Maruti Suzuki Dzire 2024: புதிய மாருதி டிசைர் கார் மாடல் வரும் 11ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


மாருதி சுசூகி டிசைர் 2024:


மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட டிசைர் காடர் மாடல், வரும் 11 ஆம் தேதி இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் அந்த காரில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. புதிய தலைமுறை டிசைர் ஆல் நியூ மற்றும் நான்காவது தலைமுறை டிசையர் கார் பல புதிய மாற்றங்களைப் பெற்றுள்ளது.


டிசைரின் புதிய அம்சங்கள்:


1. 360 டிகிரி கேமரா


புதிய டிசைரில் 360 டிகிரி கேமரா உள்ளது. இது முந்தைய எடிஷனில் இல்லை. மேலும் வேறு எந்த சிறிய செடான் அல்லது பெரிய செடான்களிலும் கூட இந்த வசதி கிடைப்பதில்லை. 360 டிகிரி கேமராவில் HD டிஸ்ப்ளே மற்றும் பல கோணங்கள் உள்ளன.


2. சன்ரூஃப்


புதிய டிசைரில் சன்ரூஃப் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இது முந்தைய டிசைரில் இல்லை. மேலும் இது ஒரு சிங்கிள் பேன் யூனிட்டுடன் வருகிறது. இந்த அம்சம் தற்போது வேறு எந்த சிறிய செடானிலும் இல்லை.


3. 9 அங்குல டச்ஸ்க்ரீன்


புதிய டிசையர் 9 அங்குல அளவில் பெரிய தொடுதிரையைக் கொண்டுள்ளது மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றுடன் ரிமோட் செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம், ஆர்காமிஸ் ஆடியோ சிஸ்டம் மற்றும் பல அம்சங்களுடன் வருகிறது.


4. 6 ஏர்பேக்குகள்


புதிய டிசையர் ஸ்டேண்டர்டாக 6 ஏர்பேக்குகளைப் பெறும், இது அண்மையில் அறிமுகமான ஸ்விஃப்ட்டிலும் உள்ளது. மேலும் 6 ஏர்பேக்குகளுடன், டிசையர் இஎஸ்பி, ஐசோஃபிக்ஸ் மற்றும் பலவற்றையும் கொண்டுள்ளது.


5. இசட் சீரிஸ் இன்ஜின்


புதிய டிசைர் தற்போது 3 சிலிண்டர் 1.2லி பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது, இது 82 பிஎச்பி ஆற்றலை உருவாக்குகிறது. மேலும் இது AMTக்கு 25.71 kmpl எரிபொருள் திறனை கொண்டுள்ளது. அதேநேரம், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் எடிஷனிற்கு 24.79 kmpl எரிபொருள் திறன் கொண்டதாக உள்ளது. 


இதனிடையே, உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் குறைந்தபட்சம் டாப் வேரியண்ட்களில் புதிய டிசைர் ADAS ஐப் பெறக்கூடும் என்று தெரிவிக்கின்றன.


பாதுகாப்பில் 5 ஸ்டார்:


மாருதி சுசூகி நிறுவனத்தின் கார் மாடல்கள் மோசமான கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், அண்மையில் வெளியான ஸ்விஃப்ட், ஜப்பான் NCAP சோதனையில் 4 ஸ்டார் பெற்று அசத்தியது. இந்நிலையில், புதிய கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் பெற்று அசத்தியுள்ளது. அதன்படி, குளோபர் NCAP சோதனையில், வயது வந்தோருக்கான பாதுகாப்பிற்காக 5-நட்சத்திர விபத்து சோதனை மதிப்பீட்டையும், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 4-நட்சத்திர விபத்து சோதனை மதிப்பீட்டையும் பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார் பெற்ற மாருதி நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமையை புதிய டிசைர் பெற்றுள்ளது.


தொடங்கிய புக்கிங்:


தற்போதைய மாடலைப் போலவே இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய டிசைர் ஆனது ஹூண்டாய் ஆரா, ஹோண்டா அமேஸ் மற்றும் டாடா டிகோர் போன்றவற்றை போட்டியாளர்களாக எதிர்கொள்ளும். இதன் விலை தற்போதைய டிசைரின் விலையை (ரூ.6.57 லட்சம் முதல் ரூ.9.34 லட்சம் வரை) காட்டிலும் சற்று பிரீமியமாக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.  வாடிக்கையாளர்கள் ஆல்-நியூ டிசைரை எந்த ARENA ஷோரூமிலும் அல்லது ஆன்லைன் வாயிலாகாவும் ரூ.11000 செலுத்தி முன்பதிவு செய்யலாம். புதிய Maruti Dzire இன் டெலிவரிகள் அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்குப் பிறகு உடனடியாகத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI