கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களின் முதன்மைத் தேர்வாக இருப்பது பட்ஜெட் கார்கள்தான். குறிப்பாக, சிறிய ரக கார்களையே தேர்வு செய்வார்கள். மைலேஜ், பிக்கப், பாதுகாப்பு அம்சம் ஆகியவற்றை அவர்கள் கருத்தில் கொண்டாலும் விலைதான் அவர்களின் பிரதானமாக இருக்கும்.
இவ்வாறு பட்ஜெட் விலையில் கார்கள் வாங்கும்போது வாடிக்கையாளர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் சிரமம் என்னென்ன? என்பதையும், அதற்கான தீர்வையும் கீழே காணலாம்.
1. எஞ்ஜின் பிரச்சினை:
பட்ஜெட் கார்கள் பெரும்பாலும் சந்திக்கும் சிக்கல்களில் முதன்மையானது எஞ்ஜின் பிரச்சினை. ஆயில் லீக் காரணமாக இந்த பிரச்சினை உண்டாகுகிறது. அதிக சூடாவது இதற்கு காரணம். ரேடியேட்டர் சேதம் அடைந்தால் அல்லது தெர்மோஸ்டாட் முறையாக வேலை செய்யாவிட்டால் இந்த பிரச்சினை ஏற்படும். இதனால், ஆயில் லீக் ஆகிறதா? என்றும், ரேடியேட்டரில் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறதா? என்றும் அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். டைமிங் பெல்ட் சேதம் அடைந்தாலும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இது சேதம் அடைந்தால் எஞ்ஜின் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இது மிகப்பெரிய செலவை ஏற்படுத்திவிடும்.
2. எலக்ட்ரிக்கல் சிக்கல்:
பட்ஜெட் கார்களில் பெரும்பாலும் சிக்கலை உண்டாக்குவது பேட்டரிகள். இந்த கார்களில் அடிக்கடி பேட்டரி தொய்வான நிலைக்கு செல்வதால் வாகனங்கள் சிரமத்திற்கு ஆளாகின்றன. பேட்டரி மிகவும் பழையது என்றால் அதன் தாக்கம் காரின் செயல்பாட்டில் கடுமையாக எதிரொலிக்கும். முகப்பு விளக்குகள் உள்ளிட்ட பலவற்றின் செயல்பாட்டை இது பாதிக்கும். அதனால், பேட்டரியின் செயல்பாட்டை அடிக்கடி பரிசோதிப்பது நல்லது ஆகும்.
3. கியர் பிரச்சினை:
பட்ஜெட் கார்களில் சிக்கலை ஏற்படுத்தும் மற்றொரு விஷயமாக கியர் உள்ளது. மேனுவல் பட்ஜெட் கார்களில் கியர்கள் பழைய முறையிலே இருக்கும். இதை முறையாக கையாள வேண்டும். கியர் போடுவதில் அடிக்கடி தவறு செய்தாலோ அல்லது தொடர்ந்து பயன்படுத்தும்போதோ கியர் மாற்றுவதில் சிரமம் ஏற்படும். ப்ளூய்ட் லீக் காரணமாகவும் இந்த சிரமம் ஏற்படலாம். இதனால், பட்ஜெட் கார்களில் கியர் மாற்றும்போது சிரமம் இல்லாமல் கையாள வேண்டும்.
4. டயர்கள்:
பட்ஜெட் கார்கள் பல்வேறு அம்சங்களை நமக்குத் தந்தாலும் அதில் பிரதான பிரச்சினையாக அமைவது டயர்கள் ஆகும். இது காரின் பாதுகாப்பிலே கேள்விக்குறியாக்கிவிடும். கார்களின் டயர்கள் பராமரிப்பு என்பது மிகவும் முக்கியம். தற்போது பெரும்பாலான கார்கள் ட்யூப்லெஸ் டயராக இருந்தாலும் அதன் செயல்பாடு, தரம் எப்படி இருக்கிறது? என்பதை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.
5. ப்ரேக் மற்றும் ஸ்டீரிங்:
பட்ஜெட் கார்களில் ப்ரேக்குகள் விரைவில் தேயும் வாய்ப்புகள் பிரகாசம் ஆகும். தேய்ந்த ப்ரேக்குகள், சத்தம் வரும் ப்ரேக்குகள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறும். காரின் ஸ்டீரிங்கிலும் சிக்கல்கள் எழ வாய்ப்பு உள்ளது. ஸ்டீரிங் நாம் கையாள்வதற்கு லாவகமானதாக இல்லாமல் மிகவும் கனமாக இருந்தாலோ அல்லது ஸ்டீரிங் நமது கட்டுப்பாட்டில் இல்லாமல் போல இருந்தாலோ அது ஸ்டீரி் ஆயில் அல்லது மோட்டாரில் உள்ள பிரச்சினையாக இருக்கும். இதனால், அது தொடக்கத்திலே சிக்கலை உண்டாக்கினால் அதை சரி செய்ய வேண்டும்.
Car loan Information:
Calculate Car Loan EMI