Mercedes EQA: மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் EQA கார் மாடல் விலை, இந்திய சந்தையில் 66 லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மெர்சிடஸ் பென்ஸ் EQA:


Mercedes-Benz India நிறுவனம் ஆனது தனது EQA கார் மாடலை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரூ. 66 லட்சத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது உள்நாட்டில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் அந்த பிராண்டின் மின்சார கார் ஆகும். இது மேம்படுத்தப்பட்ட EQB 7-சீட்டர் SUV, பெரிய EQE SUV மற்றும் EQS செடான் ஆகியவற்றுடன் நிறுவனத்தின் இந்தியா EV லைன்-அப்பில் இணைகிறது. EQA க்கான முன்பதிவுகள்  திறக்கப்பட்டுள்ளன, டெலிவரிகள் ஜனவரி 2025 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


Mercedes EQA வெளிப்புறம்:


மெர்சிடிஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் ஈக்யூஏவை, இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது. இது கிராஸ்ஓவர் போன்ற ஸ்டைலிங்கைப் பெறுகிறது. முன்புற கிரில் பேனலில் மெர்சிடிஸ் சிக்னேச்சர் ஸ்டார் பேட்டர்ன் மற்றும் முன்பக்கத்தில் முழு அகல லைட் பார் உள்ளது. அதன் பின்புற வடிவமைப்பு EQB இலிருந்து ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் 19-இன்ச் 'ஏஎம்ஜி' அலாய்கள் ஸ்டேண்டர்டாக வருகின்றன. பயனாளர்கள் தேர்வு செய்ய போலார் ஒயிட், காஸ்மோஸ் பிளாக், மவுண்டன் கிரே, ஹைடெக் சில்வர், ஸ்பெக்ட்ரல் ப்ளூ, படகோனியா ரெட் மெட்டாலிக் மற்றும் மவுண்டன் கிரே மேக்னோ என, ஏழு வண்ண ஆப்ஷன்கள் உள்ளன.






Mercedes EQA உட்புற சிறப்பம்சங்கள்:


எலக்ட்ரிக் SUV ஆனது டாஷ்போர்டில் பின்-லைட் நட்சத்திர வடிவத்தையும், S-கிளாஸ் மற்றும் EQS போன்ற கதவு டிரிம் துண்டுகளையும் கொண்டுள்ளது. கூடுதலாக அப்ஹோல்ஸ்டரி மற்றும் ஏர் வென்ட்களில் ரோஸ் கோல்ட் சிறப்பம்சங்கள் உள்ளன. EQA ஆனது குபெர்டினோ லெதரெட் அப்ஹோல்ஸ்டரியை ஸ்டேண்டர்டாக கொண்டுள்ளது. இது டச்-கேபாசிடிவ் த்ரீ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, ஆக்மென்டட் ரியாலிட்டி நேவிகேஷன், மெர்க்கின் சமீபத்திய OS உடன் கூடிய 10.25 இன்ச் டச்ஸ்கிரீன், 360 டிகிரி கேமரா மற்றும் Dolby Atmos உடன் 710W 12-ஸ்பீக்கர் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.  பாதுகாப்பு கருவியைப் பொறுத்தவரை, EQA ஆனது ஏழு ஏர்பேக்குகள், பிளைண்ட் ஸ்பாட் கண்காணிப்பு மற்றும் ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட் போன்ற ADAS அம்சங்களைக் கொண்டுள்ளது.


Mercedes EQA பவர்டிரெய்ன், வரம்பு:


உள்நாட்டு சந்தையில் EQA ஆனது 190hp மற்றும் 385Nm பீக் டார்க்கை உருவாக்கும் திறன் கொண்ட,  எலெக்ட்ரிக் மோட்டாரை கொண்டுள்ளது. இது 70.5kWh பேட்டரி பேக்குடன் பொருத்தப்பட்டுள்ளது. EV ஆனது, பூஜ்ஜியத்திலுஇருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை, வெறும் 8.6 வினாடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 560கிமீ வரை பயணிக்கலாம் என கூறப்படுகிறது.  பேட்டரி 100kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது (35 நிமிடங்களில் 10-80 சதவீதம்). ஸ்டேண்டர்ட் 11kW AC சார்ஜர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 7 மணிநேரம் 15 நிமிடங்கள் எடுக்கும்.


Mercedes EQA போட்டியாளர்கள்:


Mercedes EQA ஆனது வால்வோ XC40 ரீசார்ஜ் , C40 ரீசார்ஜ் மற்றும் BMW iX1 போன்ற எண்ட்ரி லெவல்,  சொகுசு மின்சார SUVகளுடன் நேரடியாக போட்டியிடுகிறது. இது கியாவின் EV6 இலிருந்து போட்டியையும் எதிர்கொள்கிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI