ஆட்டோ எக்ஸ்போ 2023
பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது புதிய வாகனங்கள் மற்றும் எதிர்கால திட்டங்களை, அறிவிக்கும் வகையில் கிரேட்டர் நொய்டா பகுதியில் வரும் 11ம் தேதி தொடங்கி, 18ம் தேதி வரையில் பிரமாண்ட ஆட்டோ எக்ஸ்போ 2023 நடைபெற உள்ளது. முன்னணி நிறுவனங்கள் இதில் பங்கேற்காவிட்டாலும், மாருதி சுசுகி, ஹுண்டாய், டாடா மோட்டார்ஸ், கியா, எம்ஜி மற்றும் டொயோட்டா உடன், ஒரே ஒரு சொகுசு கார் நிறுவனமாக லெக்சஸ் நிறுவனம் பங்கேற்க உள்ளது. அதோடு, இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களில் பெனெல்லி, கீவே, ஜோன்டெஸ், மோட்டோ மோரினி, மேட்டர், டார்க் மற்றும் அல்ட்ரா வயலட் ஆகியவை பங்கேற்க உள்ளன.
மின்சார கார் உற்பத்தியில் மாருதி சுசுகி:
அந்த வகையில், இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம், தனது முதல் மின்சார எஸ்யுவி காரை ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் காட்சிப்படுத்த உள்ளது. தற்போதைய சூழலில் கான்செப்ட் மாடல் மட்டுமே காட்சிப்படுத்த உள்ளதாகவும், முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட கார் 2025ம் ஆண்டு தான் காட்சிப்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. டொயோட்டா நிறுவனத்துடன், இந்த கார் மற்றும் அதற்கான பிளாட்பார்ம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இந்த காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 முதல் 500 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் எனவும், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் Nexon EV மாடல் காருக்கு மாருதி சுசுகியின் மின்சார கார் போட்டியாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
சிறப்பம்சங்கள்:
இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உடன், எதிர்காலத்திற்கான ஸ்டைலிங் உடன் கிராண்ட் விடாராவின் ஸ்டைலிங் தீமும் இதில் பின்பற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய பிளாட்பார்மின் அடிப்படையில், பிளாட் ஃப்ளோர், அளவின் அடிப்படையில் அதிகப்படியான இடவசதி என, SUV-4m SUV மாடலுக்கு பதிலாக MG ZS மாடலை போன்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபுல்லி லோடட் கிராண்ட் விடாரா வரிசையில் புதிய மின்சார வாகனம் அதிக விலைகொண்ட காராக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய கார் மாடலில் பனோரமிக் கண்ணாடி கூரை, காற்றோட்டமான இருக்கைகள், காலநிலை கட்டுப்பாடு என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. நீளமான வீல் பேஸ் கொண்டிருப்பதால், விற்பனைக்கு வரும் அதிகப்படியான இடவசதி கொண்ட மாருதி கார் ஆக, புதிய மாடல் இருக்கும் என கூறப்படுகிறது.
விலை விவரம்:
YY8 SUV கார் குஜராத் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதிக்காகவும் ஒதுக்கப்படும். இதுவே மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் மின்சார எஸ்யுவி ஆகும். அதேநேரம், வேகன் R எலக்ட்ரிக் கார்களில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும். கவர்ச்சிகரமான ஸ்டைலிங் கொண்ட பெரிய எஸ்யூவி ஆன இந்த காரின் விலை, கிராண்ட் விடாரா ஹைப்ரிட்டிற்கு நிகராக நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI