இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. மாருதி சுசுகி நிறுவனம் ஏராளமான கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வெற்றி கண்டுள்ளது. இந்தியாவில் மாருதி சுசுகியின் லட்சக்கணக்கான கார்கள் பயன்பாட்டில் உள்ளது.
Maruti Dzire:
மாருதி சுசுகி நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்புகளில் ஒன்று Dzire கார் ஆகும். மாருதி சுசுகியின் வெற்றிகரமான மற்றும் புகழ்பெற்ற படைப்பான சுவிஃப்ட் காரின் அப்டேட் வெர்சனாகவே இந்த Dzire கார் பார்க்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் கார் வாங்க விரும்பும் பலரின் கனவாக இந்த கார் உள்ளது. இந்த காரின் சிறப்பம்சம், விலை, மைலேஜ் குறித்து கீழே காணலாம்.
விலை என்ன?
இது செடான் ரக கார் ஆகும். 5 ஸ்டார் பாதுகாப்பு தரக்குறியீடு பெற்ற கார் இதுவாகும். இந்த காரின் தொடக்க விலை ( ஆன் ரோட்) ரூபாய் 7.51 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ( ஆன் ரோட்) விலை ரூபாய் 11.11 லட்சம் ஆகும். இந்த காரில் மொத்தம் 9 வேரியண்ட் உள்ளது.
மைலேஜ் எப்படி?
1.2 லிட்டர் எஞ்ஜின் உள்ளது. இந்த எஞ்ஜின் 1197 சிசி திறன் கொண்ட கார் ஆகும். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது ஆகும். இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக்கில் இயங்கும் ஆற்றல் கொண்டது. மேனுவல் கார் 24.79 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. ஆட்டோமெட்டிக் கார் 25.71 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 69 பிஎச்பி மற்றும் 80 பிஎச்பி திறன் கொண்ட வேரியண்ட் உள்ளது.
ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு இந்த காரின் விலை ரூபாய் 87 ஆயிரத்து 700 வரை குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் இந்தியாவில் 16,509 Maruti Dzire கார்கள் விற்பனையானது. 360 டிகிரி கேமரா உள்ளது.
பாதுகாப்பு வசதிகள்:
இந்த காரில் உள்ள இருக்கைகள் ஓட்டுநருக்கும், பயணிக்கும் உடல் வலி ஏற்படாத வகையில் மிருதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள் இந்த காரில் உள்ளது. 101.8 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. மேனுவல் காரில் 5 கியர்கள் உள்ளது. சன்ரூஃப் வசதி கொண்ட காரும் உள்ளது. ஏபிஎஸ் ப்ரேக் வசதியும் உள்ளது. 15 இன்ச் அலாய் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது.
பட்ஜெட் விலையில் அனைத்து வசதிகளும் நிறைந்த கார் வாங்க வேண்டும் என்று விரும்புபவர்களின் முதன்மைத் தேர்வாக இந்த Maruti Dzire கார் உள்ளது.
இந்த காரில் எந்த வேரியண்ட் என்ன விலை?
Dzire LXi - ரூ.7.51 லட்சம்
Dzire VXi - ரூ.8.58 லட்சம்
Dzire VXi AMT - ரூ.9.11 லட்சம்
Dzire VXi CNG - ரூ.9.62 லட்சம்
Dzire ZXi - ரூ.9.78 லட்சம்
Dzire ZXi AMT - ரூ.10.32 லட்சம்
Dzire ZXi Plus - ரூ.10.58 லட்சம்
Dzire ZXi CNG - ரூ.10.80 லட்சம்
Dzire ZXi Plus AMT - ரூ.11.11 லட்சம்
Car loan Information:
Calculate Car Loan EMI