்டாம் அதிபதி குரு  தன் வீட்டை தானே பார்ப்பார்.  நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்ள வைப்பார். ஒரு சிலர் கடல் கடந்து போவார்கள்.   காரிய சித்தி உண்டாகும். பத்தாம் வீட்டை பார்க்கும் போது  நீண்ட நாட்களாக தொழிலில் முடக்கும் சிக்கல் போன்றவை சந்தித்தவர்களுக்கு  அற்புதமான காலகட்டம்.


புதிய தொழில் தொடங்குவீர்கள்.  மிகப்பெரிய லாபத்தை பார்ப்பீர்கள்.  தொழில் மூலம் உங்களுக்குப் பெயரும் புகழும் கிடைக்கும். நீங்கள் ஒரு அலுவலகத்தில் தினமும் வேலை செய்பவராக இருந்தாலும் கூட,  புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டு.  மொத்தத்தில் 2025 குரு பெயர்ச்சியை பொருத்தவரை உங்களுக்கு சிறப்பு தான்.  அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கும் இது ஏற்ற காலகட்டம்.


ராகு கேது பெயர்ச்சி  2025:


ரிஷபத்திற்கு ராகு பத்தாம் இடத்தில் பெயர்ச்சி ஆகிறார். தொழிற் ஸ்தானத்தில் ராகு அமரும் போது உங்களுக்கு நல்ல வேலையை தான் உண்டாக்குவார்  ஒரு சிலருக்கு  ஒருவேளை அல்லாமல் இரண்டு மூன்று வேலைகளை பார்த்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிட்டும்.  எப்பொழுதும் ரிஷப ராசிக்கு ராகு நல்லதையே செய்வார் காரணம் ராகு, கேது ரிஷபத்தில் உச்சம் ஆவதால் ராகுவுக்கு பிடித்தமான வீடுகளில் ரிஷபம் ஒன்று.   திருமண காரியங்களை முன்பு நடத்துவார். அப்படி திருமணம் ஆனவர்களுக்கு சற்று என்று குழந்தை பெறும் உருவாகும். கர்ம ஸ்தானத்தில் ராகு அமரும்போது வீட்டில் குறிப்பாக நெருங்கிய உறவினர்கள் மத்தியில் ஒரு இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.   


உடல்நலத்தில் கவனம் தேவை:


நான்காம் வீட்டில் இருக்கும் கேது  வாடகை வீட்டிலிருந்தால் வீடு மாற்றத்தை உண்டாக்குவார். சொந்த வீட்டில் இருந்தால் வீட்டை மாற்றி அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வார்.  தாயாரின் உடல் நலத்தில் சற்று அக்கறை தேவை. வண்டி வாகனங்களில் கவனம் தேவை.  சிலருக்கு வாகனங்கள் பழுதாகி பின்பு நல்ல முறையில் சீராகி கைக்கு வரும்.  பத்தாம் இடத்து ராகு பொறுத்தவரை பனிரெண்டாம் இடத்திற்கு லாபஸ்தானத்தில் இருப்பதால் பிரயாணங்களை அதிகமாக மேற்கொள்ள வைக்கும்.  அப்படி பிரயாணங்கள் மூலமாக வெற்றியும் கிடைக்கும்.   பத்தாம் இடம் என்பது ஐந்தாம் இடத்திற்கு ஆறாம் இடமாக வருவதால்  விரும்பிய நபர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். 


திருமணம் யோகம்:


ரிஷப ராசிக்கு நடக்கவிருக்கும் நல்ல சம்பவங்களை நீங்கள் மனதார அனுபவிக்கலாம். இரண்டாம் இடத்தில் இருக்கும் குரு தொழிற் ஸ்தானத்தை பார்க்கிறார் தொழில் மேம்படும்.   குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார் உங்களுடைய சொல்வாக்கு செல்வாக்கு உயரும்.   திருமண காரியங்களில் நல்ல பேச்சு வார்த்தையும் குடும்பத்தாரோடு  இரு வீட்டார் சம்பந்தத்தோடு திருமணங்கள் நடக்க வாய்ப்புண்டு.   நாவடக்கத்தால் பெரிய பெரிய காரியங்களையும் நீங்கள்   சாதிக்கலாம்.   எதற்கும் பயப்படாமல் வாழ்க்கை முன்னேறிச் செல்லுங்கள்  கடவுள் உங்களை எப்பொழுதும்  ஆசீர்வதித்துக் கொண்டே இருப்பார்.