இந்திய சந்தையில் ஏற்கனவே S-CNG பொருத்தப்பட்ட 12 மாடல்  வாகனங்களை,  மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தி, பத்து லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்றுள்ளது. S-CNG பொருத்தப்பட்ட எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், அண்மையில் பலேனோ மற்றும் XL6 வகை கார்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. பல்வேறு மலிவு விலை கார்களையும் அந்நிறுவனம் விற்று வருவதால், கடந்த அக்டோபர் மாத விற்பனையில் தேசிய அளவிலும் மருதி சுசுகி நிறுவனம் முதலிடம் பிடித்தது. இதனிடையே, Alto K10, WagonR மற்றும் Celerio ஆகிய கார் மாடல்களின் போட்டிக்கு மத்தியில், எஸ் பிரெஸ்ஸோ லிமிடெட் எடிஷன் கார் மாடலை மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.


புதிய மாடல் கார் அறிமுகம்:


புதிய மாடலுக்கு "எக்ஸ்ட்ரா" எனும் கூடுதல் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. புதிய  எஸ் பிரெஸ்ஸோ எக்ஸ்ட்ரா கார் தொடர்பான அறிவிப்பை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள மாருதி சுசுகி நிறுவனம், இந்த காரின் விலை ரூ 4.25 லட்சம் முதல் ரூ 6.10 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது. 






இன்ஜின் விவரம்:


புதிய பதிப்பு வாகனத்தின் உபகரணங்கள் மற்றும் எஞ்சின் விவரக்குறிப்புகளில் எந்த மாற்றமும் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ Xtra மாடலில் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட K10C பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 66 ஹெச்பி பவர், 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் மற்றும் AMT யூனிட் வழங்கப்படுகிறது.


சிறப்பம்சங்கள்:


புதிய காரின் உட்புறம் ஆல் பிளாக் இண்டீரியர் தீம் செய்யப்பட்டு, புதிய இருக்கை கவர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டோர் பேட், ஏசி வெண்ட், செண்டர் கன்சோல் மற்றும் புதிய கால் மிதி உள்ளிட்டவைகளில் காண்டிராஸ்ட் ரெட் நிற அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளன. வெளிப்புறம் புதிய எஸ் பிரெஸ்ஸோ Xtra மாடலில் முன்புற ஸ்கிட் பிலேட், டோர் கிலாடிங், முன்புறம் அப்பர் கிரில், வீல் ஆர்ச் கிலாடிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. புதிய கார் வழக்கமான எஸ் பிரெஸ்ஸோ மாடல் கிடைக்கும் அனைத்து நிறங்களிலும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 


Car loan Information:

Calculate Car Loan EMI