சொகுசு கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மெர்சிடஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து புதிய மாடல் கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், பேட்ஜ் அடிப்படையில் மெர்சிடஸ் நிறுவனம் கார்களை விற்பனைக்கு கொண்டு வருகிறது. அந்த வகையில் அந்நிறுவனத்தின் 53 பேட்ஜில் ஏற்கனவே E 53 செடான், ஜிஎல்இ 53 கூப் - எஸ்யுவி மற்றும் இக்யூஎஸ் 53 செடான் ஆகிய மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ளன. அந்த பேட்ஜை சேர்ந்த நான்காவது மாடலாகவும், முதல் கப்ரியோலெட் மாடலாகவும் இந்திய சந்தையில் மெர்சிடஸ் நிறுவனம் புதிய காரை  அறிமுகப்படுத்தியுள்ளது.


புதிய கார் அறிமுகம்:


அதன்படி, நடப்பாண்டில் மெர்சிடஸ் நிறுவனத்தின் முதல் காராக AMG E53 4மேடிக்+ கப்ரியோலெட் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இதன் தொடக்க விலை ரூ. 1 கோடியே 30 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள E 53 செடான் மாடல் காரின் விலையை காட்டிலும், புதிய காரின் விலை ரூ.24 லட்சம் அதிகம் ஆகும்.


இன்ஜின் திறன்:


புதிய AMG E53 காரில் 3.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட, இன்-லைன் 6 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் இன்ஜின் உடன், 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இந்த இன்ஜின் 430 குதிரைகளின் சக்தியையும், 520 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. கூடுதலாக, இதன் 48 வோல்ட் சிஸ்டம் 21 குதிரைகளின் சக்தி மற்றும் 250 நியூட்டன் மீட்டர் இழுவிசை திறனையும் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.  இதன் மூலம் புதிய AMG E53  மாடல் காரானது ஜீரோவிலிருந்து 100 கிலோமீட்டர் எனும் வேகத்தை வெறும் 4.5 நொடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு  250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என மெர்சிடஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


5 வண்ணங்களில் விற்பனை:


இரு கதவுகள் கொண்ட சாஃப்ட்-டாப் E கிலாஸ் மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் E53 செடான் மாடலின் பெரும்பாலான அம்சங்களை கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஃபேப்ரிக் ரூஃப், பின்புற கதவுகள் நீக்கப்பட்டு, தனித்துவம் மிக்க ரியர் டிசைன் உள்ளிட்டவை புதிய AMG E53 4மேடிக்+ கப்ரியோலெட் மாடலிலும் உள்ளது.  மெர்சிடிஸ் AMG E53 4மேடிக்+ கப்ரியோலெட் மாடல்- அப்சிடியன் பிளாக், ஸ்லெனைட் கிரே, டெசிக்னோ ஒபலைட் வைட் பிரைட், டிசைனோ ஸ்பெக்ட்ரல் புளூ மேக்னோ மற்றும் டிசைனோ படகோனியா ரெட் பிரைட் என ஐந்து விதமான வண்ணங்களில் இந்திய சந்தையில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் இந்த மாடல் காருக்கு நேரடி போட்டியாளராக எந்த காரும் இல்லை.


இதர சிறப்பம்சங்கள்:


மற்ற AMG மாடல்களை போன்றே புதிய E53 மாடலிலும் மெர்சிடிஸ் பாரம்பரியம் மிக்க பானாமெரிகானா கிரில், எல்.ஈ.டி முகப்பு விளக்குகள், பிராமண்ட பம்ப்பர் உள்ளது. கப்ரியோலெட் மாடல் அதன் இரு கதவுகள் கொண்ட லே-அவுட் மற்றும் மடிக்கக்கூடிய சாஃப்ட்-டாப் மூலம் தனித்துவ தோற்றம் கொண்டுள்ளது. இதன் பின்புறம் நீண்ட டெக், மெல்லிய டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.  உள்புறம் ஒற்றை டிஸ்ப்ளே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் செண்ட்ரல் டச் ஸ்கிரீன் போன்று செயல்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI