Acer Electric Scooter: ஏசர் நிறுவனம் தனது மின்சார ஸ்கூட்டரான MUVI 125 4G மாடலின் விலையை, இந்திய சந்தையில் ஒரு லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது.


மின்சார ஸ்கூட்டர் சந்தை:


உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மடிக்கணினிகளுக்கு பிரபலமான ஏசர் பிராண்ட், இந்திய இ-ஸ்கூட்டர் சந்தையில் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. அதன்படி, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  ஏசர் எம்யூவி 125 4ஜி எனும் மாடலின் விலை,  ரூ.1 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திங்க் eBikeGo பிரைவேட் லிமிடெட் வடிவமைத்து தயாரித்த இந்த மின்சார ஸ்கூட்டர்,  நகர்ப்புற பயணத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிலோ மிட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் எனவும், அதிகபட்சமாக மணிக்கு 75 கிமீ வேகத்தில் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள், தினசரி பயணிப்பவர்களுக்கு இது சரியான பொருத்தமாக வெளிவருவதாகவும், ஹைப்பர் லோக்கல் உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் விநியோகம் போன்ற பயன்பாடுகளில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஏசர் வாகனத்தின் சிறப்பம்சங்கள்:



  • மாற்றக்கூடிய பேட்டரிகள்: தொடர்ச்சியான சவாரிகள் மற்றும் தொந்தரவு இல்லாத சார்ஜிங்கை உறுதி செய்தல்.

  • தடையற்ற சவாரிக்கு ஏற்ப லேசான எடையுடன் நேர்த்தியான வடிவமைப்பு

  • 16-இன்ச் சக்கரங்கள்: பலதரப்பட்ட சாலைகளிலும் நிலையான பயணத்தை மேற்கொள்ள உதவும்

  • சமீபத்திய தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய செயல்திறன்

  • பயனாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைசேசன் செய்யும் வசதி உள்ளது -  வெள்ளை, கருப்பு மற்றும் சாம்பல் என மூன்று வெவ்வேறு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது


குறைந்த செலவினங்கள்:


 ஏசரின் MUVI 125 4G ஆனது இந்தியாவில் மின்சார வாகன தழுவலை ஊக்குவிக்கும் மத்திய மற்றும் மாநில அளவிலான அரசாங்க மானியங்களுக்கு தகுதி பெறுகிறது. இது எளிதில் மாற்றக்கூடிய துணைக்கருவிகள் மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவு ஆகியவை பயனாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. 


முன்பதிவு விவரங்கள்:


ஏசர் MUVI 125 4Gக்கான முன் பதிவுகள் விரைவில் கிடைக்கும். கூடுதலாக, டீலர்ஷிப் வாய்ப்புகளில் ஆர்வமுள்ளவர்களும் தங்கள் நோக்கத்தை வெளிப்படுத்தலாம். முன்பதிவு மற்றும் டீலர்ஷிப் விசாரணைகள் ஆகிய இரண்டிற்கும், acerelectric.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.  அனைத்து ஆர்டர்களும் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மூலம் பிரத்தியேகமாக செயலாக்கப்படும், வாடிக்கையாளர்கள் சிறந்த சேவை, பராமரிப்பு, உத்தரவாதம் மற்றும் ஆதரவைப் பெறுவதை உறுதிசெய்யும். இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு வலுவான விநியோகம் மற்றும் டீலர்ஷிப் நெட்வொர்க்கை நிறுவுதற்கான பணிகளை ஏசர் முன்னெடுத்துள்ளது. 


எதிர்கால திட்டங்கள்:


திங்க் eBikeGo பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டாக்டர் இர்பான் கான் பேசுகையில், "Acer MUVI 125 4G பசுமையான எதிர்காலத்திற்கான எங்கள் பார்வையை பிரதிபலிக்கிறது. நகர்ப்புற பயணிகளுக்கு இது விருப்பமான தேர்வாக அமையும் என்று நம்புகிறோம்" என குறிப்பிட்டுள்ளார். MUVI 125 4G ஆனது இந்தியாவில் ஏசர் பிராண்டின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் EV மாடல் ஆகும். எதிர்காலத்தில், மின்-சைக்கிள்கள், மின்-பைக்குகள், இ-ட்ரைக்குகள் போன்ற பல 2 மற்றும் 3-சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.


Car loan Information:

Calculate Car Loan EMI