சமீபத்தில், எம்ஜி ஆஸ்டர் வாகனத்தின் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டோம். இந்த புதிய காம்பாக்ட் எஸ்யூவி ரூ.9.78 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் முன்பதிவு தொடங்கியவுடன், முதல் பகுதி கார்கள் 20 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. தீபாவளி பண்டிகையையொட்டி, 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. 2021 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் சுமார் 4,000 முதல் 5,000 கார்களை விற்பனை செய்து முடிக்க எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆஸ்டர் வாகனம் இரண்டு பெட்ரோல் எஞ்சின் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அறிமுக மாடலில் 1.5லிட்டர் பெட்ரோல் கொள்ளவுடன் 108bhp/144Nm வேகம் உள்ளது. மேலும், 1.3லி டர்போ பெட்ரோல் கொண்ட மாடலில் 138bhp/220Nm வேகம் உள்ளது.
ஆஸ்டர் வாகனங்களில் ஒன்பது வகை மாடல்கள் ஐந்து நிறங்களில் விற்பனைக்கு உள்ளது. பெர்சனல் அல் அசிஸ்டண்ட், அட்டனோமஸ் (லெவல் 2) டெக்னாலஜி கொண்ட மாடல் கார்களில், கூடுதல் வசதிகளாக 10.1 இன்ச் ஸ்க்ரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் க்ளஸ்டர், ஏர் ப்யூரிஃபையர், பனோரமிக் சன்ரூஃப், 17 இன்ச் அலாய்ஸ் போன்ற பிற அம்சங்களும் இடம் பெற்றுள்ளது.
ஆஸ்டர் கார் மாடல் டிஜிட்டல் சாவி கொண்டது. இதில், சாதாரன சாவியை பயன்படுத்தவில்லை என்றாலும், ப்ளூடூத் பயன்படுத்தி டிஜிட்டல் சாவி மூலம் வண்டியை இயக்கலாம். ஆஸ்டருக்கான முன்பதிவுகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் 2022-ம் ஆண்டு டெலிவரி ஸ்லாட்டுகளுக்கானது. எம்ஜி நிறுவனத்தின் நான்காவது தயாரிப்பான இந்த ஆஸ்டர் இப்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. போட்டி நிறைந்த எஸ்யூவி வாகனங்களுக்கு மத்தியில் இந்திய சந்தையில் முக்கிய இடத்தை ஆஸ்டர் வகை கார் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற முக்கிய செய்திகளைப் படிக்க:
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Car loan Information:
Calculate Car Loan EMI