2026 MG ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் புதிய விலை, திருத்தப்பட்ட தோற்றம் மற்றும் புதிய அம்சங்களை அம்சங்கள் என்னவென்று இத்தொகுப்பில் காணலாம்.
MG ஹெக்டர் 2026:
இந்த விலை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யூனிட்டுகளுக்கானது, இருப்பினும் இந்த சலுகை எத்தனை வாகனங்களுக்கு கிடைக்கும் என்பதை நிறுவனம் குறிப்பிடவில்லை.
எம்ஜி ஹெக்டர் முதன்முதலில் 2019 இல் இந்தியாவிற்கு வந்தது, அதன் பின்னர், இந்த எஸ்யூவி அதன் அம்சங்கள் மற்றும் பெரிய ஸ்பேஸ்க்காக பெயர் பெற்றது. இப்போது, புதிய ஃபேஸ்லிஃப்ட் மூலம், எம்.ஜி நிறுவனம் சில நுட்பமான ஆனால் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளது.
பவர்ஃபுல் தோற்றத்துடன் புதிய வடிவமைப்பு
புதிய எம்ஜி ஹெக்டருக்கு முன்பை விட புதிய தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் முற்றிலும் புதிய வடிவமைப்பைக் கொண்ட பெரிய கிரில் உள்ளது. இது காரின் தோற்றத்தை மேலும் பிரம்மாண்டமாக்குகிறது. பம்பர் சற்று திருத்தப்பட்டு, எஸ்யூவி-க்கு அதிக சக்திவாய்ந்த தோற்றத்தை அளிக்கிறது. இது மட்டுமில்லாமல் இரண்டு புதிய அலாய் வீல்களையும் சேர்க்கப்பட்டுள்ளது.
உள்ளே பீரிமியம் டச்:
ஹெக்டரின் உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது புதிய இருக்கை அமைப்பைக் கொண்டுள்ளது, இதனால் கேபினுக்கு அதிக பிரீமிய உணர்வு ஏற்படுகிறது. அதன் பெரிய, போர்ட்ரை ஸ்டைல் டச் ஸ்கீரின் இப்போது 14 அங்குலங்கள் அளவில் வைக்கப்பட்டுள்ள்து ஓட்டுநர் மற்றும் பயணி கை சைகைகள் மூலம் இசை மற்றும் காலநிலை கட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.
என்ஜின் எப்படி?
புதிய எம்ஜி ஹெக்டரின் எஞ்சின் மாறாமல் உள்ளது. இது 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சினை தொடர்ந்து வழங்குகிறது, இது மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. 7 இருக்கைகள் கொண்ட ஹெக்டர் பிளஸ் ₹17.29 லட்சத்தில் தொடங்குகிறது.
இது இரண்டாவது முறை:
MG ஹெக்டரின் இரண்டாவது ஃபேஸ்லிஃப்ட் இதுவாகும். கார் விற்பனையில் போட்டி கணிசமாக அதிகரித்திருக்கலாம் என்றாலும், புதிய ஹெக்டரில் உள்ள புதிய , அம்சங்கள் மற்றும் வசதியின் அடிப்படையில் ஒரு வலுவான மற்றும் கவர்ச்சிகரமான SUV ஆக உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI