Mahindra XUV Discount: மஹிந்திரா நிறுவனத்தின் XUV கார் மாடல்களுக்கு, பிப்ரவரி மாதத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


மஹிந்திரா XUV மாடல்கள்:


மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட் இன்னும் ஒரு சில நாட்களில் அறிமுகமாக உள்ள நிலையில் , டீலர்கள் முடிந்தவரை பழைய மாடல்களின் யூனிட்களை காலி செய்ய விரும்புகிறார்கள். இதற்காக, மஹிந்திரா ஷோரூம்கள் 2023 மற்றும் 2024 மாடல் XUV300s மீது பெரும் தள்ளுபடிகள் மற்றும் பலன்களை அறிவித்துள்ளன. அதில் ரொக்க தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடிகள், உத்தியோகபூர்வ பாகங்கள் மற்றும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் போன்றவை அடங்கும். மந்தமாக விற்பனையாகும் XUV400 EVயின் குறிப்பிடத்தக்க 2023 மாடல் யூனிட்கள் டீலர்களின் கைவசம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் அந்த மாடல் மீதான மகத்தான தள்ளுபடிகள் தொடர்வதோடு, புதிய பலன்களும் வழங்கப்பட்டுள்ளன.


பிப்ரவரி 2024 இல் மஹிந்திரா XUV300 தள்ளுபடிகள்:


 Kia Sonet மற்றும் Tata Nexon ஆகிய மாடல்களுக்கு போட்டியான மஹிந்திராவின் XUV300 மாடலுக்கு, உற்பத்தி ஆண்டு மற்றும் பவர்டிரெயின் ஆகியவற்றைப் பொறுத்து இந்த மாதம் ரூ.1.82 லட்சம் வரை தள்ளுபடிகள் மற்றும் நன்மைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது ரூ. 10,000 உயர்த்தப்பட்டுள்ளது. டாப்-ஸ்பெக் W8 வடிவத்தில் விற்கப்படாத 2023 XUV300 டீசல் வேரியண்ட் அதிகபட்ச நன்மைகளைப் பெறுகின்றன. இந்த வடிவத்தில் உள்ள 2024 மாடல்கள் ரூ.1.57 லட்சம் வரை தள்ளுபடி பெறுகின்றன.  MY23 XUV300 TGDi மாடல்கள் மற்றும் பெட்ரோல் W8 (O) டிரிம்கள் முறையே ரூ. 1.75 லட்சம் மற்றும் ரூ. 1.73 லட்சம் வரை தள்ளுபடியைப் பெறுகின்றன. அதே நேரத்தில் அவற்றின் MY24 கார்கள் முறையே ரூ. 1.5 லட்சம் மற்றும் ரூ. 1.48 லட்சம் நன்மைகளைப் பெறுகின்றன. இதனிடையே, W6 டிரிம்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பவர்டிரெய்னைப் பொறுத்து ரூ 94,000 முதல் ரூ 1.33 லட்சம் வரை தள்ளுபடியைக் கொண்டுள்ளன. W4 மற்றும் W2 வகைகள் முறையே ரூ 51,935-73,000 மற்றும் ரூ 45,000 மதிப்பிலான சலுகைகளை கொண்டுள்ளன. 


பிப்ரவரி 2024 இல் மஹிந்திரா XUV400 தள்ளுபடிகள்:


XUV400 மீதான மகத்தான தள்ளுபடிகள் இந்த மாதமும் தொடர்கின்றன. அதோடு டிசம்பர் மாதம் வழங்கப்பட்ட ரூ. 4.2 லட்சம் மதிப்பிலான ஆண்டு இறுதிப் பலன்களை விட கூடுதல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டின் XUV400 EC 34.5kWh பேட்டரி மற்றும் 3.2kW சார்ஜர், EC 7.2kW சார்ஜர் (ESC இல்லாமல்) மற்றும் ரேஞ்ச்-டாப்பிங் EL (39.4kWh பேட்டரி, 7.2kW மற்றும் ESC இல்லாமல்) ஆகிய மாடல்களை வாங்குபவர்களுக்கு ரூ.4.4 லட்சம் வரை சலுகைகள் கிடைக்கும்.  ESC உடன் கூடிய XUV400 EL டிரிம் இந்த மாதம் ரூ.3.4 லட்சம் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், 2024 மாடல்கள் எக்ஸ்சேஞ்ச் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் மூலம் வெறும் ரூ.40,000 வரை தான் சலுகைகளை பெறுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI