Maruti Suzuki Budget Cars : இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்த்த திட்டமிடப்பட்டுள்ள, மாருதியின் புதிய பட்ஜெட் கார்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
மாருதி சுசூகியின் பட்ஜெட் கார்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மின்மயமாக்கலை மையமாக கொண்டு, சிறிய கார்களின் உற்பத்தியை விரிவுப்படுத்த மாருதி சுசூகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. படிப்படியாக அப்டேட் ஆவதற்கு மாற்றாக, முற்றிலும் புதிய மற்றும் மலிவு விலையில் அணுகக் கூடிய ஹைப்ரிட் அசிஸ்டன்ஸ், மாற்று எரிபொருள் மற்றும் மின்சார மாடல்களை உற்பத்தி செய்வதில் களமிறங்கியுள்ளது. இதில் பல மாடல்களானது ஹேட்ச்பேக், காம்பேக்ட் எஸ்யுவி மற்றும் எம்பிவி பிரிவுகளில் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய சந்தையில் எதிர்பார்க்கப்படும், மாருதியின் சிறிய கார் விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
இந்திய சந்தைக்கான புதிய, சிறிய கார்கள்:
1. eWX கான்செப்ட் கார்
மாருதி சுசூகியின் போர்ட்ஃபோலியோவில் சேர்க்கப்படும் புதிய சிறிய மின்சார கார்களில், eWX கான்செப்டில் உருவாக்கப்படும் கார் முதலாவதாக இருக்கக் கூடும். இந்த சிறிய EV, தினசரி பயன்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நகரத்திற்கு ஏற்ற பரிமாணங்களை வைத்திருக்கும். அதே வேளையில் கேபின் இடத்தை அதிகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பெட்டி வடிவ சில்ஹவுட்டுடன் சந்தைப்படுத்தப்படலாம். எண்ட்ரி லெவல் மின்சார மாடலாக ஸ்லாட் செய்யப்பட, இது உற்பத்தியை அடைந்ததும் மாருதி சுசூகியின் மிகவும் மலிவு விலை மின்சார காராக விளங்கக் கூடும்.
2. மைக்ரோ எஸ்யுவி
இரண்டாவதாக வேகமாக வளர்ந்து வரும் சப்-காம்பேக்ட் பிரிவில் நுழையும் ஒரு புதிய மைக்ரோ SUVயும் இருக்கக் கூடும். டாடா பஞ்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற மாடல்களை போட்டியாகக் கொண்டு, ஐந்து இருக்கைகள் கொண்ட இந்த கார், பட்ஜெட் விலையில் சந்தைப்படுத்தப்படலாம். அதே வேளையில், கரடுமுரடான ஸ்டைலிங் குறிப்புகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலைகளை மிக அதிகமாக உயர்த்தாமல் எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்த உதவும் வகையில், ஹைப்ரிட் அசிஸ்டன்ஸ் இதில் ஒரு பங்கை வகிக்க வாய்ப்புள்ளது.
3. காம்பேக்ட் எம்பிவி
இந்திய சந்தையில் ப்ரண்டின் போர்ட்ஃபோலியோவில், எர்டிகாவிற்கு கீழே நிலைநிறுத்தும் வகையில் ஒரு புதிய காம்பேக்ட் எம்பிவியில் மாருதி பணியாற்றி வருகிறதாம். சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் உயரமான அதிக இடவசதி கொண்ட கெய்-ஸ்டைல் எம்பிவியின் தாக்கம் இதில் இருக்கலாம். உட்புற வசதியில் அதிக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வலுவான ஹைப்ரிட் பெட்ரோல் அமைப்பானது இந்த எம்பிவிக்கு மையமாக இருக்கலாம்.
4. அடுத்த தலைமுறை பலேனோ
ப்ராண்டின் பாரமபரியமான ஹேட்ச்பேக்கை நோக்கி நகரும்போது, அடுத்த தலைமுறை பலேனோ கார் மாடல் தயாராகி வருவதாக தெரிகிறது. 2027ம் ஆண்டு வாக்கில் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த காரில், மறுவடிவமைக்கப்பட்ட வெளிப்புறம், ப்ரீமியம் வசதிகள் கொண்ட உட்புறம் மற்றும் வலுவான ஹைப்ரிட் அம்சங்கள் இடம்பெறக்கூடும்.ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் செட்-அப்பில், மாருதி சுசூகியின் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படலாம்.
5. அப்க்ரேடட் மாருதி ஃப்ராங்க்ஸ்
சுவாரஸ்யமாக, ஃப்ராங்க்ஸ் காருக்கு வழங்கப்பட உள்ள அப்டேட்களானது சிறியதாக இருக்கும் என கருதப்படவில்லை. அதற்கு பதிலாக, இது சர்வதேச மாடல்களுடன் இணைக்கப்பட்ட இயந்திர மற்றும் அம்ச அப்க்ரேட்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த காரில் ADAS முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படலாம், அதே நேரத்தில் ஹைப்ரிட் தொழில்நுட்பம் லேசான-ஹைப்ரிட் அமைப்பிலிருந்து தனது பயணத்தை தொடங்கலாம்.
6&7. புதிய எண்ட்ரி லெவல் கார் &E-MPV
இறுதியாக, மாருதி சுசுகி முதல் முறையாக வாங்குபவர்களை இலக்காகக் கொண்டு முற்றிலும் புதிய எண்ட்ரி லெவல் காரைத் தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது CNG, மாற்று-எரிபொருள் மற்றும் ஹைப்ரிட் அசிஸ்டன்ஸ் உடன் கூடிய பெட்ரோல் பவர்டிரெய்ன்களுடன் பொருந்தக்கூடிய தன்மையை பரிந்துரைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கார் மலிவு மற்றும் செயல்திறனில் கவனம் செலுத்தக்கூடும். பிராண்டின் முதல் மின்சார காரான e Vitara அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது, மேலும் அதைத் தொடர்ந்து 2026 இன் பிற்பகுதியில் அல்லது 2027 இன் தொடக்கத்தில் Heartect-e கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு நடுத்தர அளவிலான e-MPV 500 கிமீக்கு மேல் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம்.
Car loan Information:
Calculate Car Loan EMI