MG Astor: எம்ஜி நிறுவனத்தின் புதிய எண்ட்ரி லெவல் ஸ்பிரிண்ட் மாறுபாட்டின் விலை சிட்ரோயன் சி3 ஏர்கிராஸின் ஆரம்ப விலைக்கு இணையாக உள்ளது.


MG Astor கார் மாடல்:


எம்ஜி மோட்டார் இந்தியா ஆஸ்டர் எஸ்யூவியின் வரிசையை மறுசீரமைத்துள்ளது. இதன் மூலம் புதிய எண்ட்ரி லெவல் ஸ்பிரிண்ட் வேரியண்டின் விலை 9 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிட்சைஸ் எஸ்யுவி செக்டாரில் கிரேட்டாவிற்கு கடும் போட்டியாளராக உள்ள எம்ஜியின் டாப் எண்ட் வேரியண்டான  Savvy Pro மாறுபாட்டின் விலை ரூ 17.88 லட்சத்தில் உள்ளது. ஆஸ்டர் அதன் டாப்-ஸ்பெக் டிரிமில் புதிய அம்சங்களைப் பெற்றுள்ளதோடு,  நாட்டில் உள்ள அனைத்து நடுத்தர SUVக்களிலும் மிகவும் மலிவு ஆரம்ப விலையையும் கொண்டுள்ளது.


2024 MG Astor: what’s new?


2024 ஆஸ்டர் கார் மாடல் ஐந்து புதிய டிரிம்களில் கிடைக்கிறது. அதாவது Sprint, Shine, Select, Sharp Pro மற்றும் Savvy Pro ஆகிய டிரிம்களில் விற்பனைக்கு வந்துள்ளது.  முன்னதாக இந்த மாடல் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் கீ ஆகிய டிரிம்களில் கிடைத்தது.  புதிய ஸ்பிரிண்ட் வேரியண்ட், இயற்கையாகவே ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது. முந்தைய ஸ்டைல் ​​என்ட்ரி வேரியன்ட் விலையான ரூ.10.81 லட்சத்திலிருந்து ரூ.83,000 அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. மேலும், டர்போ-பெட்ரோல் இன்ஜின், முன்பு மூன்று டிரிம்களில் கிடைத்தது, இப்போது டாப்-ஸ்பெக் Savvy Pro டிரிமில் கிடைக்கிறது.


2024 MG Astor: new features:


காற்றோட்டமான முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் போன்ற கூடுதல் அம்சங்களை 2024 ஆஸ்டர்மாடல் கொண்டுள்ளது. எல்.ஈ.டி முகப்பு விளக்குகள், பகல்நேரங்களிலும் ஒளிரும் விளக்குகள், டூயல்-டோன் இன்டீரியர், சாஃப்ட்-டச் டேஷ்போர்டு, லெதரால் மூடப்பட்ட ஸ்டீயரிங், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு மற்றும் 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரை போன்ற அம்சங்களுடன் எண்ட்ரி லெவல் ஆஸ்டர் ஸ்பிரிண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. MG ஆனது புதிய கனெக்டட் அம்சங்களுடன் i-Smart இன்ஃபோடெயின்மென்ட் மென்பொருளையும் மேம்படுத்தியுள்ளது.


பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்:


ஆஸ்டர் மாடலின் இன்ஜின் விருப்பங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 110hp, 144Nm, 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட், நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஐந்து-ஸ்பீடு மேனுவல் அல்லது 8-ஸ்பீட் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதோடு,  140hp, 220Nm, 1.3-லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆனது,  6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக்கை மட்டும் பெற்றுள்ளது.


மிட்-சைஸ் எஸ்யுவி சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா (அடுத்த வாரம் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்),  கியா செல்டோஸ் , மாருதி கிராண்ட் விட்டாரா , டொயோட்டா ஹைரைடர் , சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் ,  ஸ்கோடா குஷாக்  மற்றும்  ஃபோக்ஸ்வேகன் டைகன் ஆகியவற்றிலிருந்து ஆஸ்டர் கடுமையான போட்டியைக் எதிர்கொள்கிறது. இதன் மூலம் அடிப்படை மாறுபாட்டிலிருந்தே அதிக வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அம்சங்களுடன், மெதுவாக விற்பனையாகும் ஆஸ்டரின் ஈர்ப்பை அதிகரிக்க விலை குறப்பு போன்றநடவடிக்கைகளை MG மேற்கொண்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI