இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக திகழ்வது மாருதி சுசுகி நிறுவனம். பட்ஜெட் கார்களிலும் ஹேட்ச்பேக் ரகத்திலும் ஏராளமான கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய பெருமைக்குச் சொந்தமான நிறுவனம் மாருதி சுசுகி.

Continues below advertisement

Maruti Baleno:

அவர்களின் வெற்றிகரமான படைப்பு Maruti Baleno ஆகும். ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரான இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வசதியில் ஓடும் ஆற்றல் கொண்டது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 

நகர்ப்புறங்களிலும் நெடுஞ்சாலைகளிலும் ஓட்டுவதற்கு மிகவும் வசதிகரமான இந்த காரின் ஆரம்ப விலை ரூபாய் 7.20 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 10.86 லட்சம் ஆகும். இந்த காரில் மொத்தம் 9 வேரியண்ட்கள் உள்ளது.

Continues below advertisement

மைலேஜ்:

1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 22.35 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 88 பிஎச்பி குதிரை திறன் கொண்டது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வெர்சனிலும் இந்த கார் உள்ளது. 

வேரியண்ட்கள்:

Baleno Sigma MT - ரூ.Rs. 7.20 Lakh

Baleno Delta MT - ரூ.8.14 லட்சம்

Baleno Delta AGS - ரூ.8.73 லட்சம்

Baleno Zeta MT - ரூ.9.19 லட்சம்

Baleno Delta MT CNG - ரூ.9.19 லட்சம்

Baleno Zeta AGS - ரூ.9.81 லட்சம்

Baleno Zeta MT CNG - ரூ.10.27 லட்சம்

Baleno Alpha MT - ரூ.10.27 லட்சம்

Baleno Alpha AGS - ரூ.10.86 லட்சம்

6 ஏர்பேக்குகள்:

ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு இந்த காரின் விலை ரூபாய் 86 ஆயிரத்து 100 வரை குறைக்கப்பட்டு்ள்ளது. இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் உள்ளது. எஞ்ஜின் சுமூகமாக உள்ளது. 5 சீட்டர்களை கொண்ட இந்த கார் ஒரு நடுத்தர குடும்பம் செல்வதற்கு ஏற்ற காராக உள்ளது. ஹேட்ச்பேக்கிலே ப்ரமீயம் ஹேட்ச்பேக் ரகமாக இந்த கார் இருப்பதால் இதன் தோற்றம் அனைவரையும் வசீகரிக்கிறது. 

சிறப்பம்சங்கள்:

இந்த கார் 88.5 பிஎச்பி குதிரை ஆற்றல் கொண்டது. 113 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 5 கியர்களை கொண்டது. நெடுஞ்சாலைகளிலும், போக்குவரத்து நெருக்கடியான சாலைகளிலும் கியர்களை மாற்ற ஏற்ற கார் Baleno. 

ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்குகள், க்ரூஸ் கன்ட்ரோல், ஹெட் அப் டிஸ்ப்ளே, ஏ டைப்  - சி டைப் சார்ஜர்கள் உள்ளது. இதன் முன் இருக்கைகள் நீண்ட தூரம் பயணிக்க உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே டச் ஸ்கிரீன் ஆகும். 318 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. ப்ரேக் அசிஸ்ட், பார்க்கிங் சென்சார், 360 டிகிரி கேமரா, கேமரா, கர்டன் ஏர்பேக், பனி நேர விளக்குகள் உள்ளது. அலாய் சக்கரங்கள் உள்ளது. கருப்பு, வெள்ளி, நீல நிறங்களில் இந்த கார் உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI