அபுதாபியில் நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் (IPL) மினி ஏலத்தில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் ₹25.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2024 இல் அவரது சக வீரர் மிட்செல் ஸ்டார்க்கின் முந்தைய சாதனையான ₹24.75 கோடியை முறியடித்தார்.

Continues below advertisement

மினி-ஏலங்களுக்கான BCCI இன் அதிகபட்ச கட்டண விதியின் கீழ், கிரீனின் சம்பளம் ₹18 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள ₹7.20 கோடி BCCI இன் பிளேயர் நல நிதிக்கு செல்லும்.

பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அதிரடி காட்டும் கிரீனின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த விலை பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

IPL ஏல வரலாற்றில் அதிக விலை கொண்ட முதல் ஐந்து வீரர்கள்

1. ரிஷப் பந்த் – ₹27.00 கோடி, அணி: LSG, நிகழ்வு: மெகா-ஏலம் 2025

2. ஸ்ரேயாஸ் ஐயர் – ₹26.75 கோடி, அணி: PBKS, நிகழ்வு: மெகா-ஏலம் 2025

3. கேமரூன் கிரீன் – ₹25.20 கோடி, அணி: KKR, நிகழ்வு: மினி-ஏலம் 2026

4. மிட்செல் ஸ்டார்க் – ₹24.75 கோடி, அணி: KKR, நிகழ்வு: மினி-ஏலம் 2024

5. வெங்கடேஷ் ஐயர் – ₹23.75 கோடி, அணி: KKR, நிகழ்வு: மெகா-ஏலம் 2025

இந்த முதல் 5 லிஸ்டில்  ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற இந்திய வீரர்கள் கேப்டன்சி மற்றும் பேட்டிங் ஆகியவற்றால் கடந்த 2025 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போக

ஐபிஎல் ஏலப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்த கேமரூன் கிரீன், வெங்கடேஷ் ஐயரை (₹23.75 கோடி) முதல் மூன்று இடங்களுக்குள் இருந்து வெளியேற்றியுள்ளார். இந்திய வீரர்களுக்கு எப்போதும் அதிக மதிப்பு இருந்தாலும், கேமரூன் கிரீன் போன்ற உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் ஒரு அணியின் வெற்றிக்கு எவ்வளவு அவசியம் என்பதை இது காட்டுகிறது. சாம்பியன் பட்டம் வெல்ல நினைக்கும் அணிகளுக்கு இத்தகைய வீரர்கள் ஒரு தவிர்க்க முடியாத முதலீடாக மாறியுள்ளனர்