ஒவ்வொரு கார் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்காக பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. இந்தியாவில் பட்ஜெட் விலையில் நல்ல மைலேஜ் தரும் கார்களை தயாரிப்பதில் மாருதி சுசுகி நிறுவனம் முன்னணியில் உள்ளது. 

Continues below advertisement

Maruti S-Presso தள்ளுபடி:

மாருதி சுசுகி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக மார்ச் மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதில் நாட்டிலே விலை குறைந்த காரான Maruti S-Presso காருக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. இந்த காருக்கு மார்ச் மாத தள்ளுபடியாக ரூபாய் 37 ஆயிரத்து 500 அளிக்கப்பட்டுள்ளது. 

அதாவது, ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 10 ஆயிரமும், மற்ற தள்ளுபடியாக ரூபாய் 27 ஆயிரத்து 500 என மொத்தமாக ரூபாய் 37 ஆயிரத்து 500 அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ரூபாய் 4 லட்சத்திற்கும் குறைவான விலையில் இந்த Maruti S-Presso காரை வாங்கலாம். இதனால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Continues below advertisement

இஎம்ஐ தள்ளுபடி:

இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 4 லட்சத்து 18 ஆயிரம். தள்ளுபடி காரணமாக இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 3 லட்சத்து 80 ஆயிரத்து 500 ஆக இந்த மாதம் மட்டும் உள்ளது. இந்த காரில் மொத்தம் 8 வேரியண்ட் உள்ளது. இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 6 லட்சத்து 24 ஆயிரம் ஆகும்.

இந்த காரை மாதந்தோறும் தவணை முறையில் வாங்க ரூபாய் 6 ஆயிரத்து 690 இஎம்ஐ - செலுத்தியும் ( 5 ஆண்டுகளுக்கு) வாங்கலாம். நெருக்கடியான நகர்ப்புற போக்குவரத்தில் சிரமமின்றி செல்ல இந்த கார் ஏதுவானதாக உள்ளது. இந்த கார் 1.0 லிட்டர் பெட்ரோல் டேங்கர் கொண்டது.

மைலேஜ்:

இந்த காரில் 998 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 66 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 89 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 25.3 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இந்த காரில் ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவல் வேரியண்ட்கள் உள்ளது. 

இந்த கார் நெருக்கடியான போக்குவரத்துகளில், குறுகலான சாலைகளில் செல்ல ஏதுவானதாக இருக்கிறது. அதேசமயம், நெடுந்தூர பயணங்களுக்கு இந்த காரில் செல்வது சற்று அசெளகரியத்தை ஏற்படுத்துகிறது. 7 இன்ச் ஸ்மார்ட்ப்ளே டச் ஸ்கிரீன் உள்ளது.

இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி, இஎஸ்பி மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் வசதி கொண்டது. பார்க்கிங் சென்சார், ஹை ஸ்பீட் அலர்ட், ஆட்டோ டோர் லாக் வசதிகள் உள்ளது. இந்த கார் மாருதி ஆல்டோ, செலிரியோ, வேகன் ஆர், கிவிட் போன்ற கார்களுக்கு போட்டியாக உள்ளது. இந்த கார் சிவப்பு, ஆரஞ்ச், நீலம், சாம்பல் உள்பட 7 வண்ணங்களில் உள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI