Maruti Suzuki Car Offers: இந்தியாவின் முன்னணி கார் விற்பனை நிறுவனம் மாருதி சுசுகி. ஒவ்வொரு நிறுவனமும் தங்களது கார்களுக்கு மாதந்தோறும் சலுகைகள் அறிவிப்பது வழக்கம். அந்த வகையில், மாருதி சுசுகி காரும் தனது கார்களுக்கு சலுகைகள் அறிவித்துள்ளது.

Continues below advertisement

எந்த காருக்கு எவ்வளவு சலுகை?

எந்த காருக்கு எவ்வளவு சலுகைகள் என்பதை கீழே காணலாம்.

1. Alto K10 - ரூ. 42 ஆயிரத்து 500

Continues below advertisement

2. Celerio - ரூ. 42 ஆயிரத்து 500

3. S-Presso - ரூ.42 ஆயிரத்து 500

4. WagonR - ரூ.52 ஆயிரத்து 500

5. Swift - ரூ. 45 ஆயிரம்

6. Dzire - ரூ.2 ஆயிரத்து500

7.Brezza - ரூ.30 ஆயிரம்

8.Eeco - ரூ.42 ஆயிரத்து 500

மேலே கூறிய கார்களுக்கு மேற்கூறிய விலைகளை தள்ளுபடியாக அறிவித்துள்ளனர்.

1. Alto K10:

ஹேட்ச்பேக் ரக காரான Alto K10 கார் புதியதாக கார் வாங்குபவர்களின் தேர்வாக உள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 4.42 லட்சம் ஆகும். இந்த கார் 998 சிசி எஞ்ஜினை கொண்டது. 24.39 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. இந்த காருக்கு ரூபாய் 42 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

2. Celerio:

மாருதி சுசுகியின் Celerio காரின் தொடக்க விலை ரூபாய் 5.57 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 42 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலில் ஓடும் இந்த கார் 998 சிசி திறன் கொண்டது. 25.24 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. புதியதாக கார் வாங்க விரும்புவர்களின் பட்டியலில் இந்த காருக்கு தனி இடம் உண்டு.

3. S-Presso:

நாட்டிலே விலை குறைந்த கார் என்ற பெருமைக்குரியது இந்த S-Presso கார் ஆகும். பெட்ரோலில் ஓடும் இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 4.19 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 42 ஆயிரத்து 500 வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 998 சிசி திறன் கொண்டது இந்த கார் ஆகும். 24.12 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 

4. WagonR:

நகர்ப்புறங்களிலும், நெருக்கடியான சாலைகளிலும் ஓட்டுவதற்கு சிறந்த தேர்வாக இருப்பது WagonR ஆகும். இந்த காருக்கு ரூபாய் 52 ஆயிரத்து 500 வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 5.91 லட்சம் ஆகும். 998 சிசி திறன் கொண்டது. 24.35 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 

5. Swift:

மாருதி சுசுகி நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு Swift ஆகும். இந்த காருக்கு ரூபாய் 45 ஆயிரம் வரை சலுகை அளித்துள்ளனர். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.96 லட்சம் ஆகும். 1197 சிசி திறன் கொண்டது. 24.8 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 

6. Dzire

மாருதி சுசுகியின் சுவிஃப்ட் காரைப் போலவே வெற்றிகரமான படைப்பு இந்த Dzire ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 7.51 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 2 ஆயிரத்து 500 தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. 1197 சிசி திறன் கொண்டது இந்த கார் ஆகும். 24.97 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது ஆகும்.

7. Brezza:

மாருதி சுசுகியின் வெற்றிகரமான படைப்பு இந்த Brezza கார் ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 9.88 லட்சம் ஆகும். இந்த கார்  1462 சிசி திறன் கொண்டது ஆகும். 17.8 கி.மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் இயங்கும் ஆற்றல் கொண்டது.

8.Eeco:

மாருதி சுசுகியின் Eeco வேன் தொடக்க விலை ரூபாய் 6.29 லட்சம் ஆகும். இந்த வேனுக்கு ரூபாய் 42 ஆயிரத்து 500 சலுகை அளித்துள்ளனர். 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் இதில் உள்ளது.19.71 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் ஓடும் ஆற்றல் கொண்டது.

மேலே கூறிய சலுகைகள் நவம்பர் மாதம் வரை மட்டுமே ஆகும்.

 


Car loan Information:

Calculate Car Loan EMI