இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், நடுத்தர வர்க்க மக்களின் முதல் மற்றும் பிரதானத் தேர்வாக மாருதி சுஸூகி நிறுவனம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நீடிக்கிறது. இதற்கு மிக முக்கியக் காரணம், அந்த நிறுவன கார்களின் மலிவான விலை மற்றும் வாடிக்கையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையிலான அதிக மைலேஜ் ஆகும்.

Continues below advertisement

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால், அடிக்கடி எரிபொருள் நிரப்பும் செலவைக் குறைக்கும் அதிக மைலேஜ் கார்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

வாடிக்கையாளர்களின் இந்த தேவையை கருத்தில் கொண்டு, அதிகபட்சமாக 35 கி.மீ மைலேஜ் தரக்கூடிய ஒரு புதிய ஸ்ட்ராங் ஹைபிரிட் காரை அறிமுகம் செய்ய மாருதி சுஸூகி நிறுவனம் தற்போது தீவிரமாகத் தயாராகி வருகிறது. நிறுவனத்தின் இந்த மைலேஜ் தகவல் உறுதியானால், இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார்களில் ஒன்றாக இது கட்டாயம் மாறும்.

Continues below advertisement

என்ன தொழில்நுட்பம்?

இந்த காரில் மாருதி நிறுவனம் பெட்ரோல் இன்ஜின், எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி பேக் இணைந்த புதிய ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளது. டிராபிக் நிறைந்த நகர சாலைகளில் குறைந்த வேகத்தில் செல்லும்போது கார் சில நேரங்களில் எலக்ட்ரிக் மோட்டாரில் மட்டுமே இயங்கும். இதனால் பெட்ரோல் பயன்பாடு குறைந்து மைலேஜ் கணிசமாக அதிகரிக்கும்.

அதிக வேகத்தில் செல்லும்போது பெட்ரோல் இன்ஜின் செயல்படத் தொடங்கும். சிறந்த செயல்திறன் தேவைப்படும் சமயங்களில் இரண்டும் சேர்ந்தும் இயங்கும். பிரேக் பிடிக்கும்போது உருவாகும் ஆற்றல், பேட்டரியில் சேமிக்கப்படுவதால் காரை தனியாக சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த ஹைபிரிட் சிஸ்டம் இன்ஜின் மீதான அழுத்தத்தைக் குறைத்து மைலேஜை மிகப்பெரிய அளவில் உயர்த்துகிறது.

வடிவமைப்பு எப்படி?

வடிவமைப்பைப் பொறுத்தவரை, இளைஞர்கள் மற்றும் குடும்பங்களை ஈர்க்கும் வகையில் புதிய முன்பக்க தோற்றம், கவர்ச்சியான எல்இடி ஹெட்லைட்டுகள், ஸ்டைலான கிரில், புதிய அலாய் வீல்கள் என பிரீமியம் மற்றும் ஸ்போர்ட்டியான லுக்கில் இதன் வெளிப்புறம் உருவாகிறது.

காரின் கேபினில் பெரிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் மொபைல் சார்ஜர், மல்டி ஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல், பிரீமியம் சீட் கவர்கள் வழங்கப்பட்டு சொகுசான பயண அனுபவத்தை தரும்.

பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ஏபிஎஸ் உடன் இபிடி, 360 டிகிரி கேமரா, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் சில வேரியண்ட்களில் ADAS ஆகிய நவீன வசதிகள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கெல்லாம் பயன்படும்?

தினசரி நெடுந்தூரம் பயணிப்பவர்கள் மற்றும் சிறந்த குடும்ப காரை தேடுபவர்களுக்கு மாதாந்திர எரிபொருள் செலவை குறைக்கும் இது ஒரு சிறந்த தேர்வாக அமையும். இந்திய சந்தையில் வரும் மாதங்களில் வெளியாகவுள்ள இதன் அதிகாரப்பூர்வ மாடல் பெயர் மற்றும் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

விலை எவ்வளவு?

இதன் விலை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்களைக் குறிவைத்து இதன் விலை நிர்ணயிக்கப்படும். சிறப்பான விலை, 35 கி.மீ ரேஞ்ச் மற்றும் நவீன வசதிகளுடன் இந்த கார் வெளியானால் சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் இது மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI