Maruti Escudo SUV: மாருதியின் புதிய எஸ்குடோ எஸ்யுவியில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தொடர்பான தகவல்கள் எதிர்பார்ப்புகளை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
மாருதி எஸ்குடோ எஸ்யுவி - லெவல் 2 ADAS
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசூகியின் முற்றிலும் புதிய மிட்-சைஸ் எஸ்யுவி ஆன எஸ்குடோ, வரும் செப்டம்பர் 3ம் தேதி சந்தைப்படுத்தப்பட தயாராகி வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விலை நிர்ணயத்திற்கு முன்னதாகவே, இந்த கார் தொடர்பான பல தகவல்கள் தொடர்ந்து வெளிவண்ண வந்தம் உள்ளன. அதன்படி, தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, மாருதி நிறுவனத்தின் முதல் கார் மாடலாக எஸ்குடோவில் லெவல் 2 ADAS பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. இதன் போட்டியாளர்களாக கருதப்படும் ஹுண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ், டாடா கர்வ், ஹோண்டா எலிவேட் மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகிய கார் மாடல்களில் ஏற்கனவே லெவல் 2 ADAS இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுபோக, இந்த மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் மாருதியின் அரேனாவில் விற்பனை செய்யப்பட உள்ள முதல் காராகவும் எஸ்குடோ இருக்கப்போகிறது.
மாருதி எஸ்குடோ எஸ்யுவி - டால்பி சவுண்ட் சிஸ்டம்
கூடுதலாக எஸ்குடோவானது டால்பி அட்மாஸ் ஆடியோ டெக்னாலஜி மற்றும் பவர்ட் டெயில் கேட் அம்சங்களை பெறும், மாருதி நிறுவனத்தின் முதல் காராகவும் இருக்கும் என கூறப்படுகிறது. கிராண்ட் விட்டார கார் மாடலில் ஆல்-வீல் ட்ரைவ் அம்சத்தை பெறும் சூழலில், புதிய எஸ்குடோ 4 வீல் ட்ரைவ் அம்சத்தை பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், ப்ரீமியம் அம்சங்களானது டாப் எண்ட் வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ரியர் பார்கிங் சென்சார்கள், ISOFIX மவுண்ட்ஸ் இருக்கைகள், ரியர் ஏசி வெண்ட்கள், ஆட்டோமேடிக் ஏசி வெண்ட், கீலெஸ் எண்ட்ரி & கோ, எலெக்ட்ரிகல்லி அட்ஜெஸ்டபிள் விங் மிரர் உள்ளிட்ட அம்சங்கள் அனைத்து வேரியண்ட்களிலும் நிலையான அம்சங்களாக வழங்கப்பட உள்ளன.
மாருதி எஸ்குடோ எஸ்யுவி - எரிபொருள் ஆப்ஷன்கள்
புதிய எஸ்குடோவின் பவர்ட்ரெயின் ஆனது க்ராண்ட் விட்டாரா கார் மாடலில் இருந்து பகிரப்படுகிறது. அதன்படி, 103bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் K15C பெட்ரோல் மைல்ட் ஹைப்ரிட் மற்றும் 115bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் 3 சிலிண்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜினை பயன்படுத்த உள்ளது. மைல்ட் ஹைப்ரிட் அமைப்பானது 5 ஸ்பீட் மேனுவல் அல்லது 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸை கொண்டுள்ளது. அதேநேரம், வலுவான ஹைப்ரிட் அமைப்பானது eCVT கியர்பாக்ஸ் அமைப்பை பெறக்கூடும். சிறிய இடைவேளைக்குப் பிறகு இந்த காரின் சிஎன்ஜி எடிஷனும் சந்தைப்படுத்தப்படலாம்.
மாருதி எஸ்குடோ எஸ்யுவி - விலை விவரங்கள்
விலை நிர்ணயத்தை கருத்தில் கொண்டால் கிட்டத்தட்ட கிராண்ட் விட்டாராவிற்கு நிகரான விலை எஸ்குடோவிற்கு நிர்ணயிக்கப்படலாம். அந்த கார் தற்போது ரூ.11.42 லட்சத்தில் இருந்து ரூ.20.68 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சந்தைப்படுத்தப்பட்டதும் இது கடும் போட்டியை எதிர்கொள்ளும் என கருதப்படுகிறது.
ஆதிக்கம் செலுத்தும் மிட்சைஸ் எஸ்யுவிக்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2025ம் நிதியாண்டில் எஸ்யுவி செக்மெண்டில் 23 லட்சத்து 66 ஆயிரத்து 274 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. அதாவது உள்நாட்டு சந்தையில் ஒட்டுமொத்தமாக விற்பனையான கார்களில் எஸ்யுவிக்கள் மட்டுமே 54.34 சதவிகிதமாகும். அதிலும் குறிப்பாக எஸ்குடோ அறிமுகமாக உள்ள மிட்-சைஸ் எஸ்யுவிக்கள் மட்டுமே 6 லட்சத்து 9 ஆயிரத்து 516 யூனிட்கள் விற்பனையாக உள்ளன. இந்த பிரிவினாவது ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 871 யூனிட்கள் விற்பனை மூலம் க்ரேட்டாவால் வழிநடத்தப்படுகிறது.
எஸ்குடோ ஏன் பெஸ்ட்?
கிராண்ட் விட்டாரா மட்டுமின்றி மாருதியின் எஸ்யுவி போர்ட்ஃபோலியோவில் ப்ரேஸ்ஸா, ஃப்ரான்க்ஸ் மற்றும் ஜிம்னி ஆகிய கார் மாடல்களும் உள்ளன. மூன்றுமே சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யுவிக்கள் ஆகும். ப்ரேஸ்ஸா கார் மாடல் அரேனா டீலர்கள் மூலம் விற்பனை செய்யப்பட, ஃப்ரான்க்ஸ் மற்றும் ஜிம்னி கார்கள் நெக்ஸா டீலர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது. எஸ்குடோவானது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்படுத்தப்பட்டு அரேனாவில் விற்பனை செய்யப்படும் கார் மாடலாக இருக்கும். இதே தளத்தில் தான் டிசைர் சப்4 மீட்டர் காம்பேக்ட் செடான் மற்றும் ஸ்விஃப்ட் & ஹேட்ச்பேக் உள்ளிட்ட ஹேட்ச் பேக் போன்ற கார் மாடல்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
Car loan Information:
Calculate Car Loan EMI