உலகளவில் கார் விற்பனையில் மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி. இந்தியாவிலும் எம்ஜி கார்களுக்கு இன்று தனி வரவேற்பு உள்ளது. மின்சார கார்கள் தயாரிப்பிலும் MG Windsor கார் முதன்மையானதாக திகழ்கிறது.
MG Windsor:
எம்ஜி நிறுவனத்தின் புகழ்பெற்ற கார்களில் ஒன்று MG Windsor EV. இந்த காரின் தரம், மைலேஜ், விலை குறித்து கீழே விரிவாக காணலாம்.
இந்த காரின் விலை ரூபாய் 15 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 19.63 லட்சம் ஆகும் இந்த கார் 2 வகையான ஆற்றல் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட்களில் உள்ளது. 38 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் கொண்ட கார்களும், 59.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட கார்களும் இதில் உள்ளது.
38 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட MG Windsor EV 331 கிலோ மீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 59.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட கார் 449 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இந்த காரில் மொத்தம் 4 வேரியண்ட்கள் உள்ளது.
1. Windsor EV Excite:
எம்ஜி-யின் இந்த Windsor EV Excite காரில் 38 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 134 பிஎச்பி குதிரைத்திறன் பொருத்தப்பட்டுள்ளது. 200 என்எம் டார்க் இழுதிறன் பொருத்தப்பட்டுள்ளது. 331 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது
2. Windsor EV Exclusive:
எம்ஜி-யின் இந்த Windsor EV Exclusive காரின் விலை ரூபாய் 16.52 லட்சம் ஆகும். இந்த காரில் 38 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 200 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 331 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.
3. Windsor EV Essence:
இந்த எம்ஜி Windsor EV Essence காரின் விலை ரூபாய் 17.56 லட்சம் ஆகும். இந்த காரில் 38 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 200 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 331 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.
4.Windsor EV Inspire Limited:
எம்ஜி-யின் இந்த Windsor EV Inspire Limited காரின் விலை ரூபாய் 17.78 லட்சம் ஆகும். இந்த காரில் 38 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 134 பிஎச்பி குதிரை ஆற்றல் கொண்டது. 200 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 332 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.
5. Windsor EV Exclusive Pro:
இந்த Windsor EV Exclusive Pro காரில் 52.9 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 134 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 200 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 449 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதன் விலை ரூபாய் 18.46 லட்சம் ஆகும்.
6.Windsor EV Essence Pro:
இந்த காரில் 52.9 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த Windsor EV Essence Pro கார் 449 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இந்த கார் 200 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 134 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது.
இந்த காரின் பேட்டரியை சந்தா முறையில் சார்ஜ் செய்வதற்கான கட்டண முறையும் அமலில் உள்ளது. அந்த முறைப்படி இந்த காரை வாங்கினால் 3 லட்சம் ரூபாய் வரை விலை குறையும். அவ்வாறு வாங்கினால் கிலோமீட்டருக்கு சார்ஜ் செய்ய 3.5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த காரை மாத தவணையில் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 19 ஆயிரத்து 793 செலுத்தலாம்.
Car loan Information:
Calculate Car Loan EMI