இத்தாலியை சேர்ந்த டுகாட்டி நிறுவனம் தனது புதிய பைக் மாடலான Desert-X அட்வென்ச்சரை,  இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அண்மையில் அறிமுகப்படுத்தியது. புதிய பைக்கிற்கான முன்பதிவும் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் ஏற்கனவே விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், புதிய வாகனத்தின் விநியோகம், ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என டுகாட்டி நிறுவனம் அறிவித்துள்ளது.


அதோடு,  நடப்பாண்டில் அறிமுகப்படுத்த உள்ள Panigale V4 R , Monster SP, Diavel V4, Streetfighter V4 SP2, Multistrada V4 Rally, Scrambler Icon 2G, Scrambler Full Throttle 2G, Scrambler Nightshift 2G மற்றும் ஸ்ட்ரீட்ஃபைட்டர் V4 லம்போர்கினி ஆகிய 9 வாகனங்களின் விலைப்பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.


 


விலை விவரம்:


டுகாட்டியின் புதிய டிசர்ட் பைக் இந்தியாவில் டிரையம்ப் டைகர் 900 ரேலி மற்றும் ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. இதன் விலை இந்திய சந்தையில் ரூ.17,91,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில், புதிய டிசர்ட் எக்ஸ் மோட்டார்சைக்கிள் டிரையம்ப் டைகர் 900 ரேலி, ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் மற்றும் பிஎம்டபிள்யூ F850 GS மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இன்ஜின் விவரங்கள்:


இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய DesertX அட்வென்ச்சர் மாடலில் 937 சிசி, L ட்வின் ரக இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இதே இன்ஜின் புதிய மான்ஸ்டர் மற்றும் மல்டிஸ்டிராடா வி2 பைக்குகளிலும் வழங்கப்பட்டு உள்ளது. எனினும், இந்த இன்ஜின் குறைந்த எடை மற்றும் அதிக திறன் கொண்ட வரையில் மாற்றப்பட்டு இருப்பதாக டுகாட்டி அறிவித்துள்ளது. அதன்படி,  புதிய இன்ஜின் 110 குதிரைகளின் சக்தி மற்றும் 6,500rpm இல்  92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை திறனை கொண்டுள்ளது. இதோடு 6 ஸ்பீடு கியர்பாக்ஸ்ம் வழங்கப்பட்டுள்ளது.


 


சிறப்பம்சங்கள்:


டுகாட்டி DesertX அட்வென்ச்சர் மாடலில் முழுமையான எல்.ஈ.டி விளக்குகள். ப்ளூடூத் சார்ந்த 5-இன்ச் TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஸ்போர்ட், டூரிங், அர்பன், வெட், ரேலி மற்றும் எண்டியூரோ என ஆறு விதமான ரைடிங் மோட்களையும், அதோடு  ஃபுல், ஹை, மீடியம் மற்றும் லோ என நான்கு வித பவர் மோட்களையும்  கொண்டுள்ளது.  இவை தவிர குரூயிஸ் கண்ட்ரோல், போஷ் IMU, என்ஜின் பிரேக் கண்ட்ரோல், டிராக்‌ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், பை-டைரெக்‌ஷனல் குயிக்‌ஷிஃப்டர், கார்னெரிங் ABS போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள  DesertX அட்வென்ச்சர் டூரர் மோட்டார் சைக்கிள் வெர்ஷனிலும் இதே அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கூடுதல் விவரங்கள்:


புதிய DesertX ஆனது 2019 ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்ட கான்செப்ட் மோட்டார் சைக்கிளின் ஸ்டைலிங் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  முன்பக்கத்தில் ட்வின்-பாட் முகப்பு விளக்கு, உயரமான விண்ட்ஸ்கிரீன், செமி ஃபேரிங் டிசைன், 21 லிட்டர் எரிபொருளை நிரப்பும் வகையிலான டேங்க், ஸ்பிலிட்-ஸ்டைல் ​​இருக்கைகள், பக்கவாட்டு எக்சாஸ்டர், பாஷ் பிளேட் மற்றும் டியூப்லெஸ்-டயர் இணக்கமான வயர்-ஸ்போக் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன.


Car loan Information:

Calculate Car Loan EMI