MG Majestor SUV: MG நிறுவனத்தின் மெஜஸ்டர் 7 சீட்டர், மேம்படுத்தப்பட்ட பல தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
MG மெஜஸ்டர் எஸ்யுவி - அறிமுகம் எப்போது?
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் MG நிறுவனம் அண்மையில் M9 மின்சார எம்பிவி மற்றும் சைபர்ஸ்டர் EV ஆகிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டுமே, ப்ராண்டின் ப்ரீமியம் செலக்ட் டீலர்ஷிப்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் தனது போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தும் விதமாக, இந்திய சந்தையில் அடுத்ததாக அறிமுகப்படுத்த தனது மெஜஸ்டர் கார் மாடலை நிறுவனம் தயார்படுத்தி வருகிறது. இந்த ஃபுல்-சைஸ் எஸ்யுவி ஆனது, நடப்பாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அப்போது, இந்த கார் மே மாதமே விற்பனைக்கு கொண்டுவரப்படும் என கூறப்பட்டது. ஆனால், அது தொடர்ந்து தாமதமான நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு மெஜஸ்டர் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாக்கால விற்பனை சூழலை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் MG இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
MG மெஜஸ்டர் எஸ்யுவி - வெளிப்புற அம்சங்கள்
விவரங்கள் குறித்து பார்க்கையில், புதிய மெஜஸ்டர் கார் மாடலானது நாட்டில் ஏற்கனவே விற்பனையில் உள்ள க்ளோஸ்டரின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனாகும். ஆனால், இந்த காரின் அறிமுகத்திற்கு பிறகும், க்ளோஸ்டர் கார் மாடலை தொடர்ந்து விற்பனை செய்ய MG நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், மெஜஸ்டர் கார் மாடலானது நிறுவனத்தின் மூன்று வரிசை இருக்கை பிரிவில் மிகவும் ப்ரீமியம் கார் மாடலாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முற்றிலும் புதிய வெளிப்புற வடிவமைப்பை பெற உள்ள இந்த காரில், சர்வதேச சந்தையில் விற்பனை செய்யபப்டும் மேக்சஸ் D90 எஸ்யுவியின் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. முன்பக்கத்தில் க்ளோஸ் பிளாக்கில் செய்யப்பட்ட நம்பகமான க்ரில், இரண்டு பகல்நேரங்களில் ஒலிக்கும் டிஆர்எல்கள், தீவிரமான ஸ்டேன்சை உணர்த்தும் வகையிலான பெரிய முன்புற பம்பர், புதிய அலாய் வீல்கள், பின்பக்கத்தில் புதிய இணைக்கப்பட்ட எல்இடி டெயில் லேம்ப்கள் ஆகிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன. “Majestor” என்ற பேட்ஜும் பின்புறத்தில் வழங்கப்படுகிறது.
MG மெஜஸ்டர் எஸ்யுவி - உட்புற அம்சங்கள்
உட்புறத்தில் இடம்பெற உள்ள அம்சங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. அதேநேரம், 12.3 இன்ச் ஃப்ரீ ஸ்டேண்டிங் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டேஷ்போர்டில் லேசான திருத்தம் பெற்று, அம்சங்கள் மற்றும் வசதிகள் அடிப்படையில் அனைத்தையும் மெஜஸ்டர் தன்னகத்தே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, வெண்டிலேடட் மசாஜிங் முன்புற இருக்கைகள், 3 ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்டவற்றை பெறுகிறது. 7 பேரும் அமர்ந்து சொகுசாக பயணிக்கும் வகையில் விசாலமான இடவசதியை பெற உள்ளது.
MG மெஜஸ்டர் எஸ்யுவி - பாதுகாப்பு அம்சங்கள்
மெஜஸ்டர் கார் மாடலில் பயணிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதமாக லெவல் 2 ADAS வழங்கப்படும். அதில், லேன் டிபார்ட்சுர் வார்னிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், எமர்ஜென்சி ப்ரேகிங் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும். கூடுதலாக 6 ஏர்பேக்குகள், பார்கிங் சென்சார்கள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற வசதிகளும் வழங்கப்படலாம்.
MG மெஜஸ்டர் எஸ்யுவி - இன்ஜின் விவரங்கள்
மெஜஸ்டர் கார் மாடலில் 216bhp மற்றும் 479Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய மிகவும் பிரபலமான 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் இன்ஜின் இடம்பெறலாம். 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்டுள்ள இந்த காரில், பின்புற சக்கரங்களுக்கு ஆற்றல் கடத்தப்படுகிறது. க்ளோஸ்டரை போன்றே, இதிலும் 4 வீல் ட்ரைவ் ஆப்ஷனும் இதில் வழங்கப்படுகிறது.
MG மெஜஸ்டர் எஸ்யுவி - விலை, போட்டியாளர்கள்
MG நிறுவனத்தின்போர்ட்ஃபோலியோவில் க்ளோஸ்டர் கார் மாடலுக்கு மேலே மெஜஸ்டர் நிலைநிறுத்தப்பட உள்ளது.சொகுசு வசதிகள், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள், கட்டுமஸ்தான கட்டமைப்பு மற்றும் வலுவான செயல்திறன் காரணமாக இந்த காரின் தொடக்கவிலை ரூ.40 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம். மெஜஸ்டர் கார் மாடல் இந்திய சந்தையில் டொயோட்டாவின் ஃபார்ட்சுனரின் கார் மாடலுடன் நேரடியாக மோதும். இதன் விலை உள்நாட்டில் ரூ.33.43 லட்சம் தொடங்கி ரூ.51.44 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. விலை சற்றே குறைவானதாக இருந்தாலும், கூடுதல் விலைக்கு நிகரான மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மெஜஸ்டரில் நிரம்பி வழிகின்றன. இதுபோக ஜீப் மெரிடியன் மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகிய கார் மாடல்களிமிருந்தும் மெஜஸ்டர் போட்டியை எதிர்கொள்ளும்.
Car loan Information:
Calculate Car Loan EMI