popular cars of 2023: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டில் அறிமுகமாகி, வாடிக்கையாளர்களை கவர்ந்த முதன்மையான கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


இந்திய ஆட்டோமொபைல் சந்தை:


பல கார் உற்பத்தியாளர்களும் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டில் பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்தினர். செடான்கள், ஹேட்ச்பேக்குகள், SUVகள் மட்டுமின்றி க்ராஸ்ஓவர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் கூட 2023 இல் புதிய கார்கள் அறிமுகமாகின. அந்த வகையில் நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு இந்திய வாகனத் துறையில் முத்திரை பதித்த ஐந்து முதன்மையான கார்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


Hyundai Verna:


புதுப்பிக்கப்பட்ட ஹூண்டாய் வெர்னா கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய தலைமுறை செடான் சக்திவாய்ந்த பவர்டிரெய்ன் விருப்பங்களுடன் ஒரு பெரிய வெளிப்புற மற்றும் உட்புற மாற்றத்துடன் வந்தது.  EX, S, SX மற்றும் SX (O) ஆகிய நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் தொடக்க விலை,  10.96 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  GNCAP கிராஷ் சோதனைகளில் இந்த மாடல் முழு ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது.


Maruti Suzuki Fronx:


மாருதி சுஸுகி பலெனோ அடிப்படையிலான கிராஸ்ஓவர் மாடலான ஃப்ரான்க்ஸ் கார் மாடலை ஏப்ரல் மாதம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.  அதன் வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் செயல்திறனுக்காக இந்த மாடல் 2023 ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாகும். 5 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் தொடக்க விலை ரூ. 7.46 லட்சம் ஆகும். கடந்த மாதம், இந்திய வாகன தயாரிப்பு நிறுவனம் Fronx உடன் 75,000 யூனிட் விற்பனை மைல்கல்லை எட்டியது. 


Kia Seltos:


கொரிய வாகனத் தயாரிப்பாளரான கியா அதன் மிகவும் பிரபலமான SUVயான செல்டோஸின் ஃபேஸ்லிஃப்ட் வேரியண்ட கடந்த ஜுலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. புதுப்பிக்கப்பட்ட நடுத்தர அளவிலான SUV, லெவல் 2 ADAS தொகுப்பு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் பெரிய மேம்படுத்தல்களைப் பெற்றது. ஆண்டின் பிற்பகுதியில், பல சந்தர்ப்பங்களில் SUV விலைகள் திருத்தப்பட்டன. தற்போது, ​​செல்டோஸ் ஆரம்ப விலை ரூ. 10.90 லட்சம் ஆக உள்ளது.


Honda Elevate


ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யூவியான எலிவேட்டை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த SUV காரின் தொடக்க விலை ரூ. 11 லட்சம்  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எலிவேட் மாடல் அதன் விசாலமான கேபின், சுத்திகரிக்கப்பட்ட இன்ஜின் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் அதன் போட்டியாளர்களுக்கு நெருக்கடி தருகிறது.


Hyundai Exter:


ஹூண்டாய் எக்ஸ்டெர் அதன் பிரிவில் கேம்-சேஞ்சர் தயாரிப்பு என்பதை நிரூபித்துள்ளதோடு,  கொரிய வாகன உற்பத்தியாளருக்கு நல்ல விற்பனையையும் கொண்டு வந்துள்ளது. Grand i10 Nios-அடிப்படையிலான SUV ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடல் சமீபத்தில் இந்தியாவில் ஒரு லட்சம் முன்பதிவு என்ற மைல்கல்லை எட்டியது. மேலும், ICOTY 2024 இல் இந்த ஆண்டின் சிறந்த இந்திய கார் விருதையும் Exter பெற்றுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI