திருட்டு தொழிலில் பல வகைகள் இருந்தாலும் எப்பேர்பட்ட கார்களையும் தூக்கிக் கொண்டும் போகும் திருடர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். குறிப்பாக, இதற்கென்றே இந்தியாவில் பெரிய சிண்டிகேட் இருப்பதாக சொல்கிறது காவல்துறை வட்டாரம். கார்களை ஒரு மாநிலத்தில் இருந்து திருடி, இன்னொரு மாநிலத்தில் நம்பர் பிளேட் உள்ளிட்டவகைகளை மாற்றி விற்பது, கார்களின் பாகங்களை அக்கக்காக கழற்றி விற்பது என இந்த தொழில் பரந்து விரிந்துள்ளதாகவும் அதே நேரத்தில் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கும் திருடப்படும் கார்களே பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் திருடப்படும் டாப் 5 கார்கள்
இந்நிலையில், இந்தியாவில் எந்தெந்த கார்கள் அதிக அளவில் திருடப்படுகின்றன என்ற பட்டியலை தேடினோம். அதில் முக்கியமாக முதல் 5 இடத்தை பிடிக்கும் கார்களின் பட்டியலை இங்கே தொகுத்திருக்கிறோம்.
- மாருதி சுசுகியின் வேகனார் – கார் வகை அந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதற்கு காரணம். இந்த காரை அதிக நபர்கள் வாங்க விருப்பப்படுவதும், இதன் உதிரி பாகங்களுக்கு நல்ல டிமாண்ட் இருப்பதுமே காரணம் என கூறப்படுகிறது.
- இரண்டாவது இடத்தில் அதே மாருதி நிறுவன தயாரிப்பான Swift ரக கார்கள் இருக்கின்றன. அதற்கு காரணமாக கூறப்படுவது என்னவெனில், இந்த கார்கள் நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், எளிதாக திருடப்பட்ட கார்களை மாற்றவும், மறைக்கவும் முடியும்.
- மூன்றாவது இடத்தில், ஹூண்டாய் நிறுவனத்தின் Creta வகை கார்கள் வருகின்றன. இதனை திருட்டு பயலுகள், அதிகமாக விரும்பி திருடுவதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் மேற்குறிப்பிட்ட இரண்டு கார்களைவிடவும் இது சொகுசு கார் ரக கார் என்பதாலும் SUV வகை கார்களுக்கு சந்தைகளில் நல்ல டிமாண்டுகள் இருப்பதும் காரணமாக சொல்கிறார்கள் கார் ஆய்வாளர்கள்.
- அதே நேரத்தில் 4வது இடத்திலும் ஹூண்டாய் நிறுவன காரான Grand I10 கார்கள் இருக்கின்றன. இந்த கார்களை நடுத்தர குடும்பத்தினர் மறுவிற்பனையில் விரும்பி வாங்குவதும் இதன் உதிரி பாகங்களுக்கு நல்ல டிமாண்ட் இருப்பதும் காரணமாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
- ஐந்தாவது இடத்தில் இருப்பது மாருதி சுசுகி நிறுவன தயாரிப்பான Swift Dzire கார்கள். – காரணம் வாடகை கார்கள் ஓட்டுவோர் அதிக அளவில் இந்த கார்களை வாங்குவதாலும் மறுவிற்பனை சந்தைகளில் இந்த காருக்கு நல்ல விலை போவதாலும் இந்த காரும் திருடப்படும் கார்கள் பட்டியலில் முதல் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது
பிசினஸ் ஸ்டாண்டர்ட் நிறுவனத்தின் ஆய்வின் படி இந்தியாவில் திருடப்படும் கார்களில் 47 சதவீதம் மாருதி சுசுகி நிறுவன கார்களாக இருப்பதாகவும் டெல்லி NCR பகுதிகளெல்லாம் சராசரியாக 14 நிமிடங்களுக்கு ஒரு வாகனம் திருப்பட்டு வருவதாகவும் அதிர்ச்சியான தகவல்கள் இது குறித்து விசாரிக்கும்போது வெளியாகியிருக்கின்றன.
உங்கள் கார்களை பாதுகாப்பாக வைக்க என்ன செய்ய வேண்டும் ?
- ஜி.பி.எஸ் டிராக்கரை காரில் கட்டாயம் பொருத்தி வையுங்கள்
- Steering Wheel Lock பயன்படுத்துங்கள்
- Immobilizer / அலாரம் சிஸ்டங்கள் செயல்பாட்டில் இருப்பதை எப்போதும் உறுதிப்படுத்துங்கள்
- இரவு நேரங்களில் சிசிடிவி உள்ள இடங்களில் மட்டுமே உங்களது காரை நிறுத்துங்கள்
- ஸ்மார்ட் சாவியை பாதுகாப்பான RFID Pouch- வைத்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்
Car loan Information:
Calculate Car Loan EMI