ஹோண்டா அமேஸ் (Honda Amaze) காரின் மூன்றாம் ஜென்ரேசன் மாடல் வரும் டிசம்பர் 4-ம் தேதி அறிமுகப்படுத்த இருப்பதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹோண்டா அமேஸ் புதிய மாடல் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில், அதன் மாடல், தொழில்நுட்ப வசதிகள், அப்டேட்கள் உள்ளிட்ட விவரங்கள் பற்றிய தகவல்கல் வெளியாகியுள்ளன. ஹோண்டா நிறுவனம் அமேஸ் புதிய மாடலின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. 2025 Honda Amaze மாடல் ஏற்கனவே வெளியாகிய அமேஸ் கார்களை விட புதிய வடிவமைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்லீக் ஹெட்லாம்ப்ஸ், புதிய வடிவமைப்புடன் இருக்கும் பம்பர், Fog லைட் என கார் டிசைன் முழுவதும் தற்கால பயனாளர்களின் ரசனைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. நியூஜென் அமேஸ் காரின் வடிவமைப்பில் ஹோண்டா சிட்டி, எலிவேட் உள்ளிட்ட மாடலின் சாயலும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. வடிவமைப்பை பொறுத்தவரையில், ஹோண்டா நிறுவனத்தின் மற்ற கார்களை போன்றே இருக்கும் LED DRL strips உடன் dual-barrel LED ஹெட்லைட்ஸ், ஹோண்டா சிட்டியில் இருப்பதை போலவே chrome bar, ஹோண்டா சிட்டியில் இருப்பதை போன்ற டெயில் லைட்ஸ் ஆகியவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Honda Amaze - இன்டீரியர்:
ஹோண்டா அமேஸ் காரின் உட்புறம் நிறம் கருப்பு மற்றும் beige என இரண்டு நிற தீம் கொண்டதாக உள்ளது. டேஷ்போர்ட் மூன்று செக்மண்டாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலே, ஃப்ரீ ஸ்டாண்டிங் 8 இன்ச் டச் ஸ்கிரீன், அதன் கீழே ஹோண்டா Accord -ல் கொடுக்கப்பட்டுள்ளதன்படி, ஏ.சி. வெண்ட் உடன் டேஷ்போர்டு இருக்கும்.
கியர் நாப், ஸ்டீரிங் வீல் ஆகியவையும் ஹோண்டா சிட்டி, எலிவேட் ஆகியவற்றில் உள்ளது போல டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது.
2025 ஹோண்டா அமேஸ் கார் ஒயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஆட்டோ ஏ.சி., சிங்கிள் பேன் சன்ரூப், ஆறு ஏர்பேக்ஸ், ரிவர்வ்யூ கேமரா, மற்ற கார்களில் இல்லாத புதிய advanced driver assistance systems (ADAS) இதில் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஜென்ரேசன் ஹோண்டா அமேஸ் முந்தைய மாடலில் உள்ள 2 லி பெட்ரோல் எஞ்ஜின் (90 PS/110 Nm) 5 ஸ்பீட் மெனுவல், CVT ஆப்சன்கள் உள்ளன.
விலை விவரம்:
2024 Honda Amaze-ன் விலை ரூ.7.50 (ex-showroom) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க..
Car loan Information:
Calculate Car Loan EMI