குடும்பங்கள் கொண்டாடும் மாருதி சுசூகி ஆல்ட்டோவின் 'அடுத்த தலைமுறை' அடுத்த மாதம் அறிமுகமாகிறது.
எப்படி இருக்கிறது புதிய ஆல்ட்டோ:
ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய தலைமுறை மாருதி சுசூகி ஆல்ட்டோ தீவிரமாக டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. கிடைக்கப்பெற்ற ஸ்பை போட்டோக்களை வைத்து புதிய ஆல்ட்டோவில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை பார்ப்போம்.
தற்போது விற்பனையில் உள்ள மாடலுடன் ஒப்பிடும்போது புதிய ஆல்ட்டோவின் டிசைன் முற்றிலும் புதிது. இதன் பின்பக்க டிசைன் மட்டும் மாருதியின் மற்றொரு ஹேட்ச்பேக் காரான செலிரியோவை நினைவுபடுத்துகிறது.
புதிய ஆல்ட்டோ வழக்கம்போல 800சிசி மற்றும் 1.0 லிட்டர் எஞ்சின்களுடன் விற்பனைக்கு வருமா அல்லது வெறும் 800சிசி எஞ்சினுடம் மட்டும் விற்பனைக்கு வருமா என்ற தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அறிமுகத்துக்கு பிறகு விரைவில் சிஎன்ஜி எஞ்சின் வேரியண்ட்டும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாத தொடக்கத்தில் அறிமுகமாக இருக்கும் இதன் முன் பதிவுகள் அடுத்த மாத இறுதியில் ஆரம்பிக்கும்.
ஆல்ட்டோவின் உள்ளே நிகழ்ந்துள்ள மாற்றங்கள்:
இண்ட்டீரியரை பொறுத்தவரை ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளேவுடன் கூடிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கலாம். காரின் உள்ளிருந்து கொண்டே அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்படியான சைட் வியூவ் கண்ணாடிகள் (electrically foldable and adjustable ORVM), டிஜிட்டல் MID போன்ற அம்சங்கள் டாப் வேரியண்ட்டில் கிடைக்கப்பெறும்!
பாதுகாப்பு அம்சங்கள்:
தற்போது விற்பனையில் இருக்கும் ஆல்ட்டோவை போலவே EBD உடன் கூடிய ABS, டிரைவர் சைட் மற்றும் பாசஞ்சர் சைட் ஏர்பேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் எல்லா வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாகவே வரும் என நம்பலாம். மாருதி சுசூகியின் Heartect platform-ல் தயாரிக்கப்படும் புதிய தலைமுறை ஆல்ட்டோ பில்ட் க்வாலிட்டியில் தற்போது விற்பனையில் உள்ள ஆல்ட்டோவை விட மேம்பட்டிருக்கும் என தெரிகிறது.
விலையை பொறுத்தவரை 3.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற துவக்க விலையில் விற்பனைக்கு வரும் இதன் சென்னை ஆன்ரோட் விலை 4.8 லட்சம் இருக்கலாம். ரொனோ க்விட், டட்சன் ரெடிகோ போன்ற போட்டியாளர்களை இந்த புதிய தலைமுறை மாருதி சுசூகி ஆல்ட்டோ சமாளிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Car loan Information:
Calculate Car Loan EMI