ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு இந்திய ஆட்டோமொபைல் சந்தை மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது. கார், இரு சக்கர வாகனங்களின் விலை பன்மடங்கு குறைந்துள்ளது. இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசுகியும் தனது முன்னணி கார்கள் பலவற்றின் விலையையும் குறைத்துள்ளது. 

மாருதி சுசுகியின் கார்களின் புதிய விலை என்னென்ன என்பதை கீழே காணலாம்.

1. S-Presso - ரூ. 3 லட்சத்து 49 ஆயிரத்து 900

2.  Alto K10 - ரூ. 3 லட்சத்து 69 ஆயிரத்து 900

3. Celerio - ரூ. 4 லட்சத்து 69 ஆயிரத்து 900

4. WagonR - ரூ,4 லட்சத்து 98 ஆயிரத்து 900

5. Ignis - ரூ.5 லட்சத்து 35 ஆயிரத்து 100

6. Swift - ரூ.5 லட்சத்து 78 ஆயிரத்து 900

7. Baleno - ரூ. 5 லட்சத்து 98 ஆயிரத்து 900

8. Dzire - ரூ.6 லட்சத்து 23 ஆயிரத்து 800

9. Fronx - ரூ. 6 லட்சத்து 84 ஆயிரத்து 900

10. Brezza - ரூ.8 லட்சத்து 25 ஆயிரத்து 900

11. Ertiga - ரூ.8 லட்சத்து 80 ஆயிரத்து

12. Grand Vitara - ரூ.10 லட்சத்து 76 ஆயிரத்து 500

13. Victoris - ரூ.10 லட்சத்து 49 ஆயிரத்து 900

14. XL6 - ரூ.11 லட்சத்து 52 ஆயிரத்து 300

15. Jimny - ரூ.12 லட்சத்து 31 ஆயிரத்து 500

16. Invicto - ரூ.24 லட்சத்து 97 ஆயிரத்து 400

17. Eeco - ரூ.5 லட்சத்து 18 ஆயிரத்து 100

மேலே கூறிய விலைதான் மாருதி சுசுகி கார்களின் புதிய விலைப்பட்டியல் ஆகும்.  இதில் எந்த காருக்கு எவ்வளவு விலையை குறைத்துள்ளனர் என்பதை கீழே காணலாம். 

1.S-Presso:

மாருதி சுசுகியின் சிறிய ரக காரான S-Presso காரின் புதிய விலை ரூபாய் 3 லட்சத்து 49 ஆயிரத்து 900 ஆகும். இந்த கார் ரூபாய் 1.29 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. 

2. Alto K10:

Alto K10 காரின் தாெடக்க விலை இனிமேல் ரூபாய் 3 லட்சத்து 69 ஆயிரத்து 900 ஆகும். இந்த காரின் விலை ரூபாய் 1 லட்சத்து 7 ஆயிரத்து 600 குறைக்கப்பட்டுள்ளது. 

3. Celerio:

Celerio காரின் புதிய தொடக்க விலை ரூபாய் 4 லட்சத்து 69 ஆயிரத்து 900 ஆகும். இந்த காரின் விலை ரூபாய் 94 ஆயிரத்து 100 ஆகும். 

4. WagonR:

மாருதி சுசுகியின் சிறிய ரக காரான WagonR புதிய தொடக்க விலை 4 லட்சத்து 98 ஆயிரத்து 900 ஆகும். ரூபாய் 79 ஆயிரத்து 600 இந்த காரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

5.Ignis:

இந்த Ignis காரின் புதிய தொடக்க விலை ரூபாய் 5 லட்சத்து 35 ஆயிரத்து 100 ஆகும். இந்த கார் ரூபாய் 71 ஆயிரத்து 300 குறைக்கப்பட்டுள்ளது. 

6. Swift:

மாருதி சுசுகியின் வெற்றிகரமான படைப்பு Swift ஆகும். இந்த காரின் புதிய விலை ரூபாய் 5 லட்சத்து 78 ஆயிரத்து 900 ஆகும். இந்த கார் தற்போது ரூபாய் 84 ஆயிரத்து 600 குறைக்கப்பட்டுள்ளது. 

7. Baleno:

இந்த Baleno காரின் புதிய தொடக்க விலை ரூபாய் 5 லட்சத்து 98 ஆயிரத்து 900 ஆகும். இந்த கார் விலை ரூபாய் 86 ஆயிரத்து 100 வரை குறைக்கப்பட்டுள்ளது. 

8. Dzire:

மாருதி சுசுகியின் வெற்றிகரமான படைப்புகளில் ஒன்று இந்த Dzire ஆகும். இதன் புதிய விலை ரூபாய் 6 லட்சத்து 23 ஆயிரத்து 800 ஆகும். இந்த கார் ரூபாய் 87 ஆயிரத்து 700 குறைக்கப்பட்டுள்ளது. 

9. Fronx:

மாருதி சுசுகியின் Fronx காரின் விலை ரூபாய் 1.12 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இதன் புதிய விலை ரூபாய் 6 லட்சத்து 84 ஆயிரத்து 900 ஆகும். 

10. Brezza:

மாருதி சுசுகியின் Brezza காரின் புதிய விலை ரூபாய் 8 லட்சத்து 25 ஆயிரத்து 900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 12 ஆயிரத்து 700 குறைக்கப்பட்டுள்ளது. 

11. Ertiga:

மாருதியின் Ertiga காரின் புதிய விலை ரூபாய் 8 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். இந்த கார் ரூபாய் 46 ஆயிரத்து 400 குறைக்கப்பட்டுள்ளது. 

12. Grand Vitara:

மாருதியின் எஸ்யூவி ரக காரானGrand Vitara காரின் புதிய தொடக்க விலை ரூபாய்  10 லட்சத்து 76 ஆயிரத்து 500 ஆகும். இந்த கார் ரூபாய் 1 லட்சத்து 7 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. 

13. Victoris:

மாருதி சுசுகியின்Victoris கார் ரூபாய் 10 லட்சத்து 49 ஆயிரத்து 900 ஆகும். இந்த கார் தற்போதுதான் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

14. XL6:

மாருதியின் XL6 காரின் புதிய விலை ரூபாய் 11 லட்சத்து 52 ஆயிரத்து 300 ஆகும். இந்த காரின் விலை ரூபாய் 52 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. 

15. Jimny:

மாருதி சுசுகியின் Jimny காரின் விலை ரூபாய் 51 ஆயிரத்து 900 வரை குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை ரூபாய் 12 லட்சத்து 31 ஆயிரத்து 500 ஆகும். 

16. Invicto:

மாருதி சுசுகியின் Invicto எஸ்யூவி காரின் புதிய விலை ரூபாய் 24 லட்சத்து 97 ஆயிரத்து 400 ஆகும். இந்த கார் ரூபாய் 61 ஆயிரத்து 700 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. 

17. Eeco:

இந்த Eeco காரின் புதிய விலை ரூபாய் 5 லட்சத்து 18 ஆயிரத்து 100 ஆகும். இந்த கார் ரூபாய் 68 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI