இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம் மாருதி சுசுகி கார் ஆகும். ஒவ்வொரு மாதமும் தனது பல்வேறு மாடல் கார்களுக்கு மாருதி சுசுகி அறிவிப்பது வழக்கம்.
2025ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்திற்கான தனது நெக்ஸா ரக கார்களுக்கான சலுகையை மாருதி சுசுகி அறிவித்துள்ளது. ஒவ்வொரு காருக்கும் எவ்வளவு சலுகை என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
1. Maruti Invicto - ரூ.2.15 லட்சம்
2. Maruti Ciaz - ரூ.1.30 லட்சம்
3. Maruti Jimny - ரூ. 1 லட்சம்
4. Maruti Ignis - ரூ.80 ஆயிரம்
5. Maruti Fronx - ரூ.88 ஆயிரம்
6. Maruti Baleno - ரூ.70 ஆயிரம்
7. Maruti XL6 - ரூ.60 ஆயிரம்
Maruti Invicto:
மாருதி நிறுவனத்தின் இந்த Maruti Invicto காரின் தொடக்க விலை ரூபாய் 31.64 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 2.15 லட்சம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் மொத்தம் 3 வேரியண்ட் உள்ளது. இந்த கார் 1987 சிசி திறன் கொண்டது. 23.24 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. ஹைப்ரிட் மாடல் கார் ஆகும். 150 பிஎச்பி ஆற்றல் கொண்டது. 5 ஸ்டார் பாதுகாப்பு அம்சம் கொண்டது. 7 மற்றும் 8 சீீட்டர் கொண்டது இந்த கார். பெரிய குடும்பத்தினர் ஒன்றாக பயணிக்க ஏற்ற கார் இதுவாகும். டொயோட்டோ இன்னோவா ஹைகிராஸ், மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் உள்ளது.
Maruti Ciaz:
இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 10.85 லட்சம். இந்த காருக்கு ரூபாய் 1.30 லட்சம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் மொத்தம் 9 வேரியண்ட் உள்ளது. 1462 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் கொண்டது. 20.65 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது. பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது. ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவல் ரக கார் ஆகும். ஹை ஸ்பீட் அலர்ட், ஹில் ஹோல்ட் வசதி, ஏபிஎஸ்/இபிடி வசதி, இரண்டு ஏர்பேக்குகள் உள்ளது. சிட்ரோன், எம்ஜி ஆஸ்டோர் காருக்கு போட்டியாக உள்ளது.
Maruti Jimny:
மாருதி நிறுவனம் தாருக்கு போட்டியாக அறிமுகப்படுத்திய கார் இந்த Maruti Jimny ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 15.35 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 1 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் மொத்தம் 6 வேரியண்ட் உள்ளது. 1462 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 16.94 கிலோ மீ்ட்டர் மைலேஜ் தருகிறது. பெட்ரோலில் ஓடும் திறன் கொண்டது. 103 பிஎச்பி ஆற்றல் கொண்டது. 5 மற்றும் 4 கியர்களை கொண்டது. 1.5 லிட்டர் K15B எஞ்ஜின் கொண்டது.
Maruti Ignis:
மாருதி நிறுவனத்தின் Maruti Ignis கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.45 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 80 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 11 வேரியண்ட் உள்ளது. இந்த கார் 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. 20.89 கிலோ மீ்ட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கார் இதுவாகும்.
Maruti Fronx:
மாருதி நிறுவனத்தின் பிரபலமான கார்களில் இந்த Maruti Fronx ஒன்றாகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 8.20 லட்சம் ஆகும். இந்த காருக்கு 88 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி அளித்துள்ளனர். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 14.87 லட்சம் ஆகும். 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. பெட்ரோல், சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது. 16 வேரியண்ட் இந்த காரில் உள்ளது. 21.79 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 89 பிஎச்பி திறன் கொண்டது.
Maruti Baleno:
பட்ஜெட் விலையில் கார் வாங்க விரும்பும் பலரின் தேர்வுகளில் இந்த Maruti Baleno கார் கண்டிப்பாக இருக்கும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 7.20 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 70 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 10.86 லட்சம் ஆகும். 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 22.9 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 6 ஏர்பேக் வசதி கொண்டது. மொத்தம் 9 வேரியண்ட் இந்த காரில் உள்ளது.
Maruti XL6:
மாருதி நிறுவனத்தின் ப்ரீமியம் எம்பிவி கார் இந்த Maruti XL6 ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 14.38 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 60 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 9 வேரியண்ட் இந்த காரில் உள்ளது. 1462 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் இந்த காரில் உள்ளது. பெட்ரோல், சிஎன்ஜி-யில் ஓடும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. 20.97 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது இந்த கார்.
இந்த கார்களுக்கு அளிக்கப்பட்ட சலுகை வரும் டிசம்பர் மாத இறுதிவரை உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI