புதிய மாருதி செலிரியோ இன்னும் சில நாள்களில் வெளியிடப்படவுள்ளது. எனினும் நாடு முழுவதும் உள்ள மாருதி நிறுவனத்தின் டீலர்களிடம் கார்கள் அனுப்பப்பட்டிருப்பதால், ஆங்காங்கே இருந்து படங்கள் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. புதிய செலிரியோ மாடலில் சற்றே குறைந்த அம்சங்களைக் கொண்டிருப்பதாக இது சொல்லப்படுவதாலும் இதன் படங்கள் அதிகமாகப் பகிரப்படுகின்றன. 


`வேகன் ஆர்’ மாடல் கார்களுடன் இந்த மாடல் ஒப்பிடப்படுகிறது, ஹேட்ச்பேக் வகை காரான இது எதிர்பார்த்ததைவிட சற்றே நீளமாகவும், அகலமாகவும் இருப்பதாகப் படங்களின் மூலம் தெரிய வருகிறது. மேலும் இதன் முன்புறம் க்ரில் புதிதாக சேர்க்கப்பட்டிருப்பதோடு, இதன் முன்பக்க விளக்குகள் சற்றே பெரியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த மாடலின் கூரையின் வகையும் மாற்றப்பட்டுள்ளது. பின்பக்க டெயில் லேம்ப்களும் முன்பக்க விளக்குகளைப் போலவே சற்றே பெரிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் இருந்து பார்க்கும் போது, மாருதி செலிரியோ உயர் ரக கார்களைப் போன்ற தோற்றத்தைத் தருவதாக இருக்கின்றன. அதன் இண்டீரியர் டிசைனை இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது. மேலும் இந்த சீரிஸில் அதிக விலை கொண்ட மாடல்களுக்கு 14 இன்ச் அளவு கொண்ட அல்லாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 



கறுப்பு நிற வேரியண்ட்டில் வெள்ளி நிறத்திலான பிற டிசைன்கள் சேர்க்கப்பட்டுள்ளதோடு ஓட்டுநரின் டயல்களில் சிறியதாக டிஜிட்டல் ஸ்க்ரீன் இதில் பொருத்தப்பட்டுள்ளது. அதிக விலை கொண்ட மாடல்களில் இதே ஸ்க்ரீனில் `டச் ஸ்க்ரீன்’ அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. எனினும் ஸ்டீயரிங்கில் சில பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிக விலை கொண்ட மாடல்களில் ப்ளூடூத், குரல் வழியாக உத்தரவு மேற்கொள்வது, பின்பக்கம் பார்க்கும் கேமரா டிஸ்ப்ளே ஆகியவை டிஜிட்டல் ஸ்க்ரீனில் சேர்க்கப்பட்டுள்ளன. முந்தைய மாடல்களில் இருந்து புதிய செலிரியோ மாடலில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களில் முக்கியமானது, இதில் கார் முழுவதும் இட வசதி அதிகரிக்கப்பட்டிருப்பதோடு, பின்பக்கம் ஹேட்பேக் பகுதியிலும் அதிக இட வசதி செய்யப்பட்டுள்ளது. 



புதிய `வேகர் ஆர்’ மாடலைப் போலவே இந்தப் புதிய மாருதி செலிரியோ மாடலிலும் அதிக ஆற்றல் கொண்ட புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் சேர்க்கப்பட்டுள்ளதோடு, ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. குறைந்த விலை கொண்ட மாடல்களில் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இருந்தாலும், அதிலும் இதனைப் போலவே 5 கியர்களைக் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் 4.6 லட்சம் முதல் 6 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்படலாம் எனவும் தெரிய வந்துள்ளது. எனினும் இந்த விலைகளை விட சற்றே அதிக விலையும் நிர்ணயிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI