Child Safety Cars: இந்திய சந்தையில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான, ரேட்டிங்கை கொண்டுள்ள டாப் 6 கார்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.


கார்களில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள்:


பணக்காரர்களுக்கான வாகனம் என்றிருந்த காரின் நிலை தற்போது முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. அதன்படி, நடுத்தர வர்கத்தைச் சேர்ந்த குடும்பத்தினரிடையே கார்களின் பயன்பாடு என்பது பெருமளவு அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், குழந்தைகள் மற்றும் மனைவி என அனைவரும் குடும்பமாகவும், வசதியாகவும் பயணிக்க கார் சிறந்தது என பலரும் கருதுவதே. பல வீடுகளில் குழந்தைகளை கருத்தில் கொண்டே கார் வாங்குகின்றனர். இந்நிலையில், இந்திய சந்தையில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக, அதிக ரேட்டிங் பெற்ற டாப் 6 கார்களின் விவரங்களை இங்கு அறியலாம். 


டாடா ஹாரியர்


டாடா ஹாரியர் மிகவும் பாதுகாப்பான இந்திய கார்களில் ஒன்றாக மாறியுள்ளது. இது புதிய கார் மதிப்பீட்டு சோதனையில், 49-க்கு 45 புள்ளிகளை பெற்றுள்ளது. அதன்படி, குழந்தைகளுக்கான பாதுகாப்பு மதிப்பீட்டுடன் 5 ஸ்டார் ரெட்டிங்குடன் வருகிறது. சஃபாரியின் ஆரம்ப விலை ரூ.15.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


ஃபோக்ஸ்வாகன் விர்டஸ்:


ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் ஒரு சிறந்த ஆர்வத்தை தூண்டக்கூடிய செடான் கார் மாடல் ஆகும். அதன் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு காரணமாக இந்த கார் மிகவும் பிரபலமானது. குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனையில் 49-க்கு 42 புள்ளிகளை பெற்று, 5 ஸ்டார்களை கொண்டுள்ளது. இதன் தொடக்க விலை 11 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஸ்கோடா குஷாக்


ஸ்கோடா குஷாக் அதன் செயல்திறன் மற்றும் பாதுகாப்பிற்காக அறியப்பட்ட மற்றொரு பிரபலமான ஆர்வத்தை தூண்டக் கூடிய கார் மாடல் ஆகும். இது உலகளாவிய NCAP இல் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. அதோடு,  42.00/49.00 மதிப்பெண்களை குவித்துள்ளது. இதன் தொடக்க விலை 11 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


டாடா நெக்ஸான்


டாடா நெக்ஸான் இந்தியர்களுக்கு ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கக் கூடிய பாதுகாப்பான கார்களில் ஒன்றாகும். இது குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனையில் 5-ஸ்டார் ரேட்டிங்கையும், 49-க்கு 44.52 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. இதன் தொடக்க விலை 8 லட்சம்  ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஹூண்டாய் வெர்னா


வெர்னாவின் புதிய தலைமுறை செடான் சந்தையில் செயல்திறன் மற்றும் பாதுகாப்புடன் பேசப்படும் ஒரு புள்ளியாக மாறியுள்ளது. இது குழந்தைகளுக்கான பாதுகாப்பு தர சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் மற்றும் 49-க்கு 42 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இதன் தொடக்க விலை 13 லட்சத்து 76 ஆயிரம்  ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


டாடா சஃபாரி


டாடா சஃபாரி மற்றும் ஹாரியர் ஆகியவை இந்தியாவில் விற்கப்படும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாகும். இது 45.00/49.00 மதிப்பெண்ணுடன், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 5-ஸ்டார் ரேட்டிங்கை கொண்டுள்ளது. இதன் தொடக்க விலை 16 லட்சத்து 19 ஆயிரம்  ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI