Mahindra XEV 9S Vs XEV 9e: மஹிந்த்ராவின் XEV 9S மற்றும் XEV 9e கார் மாடல்களில் எது, விலைக்கு நிகரான மதிப்பினை கொண்டுள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த்ராவின் XEV 9S Vs XEV 9e:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவி பிரிவில் மஹிந்த்ரா நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மின்சார பிரிவில் ப்ராண்டின் BE 6 மற்றும் XEV 9e கார் மாடல்கள் நல்ல விற்பனை செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக XEV 9e கார் மாடல் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து பிரதான மாடலாக உள்ளது. இந்த கார் தயாரிக்கப்பட்ட அதே INGLO ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட, மஹிந்த்ராவின் மின்சார வாகனமாக அண்மையில் XEV 9S அறிமுகப்படுத்தப்பட்டது. குறுகிய காலகட்டத்திலேயே இந்த காரானது சந்தையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், XEV 9S மற்றும் XEV 9e மின்சார கார்களில் எது விலைக்கு நிகரான மதிப்பினை கொண்டுள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
XEV 9S Vs XEV 9e - வடிவமைப்பு & அம்சங்கள்:
ஆக்ரோஷமான விலை நிர்ணயம் மற்றும் பொசிஷனிங் காரணமாக, கூபே போன்ற 9e ஐ விட 9S மிகவும் பிரதான மின்சார காராக உருவெடுத்துள்ளது. மேலும் தோற்றத்தின் அடிப்படையில் பாதுகாபான மற்றும் அழகான 9S ஐ காட்டிலும், 9E ரேடிகல் லுக்கை கொண்டுள்ளது. உட்புறத்தை ஆராய்ந்தால், அடிப்படையிலான டிசைன் என்பது ஸ்டியரிங் வீல், 3 ஸ்க்ரீன் செட்-அப்களை உள்ளடக்கி ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால், 9S காரானது இரண்டாவது வரிசை இருக்கையில், வெண்டிலேடட் சீட்ஸ் மற்றும் பவர்ட் பாஸ் மோட் ஆகியவற்றை உள்ளடக்கிய கூடுதல் அம்ச பட்டியலை பெறுகிறது. 9E கார் மாடலிலும் பவர்ட் டெயில்கேட் உள்ளிட்ட சில மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் உள்ளன.
XEV 9S Vs XEV 9e - பேட்டரி விவரங்கள்
பேட்டரி விவரங்களை கருத்தில் கொண்டால் XEV 9S மற்றும் XEV 9e ஆகிய இரண்டு கார் மாடல்களிலும், சிங்கிள் மோட்டாருடன் கூடிய 59kwh மற்றும் 79kwh ஆகிய இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம், 9S கார் மாடல் கூடுதலாக 70kwh பேட்டரி பேக்கையும் கொண்டுள்ளது. அதிகபட்சமாக XEV 9e மாடல் 656 கிலோ மீட்டரும், XEV 9S மாடல் 679 கிலோ மீட்டரும் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 9S அதிக ரேஞ்ச் வழங்கினாலும், வித்தியாசம் மிகவும் குறைவெ ஆகும்.
XEV 9S Vs XEV 9e - விலை விவரங்கள்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் XEV 9e கார் மாடலின் விலை ரூ.21.90 லட்சத்தில் தொடங்கி ரூ.31.25 லட்சம் வரை நீள்கிறது. XEV 9S கார் மாடலின் விலை ரூ.19.95 லட்சத்தில் தொடங்கி ரூ.29.45 லட்சம் வரை நீள்கிறது. இரண்டு கார்களுக்கும் இடையேயான தொடக்க விலையில் கிட்டத்தட்ட சுமார் ரூ.2 லட்சம் வரை வித்தியாசம் உள்ளது. வேரியண்ட்கள் அடிப்படையில் இந்த விலை வித்தியாசமானது அதிகரிக்கிறது.
XEV 9S Vs XEV 9e - எது பெஸ்ட்?
9E என்பது ஸ்போர்ட்டியர் மற்றும் அதிக பிரீமியம் என்பதை விவரங்கள் விளக்குகின்றன. அதே நேரத்தில் 9S மிகவும் நடைமுறைக்குரியது, சிறந்த மதிப்பைக் கொண்டிருப்பதுடன், ஓட்டுநர் சார்ந்த உரிமையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது. மஹிந்திராவின் விற்பனையை 9S விரிவுபடுத்தும் என்பதை சந்தைபோக்கு உணர்த்துகிறது. ஆக்ரோஷமான விலை நிர்ணயத்துடன் பெரிய SUV பிரிவில் நுழைந்துள்ள நிலையில், விலைகளின் அடிப்படையில் மிகச் சிறிய மின்சார கார்களுடனும் 9S கடுமையாக போட்டியிடுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI