Hybrid Cars: மாருதி, மஹிந்த்ரா மற்றும் ஹுண்டாய் நிறுவனங்களின் புதிய ஹைப்ரிட் கார்கள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement


முன்னணி ப்ராண்ட்களின் ஹைப்ரிட் கார்கள்:


இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் முன்னணி நிறுவனங்கள், உள்நாட்டு சந்தைக்கான புதிய ஹைப்ரிட் கார்கள் மீது தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதில் மாருதி, மஹிந்த்ரா மற்றும் ஹுண்டாய் நிறுவனங்களும் அடங்கும். பல வலுவான ஹைப்ரிட் அம்சங்களை கொண்ட கார்களும் இந்த பட்டியலில் உள்ளன. இந்நிலையில் மாருதி, மஹிந்த்ரா மற்றும் ஹுண்டாய் நிறுவனங்கள் சார்பில், விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஹைப்ரிட் கார் மாடல்கள் குறித்த விவரங்களை இங்கே அறியலாம்.



மாருதி சுசூகி ஹைப்ரிட் கார்:


மாருதி சுசூகி நிறுவனம் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட HEV சீரிஸ் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை தயார்படுத்தி வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ள நிறுவனத்தின் முதல் கார் மாடல் என்ற பெருமையை ஃப்ரான்க்ஸ் பெற உள்ளது. இந்த காரின் சாலை பரிசோதனை படங்கள் ஏற்கனவே வெளியாகி, விரைவில் சந்தைக்கு வரவுள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, இதில் மிகவும் பரிட்சையமான 1.2 லிட்டர் Z12E பெட்ரோல் இன்ஜின் ஆனது, ஹைப்ரிட் அம்சங்களுடன் இடம்பெற உள்ளது.


தொடர்ச்சியாக, அடுத்த தலைமுறை பலேனோ கார் மாடலும் இந்த சீரிஸ் ஹைப்ரிட் சிஸ்டத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரானது 2026ம் ஆண்டு இறுதி அல்லது 2027ம் ஆண்டு தொடக்கத்தில் சந்தைப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஹைப்ரிட் தொழில்நுட்பமானது எரிபொருள் செயல்திறனை மேம்படுத்தி, லிட்டருக்கு சுமார் 30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.


இதுபோக, இந்த தொழில்நுட்பமானது ப்ரேஸ்ஸா கார் மாடலுக்கும் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. திருத்தப்பட்ட ஜிஎஸ்டி காரணமாக, காம்பேக்ட் எஸ்யுவிகள் ஆனது அதிகபட்ச வரி வரம்புக்குள் சென்றுள்ளன. இதன் மூலம் போட்டியாளர்களுடன் கொண்டிருத போட்டித்தன்மை மிக்க விலையை அது இழந்துள்ளது. இந்நிலையில், கலப்பின அமைப்புடன் இணைக்கப்பட்ட ப்ரேஸ்ஸாவிற்கு, போட்டியாளர்களுக்கு இணையாக விலை நிர்ணயம் செய்ய மாருதிக்கு உதவும்.


மஹிந்த்ரா ஹைப்ரிட் கார்


மஹிந்திரா நிறுவனம் தனது XUV3XO கார் மாடலுக்கான வலுவான ஹைப்ரிட் பவர்டிரெய்னை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. S226 என்ற கோட்நேமை கொண்ட இந்த பிராண்டின் முதல் ஹைப்ரிட் மாடல், இந்திய சந்தையில் 2026 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. XUV3XO ஹைப்ரிட், வலுவான ஹைப்ரிட் அமைப்புடன் இணைக்கப்பட்ட, நன்கு பரிட்சையமான 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்தும் என கூறப்படுகிறது. INGLO-அடிப்படையிலான BE 6 மற்றும் XEV 9e ஆகியவற்றிற்கான ஒரு ரேஞ்ச் நீட்டிக்கப்பட்ட ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களும் பரிசீலனையில் உள்ளன. தகவல்களின்படி, இந்த திட்டத்தின் தொழில்நுட்ப மேம்பாடு ஏற்கனவே தொடங்கிவிட்டது, மேலும் இது 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்தக் கூடும்.


ஹுண்டாய் ஹைப்ரிட் கார்


ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) அடுத்த தலைமுறை க்ரேட்டாவை 2027 ஆம் ஆண்டில் வலுவான ஹைப்ரிட் பவர்டிரெயினுடன் அறிமுகப்படுத்த உள்ளது. உள்நாட்டில் SX3 என்ற கோட்நேம் கொண்ட இந்த ஹைப்ரிட் அமைப்பு, மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்ட 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்தலாம். இந்திய சந்தையில் நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் மாடல் என்ற பெருமையை இது பெற உள்ளது. கூடுதலாக ஹுண்டாய் நிறுவனம் ஒரு புதிய ஹைப்ரிட் 7 சீட்டர் SUV யிலும் பணியாற்றி வருகிறது. இது 2027 இல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது புதிய தலைமுறை க்ரேட்டாவுடன் வலுவான ஹைப்ரிட் அமைப்பைப் பகிர்ந்து கொள்ளலாம், என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.


Car loan Information:

Calculate Car Loan EMI