மாருதி சுசுகி நிறுவனம் 2026ம் ஆண்டில் மூன்றவாது முறையாக தனது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாருதி சுசுகி கார்கள்
நம் அனைவருக்கும் கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்கேற்ப சந்தைகளில் பல நிறுவனங்களில், பல்வேறு மாடல் கார்கள் விற்பனைக்கு உள்ளது. அவற்றில் மாருதி சுசுகி நிறுவன கார்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். அந்த நிறுவனத்தில் இருந்து Alto K10, Presso, Wagon R,Swift, Eeco, Baleno, Dzire, Fronx, Ciaz, Victoris, XL 6, Jimny, E Vitara, Invicto, Celerio, Brezza, Ertiga, Grand Vitara ஆகிய கார்களை சந்தையில் விற்பனைப்படுத்தியுள்ளது.
மாருதி சுசுகி கார்கள் குறைந்தப்பட்சம் ரூ.3.50 லட்சம் முதல் அதிக்கபட்சம் ரூ.24.97 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் மாருதி சுசுகி நிறுவனம் தனது அனைத்து வாகனங்களுக்கும் ரூ.30,000 வரை விலையை உயர்த்தியுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஒரே ஆண்டில் ரூ.90000 வரை உயர்வு
பொதுவாக சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலை உயர்வு என்பது வழக்கமானது என்றாலும் மாருதி சுசுகி கார்கள் இந்தாண்டில் மட்டும் ரூ.90000 வரை உயர்வை சந்தித்துள்ளது. 2026 ஜனவரி மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் தனது அனைத்து கார்களின் விலையையும் ரூ. 30,000 வரை உயர்த்தியிருந்தது. மூலப்பொருட்களின் விலை உயர்வு, பணவீக்க அழுத்தம் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்ததே முக்கியக் காரணமாக தெரிவிக்கப்பட்டது. அதிகப்பட்சமாக ரூ.30 ஆயிரம் வரை விலை உயர்ந்தது. அதுவே வாடிக்கையாளர்களை கவலையில் ஆழ்த்தியிருந்தது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மீண்டும் தங்கள் கார்களின் விலையை அதிகபட்சமாக ரூ. 30,000 வரை உயர்த்தியது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் 2 மாத காலத்திற்குள் கார்களின் விலை மேலும் ரூ.30 ஆயிரம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த ஜூலை 24ம் தேதி மாருதி சுசுகி தனது பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவி பிரெஸ்ஸாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் (எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.26 லட்சம் முதல் ரூ.13.01 லட்சம் வரை உள்ளது. இந்த காரும் ரூ.30 ஆயிரம் வரை விலை உயர்கிறது. ஆக மொத்தத்தில் ரூ.1 லட்சம் வரை ஒவ்வொரு காருக்கும் விலை உயர்வு என்பது அமலுக்கு வரும்.
Car loan Information:
Calculate Car Loan EMI