November Bike Sale: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த நவம்பர் மாதத்தில் அதிக இருசக்கர வாகனங்களை விற்றதில், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது.


நவம்பர் மாத இருசக்கர வாகன விற்பனை:


பண்டிகை காலத்தை ஒட்டி நவம்பர் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஏரளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதோடு, வாகனங்களுக்கு ஏராளமான சலுகைகளும் அள்ளி வீசப்பட்டன. இதனால், இருசக்கர வாகன விற்பனை என்பது அமோகமாக இருந்தது. இந்நிலையில், நவம்பர் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிக விற்பனையை பதிவு செய்த முதல் 4 நிறுவனங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நான்கு நிறுவனங்களும் இந்தியாவில் இருசக்கர வாகன சந்தையில் முதல் நான்கு இடங்களை தொடர்ந்து ஆக்கிரமித்து வருவது குறிப்பிடத்தக்கது.


ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை விவரம்:


நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளரான Hero MotoCorp, நவம்பர் 2023 இல் அதன் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் பிரிவுகளில் நல்ல விற்பனையைக் கண்டுள்ளது. அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பர் மாத விற்பனை கணிசமாக சரிந்து இருந்தாலும், கடந்த ஆண்டில் இதே காலகட்டத்துடன்  ஒப்பிடுகையில் நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 


Hero MotoCorp விற்பனை (மோட்டார் சைக்கிள் + ஸ்கூட்டர்) (உள்நாட்டு + ஏற்றுமதி) 2023 நவம்பரில் 25.61 சதவீதம் மேம்பட்டு 4,91,050 யூனிட்களாக பதிவாகியுள்ளது.  2022 நவம்பரில் 3,90,932 யூனிட்கள் மட்டுமே விற்பனயாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் பிரிவுகள் மற்றும் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதிகள் ஆகிய இரண்டிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2023 நவம்பரில் விற்பனை செய்யப்பட்ட 3,52,834 யூனிட்களில் இருந்து கடந்த மாத விற்பனை 25.07 சதவிகிதம் அதிகரித்து 4,41,276 யூனிட்களாக அதிகரித்துள்ளது.


பஜாஜ் ஆட்டோ விற்பனை விவரம்:


பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது மொத்த வாகன விற்பனையில் 31 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. அதன்படி, கடந்த மாதம் அந்நிறுவனம் 4,03,003 யூனிட்களை விற்பனை செய்த நிலையில், கடந்த ஆண்டு இதே மாதத்தில் 3,06,719 வாகனங்களை விற்றது குறிப்பிடத்தக்கது.


டிவிஎஸ் விற்பனை விவரம்:


TVS மோட்டார் நிறுவனம் 2023 நவம்பரில் விற்பனையின் அடிப்படையில் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தமாக 3,64,231 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட 2,77,123 யூனிட்களுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு 31 சதவிகித வளர்ச்சி பதிவாகியுள்ளது. இருப்பினும் 2023 அக்டோபரில் 4,34,714 யூனிட்களுடன் ஒப்பிடும்போது நவம்பர் மாத விற்பனை சரிவை சந்தித்துள்ளது.


ராயல் என்ஃபீல்ட் விவரம்:


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விற்பனை செய்யப்பட்ட 70 ஆயிரத்து 766 யூனிட்களில் இருந்து,  13.40 சதவிகிதம் வளர்ச்சி கண்டு கடந்த  நவம்பரில் 80 ஆயிரத்து 251 யூனிட்களை  விற்பனை செய்துள்ளதாக ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. இது 9,485 யூனிட் அளவு வளர்ச்சியாகும். 350சிசி மற்றும் 350சிசிக்கு மேல் உள்ள பிரிவுகளில், உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டிலும் மேம்பட்ட விற்பனை காணப்பட்டது. 2023 அக்டோபரில் விற்கப்பட்ட 84,435 யூனிட்களிலிருந்து மாத விற்பனையானது 4.96 சதவிகிதம் குறைந்துள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI