Maruti Suzuki e Vitara Price: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதியின் மின்சார காரான இ-விட்டாராவின் தொடக்க விலை, கர்வ் மற்றும் க்ரேட்டா போன்ற போட்டியாளர்களை காட்டிலும் குறைவாகவே உள்ளது.

Continues below advertisement

மாருதி சுசூகி இ-விட்டாரா விலை விவரங்கள் வெளியீடு

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நீண்டகால எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு, மாருதி சுசூகி நிறுவனம் தனது முதல் மின்சார கார் மாடலான இ-விட்டாராவை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பேட்டரியை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் வசதியுடன் இந்த காரின் தொடக்க விலை, 10 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பேட்டரியுடன் சேர்த்து இ-விட்டாரா கார் மாடலின் விலை என்ன, எத்தனை வேரியண்ட்களில் அந்த கார் விற்பனை செய்யப்படும் என்பது தொடர்பான விவரங்களை மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த காரின் தொடக்க விலையானது 15 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

இ-விட்டாரா - முழு விலைப்பட்டியல்

இ- விட்டாரா கார் மாடலானது மொத்தம் 4 வேரியண்ட்களி விற்பனை செய்யப்படுகிறது. அதில் டெல்டா, ஜீடா மற்றும் ஆல்ஃபா ஆகிய க்ரேட்களின் விலையானது முறையே, ரூ.15.99 லட்சம், ரூ.17.49 லட்சம், ரூ.19.79 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப் க்ரேடாக டூயல் டோன் வண்ண விருப்பங்களில் கிடைக்கும் ஆல்பா எடிஷனின் விலையானது ரூ.20.01 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரியை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் வசதியில், இ-விட்டாராவின் விலை வரம்பானது ரூ.10.99 லட்சத்தில் தொடங்கி ரூ.14.29 லட்சமாக நீள்கிறது.

பேட்டரியுடன் இ-விட்டாரா காரின் விலை

இ-விட்டாரா க்ரேட்விலை (எக்ஸ்-ஷோரூம்)
டெல்டா15.99 லட்சம்
ஜீடா17.49 லட்சம்
ஆல்பா19.79 லட்சம்
ஆல்பா டூயல் டோன்20.01 லட்சம்

வாடகை பேட்டரி ஆப்ஷனில் இ-விட்டாரா காரின் விலை

க்ரேட்வாகனத்தின் விலை (எக்ஸ்-ஷோரூம்)பேட்டரியின் விலை
டெல்டாரூ.10.99 லட்சம்ரூ.3.99 லட்சம்
ஜீடாரூ.11.99 லட்சம்ரூ.4.39 லட்சம்
ஆல்பாரூ.14.29 லட்சம்ரூ.4.39 லட்சம்
ஆல்பா டூயல் டோன்ரூ.14.51 லட்சம்ரூ.4.39 லட்சம்

ஒரு கிலோ மீட்டருக்கான செலவு என்ன?

பேட்டரியை வாடகை முறையில் தேர்வு செய்பவர்கள் டெல்டா க்ரேடில் கிலோ மீட்டருக்கு 3.99 ரூபாயும், ஜீடா மற்றும் ஆல்பா வேரியண்ட்களுக்கு கிலோ மீட்டருக்கு 4.39 ரூபாயும் செலவிட வேண்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை தேர்வு செய்பவருக்கு இன்ஸ்டாலேஷன் உடன் கூடிய ஹோம் சார்ஜர் காம்ப்லிமெண்ட்ரியாக வழங்கப்படுகிறது. கூடுதலாக மார்ச் 31ம் தேதி வரை பேட்டரியுடன் கூடிய இ-விட்டாரா காரை வாங்குபவர்களுக்கும், இன்ஸ்டாலேஷன் உடன் கூடிய ஹோம் சார்ஜர் காம்ப்லிமெண்ட்ரியாக வழங்கப்படும் என மாருதி சுசூகி அறிவித்துள்ளது.

இ-விட்டாரா - பேட்டரி விவரங்கள்

இ-விட்டாராவின் டெல்டா க்ரேடானது 49KWh பேட்டரியுடன் நிலையான  மேக்னெட் சிங்க்ரோனஸ் மோட்டாரை கொண்டு, 142hp மற்றும் 193Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 440 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 7.4KW ஏசி சார்ஜர் மூலம் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகிதம் சார்ஜ் ஏற 6.5 மணி நேரங்களும், டிசி சார்ஜரில் 45 நிமிடங்களில் 10 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஜீடா மற்றும் டெல்டா க்ரேட்களானது 61KWh பேட்டரியுடன் நிலையான  மேக்னெட் சிங்க்ரோனஸ் மோட்டாரை கொண்டு, 172hp மற்றும் 193Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 543 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 7.4KW ஏசி சார்ஜர் மூலம் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகிதம் சார்ஜ் ஏற 9 மணி நேரங்களும், டிசி சார்ஜரில் 45 நிமிடங்களில் 10 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இ-விட்டாரா - போட்டியாளர்களின் விலை வரம்பு

உள்நாட்டு சந்தையில் இ-விட்டாரா கார் மாடலானது க்ரேட்டா மின்சார எடிஷன், டாடா கர்வ் மின்சார எடிஷன், மஹிந்த்ரா BE6, வின்ஃபாஸ்ட்VF6 & VF7, MG விண்ட்சர் மற்றும் MG ZS EV ஆகிய கார் மாடல்களுடன் மோதுகிறது.

கார் மாடல்விலை வரம்பு (எக்ஸ் - ஷோரூம்)
மாருதி இ-விட்டாராரூ.15.99 - ரூ.20.01 லட்சம்
ஹுண்டாய் க்ரேட்டா EVரூ.18.02 - ரூ.24.70 லட்சம்
டாடா கர்வ் EVரூ.17.49 - ரூ.22.24 லட்சம்
மஹிந்த்ரா BE6ரூ.18.90 - ரூ.27.65 லட்சம்
வின்ஃபாஸ்ட் VF6ரூ.17.29 - ரூ.19.19 லட்சம்
வின்ஃபாஸ்ட் VF7ரூ.21.89 - ரூ.26.79 லட்சம்
MG விண்ட்சர்  ரூ.14 - ரூ.18.50 லட்சம்
MG ZS EVரூ.17.99 - ரூ.20.50 லட்சம்

 


Car loan Information:

Calculate Car Loan EMI